Tampilkan postingan dengan label பிரகாஷ்ராஜ். Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label பிரகாஷ்ராஜ். Tampilkan semua postingan
Sabtu, 25 September 2010
பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் மீது மன்சூர் அலிகான் தாக்கு
பிரபுதேவா நயன்தாராவை விரைவில் திருமணம் செய்வேன் என்று அறிவித்து உள்ளார். இவருக்கு மனைவி ரம்லத்தும் இரு மகன்களும் உள்ளனர்.
இதனை நடிகர் மன்சூர் அலிகான் விமர்சித்தார். இதுபற்றி அவர் கூறும்போது,
மனைவிகளை ஒதுக்குவது இப்போது பேஷனாகிவிட்டது. சசி தரூர் இரண்டாம் திருமணம் செய்தார். அவரிடம் இருந்து தொடங்கி பிரகாஷ்ராஜ், பிரபுதேவா வரை வந்து நிற்கிறது.
கணவர்கள், மனைவிகளை நேசிக்க வேண்டும். பிரபலமானவர்களின் நடவடிக்கைகள் இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்துவது போல் ஆகி விடக்கூடாது.
இன்றைய சமூகத்தில் இளம் தலைமுறையினர் பலர் மதுவுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். ஊட்டியில் படப்பிடிப்புக்கு சென்றபோது காலை 7 மணிக்கு மதுக்கடையில் குவிந்து நின்ற இளைஞர்களை பார்த்து கலங்கினேன்.
நான் நடிக்கும் “ரதம்” படத்தில் இதனை காட்சியாக்கியுள்ளோம். நான் அப்படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளியாக நடிக்கிறேன். குடிகாரனாக இருந்து திருந்துவதுபோல் என் கேரக்டர் இருக்கும். நல்லவனாக மாறிய பிறகு சாராயம் குடிப்போரை பார்த்து தந்தையர்களே தயவு செய்து குடிக்காதீர்கள் குடிகுடியை கெடுக்கும். குடித்தவன் குடலை கெடுக்கும்.
கிட்னியை கொல்லும், கல்லீரலை சல்லடையாக்கும். வாய் நாறி, கண் சிவந்து மூச்சு விட முப்பது அடி நாறும். குழந்தைகள் தூரப்போகும். நீ கட்டிய மனைவி கரண்டியை வீசி சண்டை போடுவாள். உன் குழந்தைகள் கடைக் கோடியில் பிச்சை எடுக்கும். ஆகவே குடிக்காதீர்கள் என்று வசனம் பேசுவேன். இந்த காட்சியை இயக்குனர் ரியாஸ் ஒரே டேக்கில் எடுத்தார்.
ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் சதீஷ்குமார் இதை தயாரிக்கிறார். இப்படத்தை பார்ப்பவர்கள் பாதிபேர் குடிப்பதை நிறுத்தி திருந்துவார்கள்.
இவ்வாறு மன்சூர்அலி கான் கூறினார்
Rabu, 25 Agustus 2010
அப்பாவின் திருமணத்தில் பிரகாஷ்ராஜ் மகள்கள்!
நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில நண்பர்களுடன் தனது இரண்டாவது திருமணத்தை முடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். இவருக்கும் லலிதகுமாரிக்கும்
நடந்த காதல் திருமணம் முறிவில் முடிந்தது. அதன்பின் போனி வர்மாவை காதலித்து வந்த பிரகாஷ்ராஜ் நேற்று காலை மும்பையில் அவரை திடீர் திருமணம் செய்து கொண்டார். போனிவர்மா பஞ்சாபி என்பதால் இந்த திருமணமும் அதே முறையில் நடந்தது. இந்த திருமணத்திற்கு லலிதகுமாரி வந்தாரா என்று கேட்பது அவ்வளவு நியாயமில்லை என்பதால் வேறு யார் யாரெல்லாம் வந்தார்கள் என்று விசாரித்தோம். பிரகாஷ்ராஜின் மகள்கள் இருவரும் வந்திருந்தார்களாம். மகனை வாழ்த்த அவரது தாயும் வந்திருக்கிறார். இது தவிர செல்லத்தின் நெருங்கிய கூட்டாளிகளான ராதாமோகன், குமரவேலு, கதையாசிரியர் விஜி, இனிது இனிது பட இயக்குனர் கே.வி.குகன் வந்திருந்தார்களாம். பிரகாஷ்ராஜின் சகோதரிகள் இருவரும் அவர்களது குடும்பமும் வந்திருந்தார்களாம். மிக சொற்பமான விருந்தினர்கள் மத்தியில் இயல்பான புன்னகையோடு தாலி கட்டினாராம் பிரகாஷ் ராஜ்.
அன்று இரவே மும்பையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் விருந்தும் நடந்தது. (அட மெயின் டிஷ் பற்றி சொல்லலியே?)
Langganan:
Postingan (Atom)