Kamis, 14 Oktober 2010
நமீதாவின் ஐ லவ் யூ!
தலைப்பை படித்ததும் நமீதாவிடம் யார் ஐ லவ் யூ சொன்னார்கள் என்று கேட்கத் தோன்றுகிறதா? உண்மையில் யாரும் நமீயிடம் அப்படி
சொல்லவில்லை. அவர் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்புதான் அது.
மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்களையும் விட்டு வைக்காமல் கவர்ச்சியில் திக்குமுக்காட வைத்து வரும் நமீதாவுக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.
அம்மணியும் டயட்டில் இருந்து உடலை டைட் ஆக்கியும் பலனில்லை. இதனால் கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நமீ. அவர் தற்போது கமிட் ஆகியிருக்கும் புதிய படம் நமீதா ஐ லவ் யூ. டைரக்டர் ஜெயசிம்மா ரெட்டி இயக்கும் இப்படத்தில் நமீக்கு கிளாமர் நாயகி வேடம் கிடையாதாம். ஆசிரியர் வேடமாம். அதுவும் மாணவர்களை சீர்திருத்தும் ஆசிரியர் வேடம்.
நமீதா டீச்சர் என்றால் மாணவர்கள் சும்மா இருப்பார்களா? நமீயை காதலிக்க சில மாணவர்கள் போட்டி போடுகிறார்கள். ஐ லவ் யூ சொல்கிறார்கள். இறுதியில் நமீ அந்த மாணவர்களை எப்படி சீர்திருத்துகிறார் என்பதுதான் கதையாம்.
இந்த படத்தை தொடர்ந்து டைரக்டர் சாய் பிரகாஷ் இயக்கத்தில் மற்றுமொரு கன்னட படத்தில் நடிக்கப் போகிறாராம் நமீ.
Langganan:
Posting Komentar (Atom)
Tidak ada komentar:
Posting Komentar