திருமணம் பற்றி இப்போது யோசிக்கவில்லை என்றார் பாவனா. அவர் மேலும் கூறியதாவது: தமிழில் ‘அசல்’ ரிலீசுக்குப் பிறகு சில படங்களில் அனுக்ஹா, சிம்பு வானம் திரைப்பட லேட்டஸ்ட் ஹாட் Photos நடிக்க கேட்டார்கள். கதை கேட்டேன். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாததால் மறுத்து விட்டேன். கன்னடத்தில் எனது முதல் படம், ‘ஜாக்கி’. புனித் ராஜ்குமாருக்கு ஜோடி. அடுத்த மாதம் ரிலீஸ். அடுத்த படம், ‘விஷ்ணுவர்த்தனா’. இதில் சுதீப் ஜோடி. நவம்பரில் ஷூட்டிங் தொடங்குகிறது. தமிழ், தெலுங்கு மாதிரி கன்னடம் சுலபம் இல்லை. பேச, புரிந்துகொள்ள கஷ்டமாக இருந்தது. இதனால், படத்தில் என் சம்பந்தப்பட்ட வசனங்களை ஆங்கிலத்தில் எழுதினார்கள். அதை வைத்து நடித்தேன். மலையாளத்தில் ஷாஃபி டைரக்ஷனில், திலீப் ஜோடியாக நடிக்கிறேன். ஜெயராம் ஜோடியாக ‘குடும்பஸ்ரீ டிராவல்ஸ்’ படத்தில் நடிக்கிறேன். இந்த ஷூட்டிங் கொச்சியில் நடந்தது. இவ்விரு படங்களும் டிசம்பரில் முடிந்து விடும். பிறகு தமிழில் நடிக்க உள்ளேன். கேரளாவிலுள்ள சில ஹீரோயின்களுக்கு திருமணமாகி விட்டது என்பதால், நானும் திருமணம் செய்துகொள்ள முடியாது. சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். இரு வருடங்களுக்கு பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன். |
Tidak ada komentar:
Posting Komentar