டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை திருமணம் செய்ய விரும்புவதாக வாலிபர் கூறியதால்
பரபரப்பு ஏற்பட்டது. டில்லியில் லபன்கே பரின்டி என்ற திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க படத்தில் நடித்த நீல் நிதின் முகேஷ், தீபிகா படுகோனை ஆகியோர் வந்தனர். அப்போது தீபிகா படுகோனைவை நோக்கி வந்த வாலிபர் ஒருவர், தீபிகாவை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். ஆனால் தீபிகா, தான் இன்னும் திருமணத்திற்கு தயாராக இல்லை என பதிலளித்தார்.
ஆனால் சற்றும் மனம்தளராத இந்த வாலிபர் ஆனால் நான் உங்களை திருமணம் செய்ய தயாராக உள்ளேன். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று மண்டியிட்டு, கைகூப்பி கெஞ்சி கேட்டுக் கொண்டார்.
இதற்கு தீபிகா பதிலேதும் கூறாமல் சிரத்தவாறே அங்கிருந்து சென்றார். கடந்த சில வருடங்களுக்கு முன் வரை பாலிவுட் நடிர் ரண்பீர் கபூருடன் இணைத்து பேசப்பட்டார்.
தற்போது தீபிகா பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மகன் சித்தார்த்தாவுடன் இணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்.
Langganan:
Posting Komentar (Atom)
Tidak ada komentar:
Posting Komentar