Kamis, 14 Oktober 2010

அசின் பெயரில் இன்டர்நெட்டில் மோசடி


இந்தி, தமிழ் படங்களில் பிசியாக இருக்கிறார் அசின். இந்தி
கஜினி மூலம் உலகமெங்கும் ரசிகர்கள் கிடைத்துள்ளனர். சல்மான்கானுடன் நடிக்கும் “ரெடி” படம் ரிலீசுக்கு தயாராகிறது.
விஜய் ஜோடி யாக நடிக்கும் “காவலன்” படப்பிடிப்பும் இறுதிகட்டத் தில் உள்ளது.
இந்த நிலையில் அசின் பெயரில் இன்டர்நெட்டில் போலி வெப்சைட்கள் துவங்கி மோசடி நடக்கும் தகவல் அம்பலமாகியுள்ளது.
மர்ம கும்பல் அசின் பெயரில் துவக்கிய வெப்சைட் கள் மூலம் ரசிகர்களிடம் தொடர்பு வைத்து உரையாடி வருகின்றனர். அதில் அசின் படங்களையும் போட்டு வைத்துள்ளனர். ரசிகர்களும் அவற்றை உண்மை என்று நம்பி கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.
இந்த மோசடி அசினுக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தார். ரசிகர்கள் போலியை உண்மை என்று நம்பி ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறிய தாவது:-
டுவிட்டர் இணைய தளத்தில் நான் இல்லை. ஆனால் எனது பெயரை போலியாக சிலர் அதில் உருவாக்கியுள்ளனர். ரசிகர் கள் அதை உண்மை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது நான் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் டுவிட்டரிலோ, ஆர்காட்டிலோ அல்லது வேறு எந்த வெப்சைட்டிலும் இல்லை. எதிர்காலத்தில் ஒருவேளை இதில் வரலாம். ஆனால் இப்போது அவற்றில் இல்லை. இணைய தளங்களில் எனது பெயரை யாரும் பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அசின் கூறி யள்ளார்.

Tidak ada komentar:

Posting Komentar