Rabu, 29 September 2010

எந்திரன் இசை அனுபவம் பற்றி ஏ.ஆர்.ரகுமான்


இசைப்புயல் ரகுமான் அதிகம் பேசாதவர். தனது இசை பேசப்பட வேண்டும் என எதிர்பார்ப்பவர். ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக கருதி கடுமையாக
அனுக்ஹா, சிம்பு வானம் திரைப்பட லேட்டஸ்ட் ஹாட்   Photos
 உழைப்பவர். அதனால்தான் இரட்டை ஆஸ்கர் விருதுகளை வென்றெடுக்க முடிந்தது. அப்படிப்பட்ட செயல்வீரர்களுக்கு பேச நேரம் கிடைக்காதுதான். ஆனாலும், ரஜினியும் ஷங்கரும் எந்திரன் பட தயாரிப்பில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டதை சுட்டிக் காட்டி, அடுத்ததாக உங்கள் பேட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என சொன்னதும் கூச்சத்துடன் புன்னகைத்தார். அப்போது சிதறிய முத்துக்கள்..  

எந்திரன் படத்துல எல்லாமே பிரமாண்டமா இருக்கும்னு தெரிஞ்சுகிட்டேன். பாடல்கள் ஒவ்வொன்னையும் ஒரு வகையான உணர்வோட படமாக்கி இருக்கார் ஷங்கர். படத்தோட மையக் கருத்துக்கு பின்னணி இசையும் பொருத்தமா அமையணும்னு அவர் எதிர்பார்த்தார். படத்துல ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிகள் நிறைய இருக்குறதனால ரசிகர்கள் ஒன்றி போயிடுவாங்க.. அந்த இடத்துல சவுண்ட் பெருசா இருந்தாதான் கவனிப்பாங்க.. ஸோ, பெருசா செய்யணும்னு ஆசைப்பட்டோம்.

அதனால என்ன ஆச்சுன்னா, லண்டன் சென்னை மும்பைனு மூணு இடத்துல பின்னணி இசை சேக்குற மாதிரி ஆயிருச்சு.. அதுக்கு ரொம்ப செலவாகும்னு சொன்னோம். சன் பிக்சர்ஸ் தயங்காம அதுக்கு ஏற்பாடு பண்ணினாங்க.. அதுக்கு நன்றி சொல்லணும். லண்டன்ல பாத்தீங்கன்னா 100 இசைக் கலைஞர்களை வச்சு ரெக்கார்ட் பண்ணிருக்கோம். அங்க டோல் பவுண்டேஷன்னு சொல்லிட்டு ஃபேமஸான ஒரு டோல் குரூப் இருக்கு. அவங்க இந்த படத்துக்கு வேலை செஞ்சுருக்காங்க.

ரொம்ப தள்ளிப்போக கூடாது, படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணணும்னு சொன்னதால கடுமையா வேலை செஞ்சிருக்கோம்.. சீக்கிரமாவும் முடியணும் ரொம்ப நல்லாவும் வரணும்னா அவ்ளோ உழைச்சாதான முடியும்.. அந்த வேலை நடந்தப்ப ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் தூங்கினோம்னா நீங்களே பார்த்துக்குங்க.. ‘சிவாஜி‘ படம் பண்ணும்போது செக்கஸ்லோவியாவுல உள்ள பிராக்ல ரெக்கார்ட் பண்ணினோம். அங்க சிம்ஃபனி இசைக் கலைஞர்கள் கிடைப்பாங்க. ஆனா, எந்திரன்ல இன்னும் ஒரு ஸ்டெப் மேல போய், பிராஸ்ங்கற இசைக்குழுவை பயன்படுத்தியிருக்கோம். பாடல்கள் எல்லாமே பிரமாண்டமா பிரமாதமா வந்திருக்கு. லண்டன்ல இருக்கிற பிராஸ் செக்ஷன், என்னோட ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப் இவங்கல்லாம் நிறைய ஹெல்ப் பண்ணிருக்காங்க. இதுதவிர நிறைய மாடர்ன் டெக்சர்ஸ் மியூசிக் பண்ணியிருக்கோம். நீங்க எல்லாருமே ரொம்ப ரசிப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு..




The Advertising Network

Tidak ada komentar:

Posting Komentar