Tampilkan postingan dengan label பூஜா. Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label பூஜா. Tampilkan semua postingan

Selasa, 19 Oktober 2010

கவர்ச்சிக்கு மாறினார் திஷா



ஷாஜி கைலாஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜேஷ் கே.வாசு இயக்கும் படம் ‘அச்சமின்றிÕ. படம் பற்றி அவர் கூறியது: கால்சென்டர்,
மொபைல் ஸ்டோர்களில் வேலை செய்யும் இளைஞர்கள் பெருகிவிட்டனர். இதில்  நன்றாக சம்பாதிக்கின்றனர். அதே நேரத்தில் பலர் பெற்றோரை கவனிப்பதில்லை. காதல் வலைகளில் சிக்குகின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது.வழி தவறிப்போகும் ஹீரோ வேடத்தில் விநாயக் நடிக்கிறார். ‘தமிழ்ப்படம்Õ திஷா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். மொபைல் ஸ்டோரில் வேலை செய்யும் பெண் வேடம் ஏற்கிறார். அங்கு அவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்காக எப்படி தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை சில பெண்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அது படத்தில் காட்சிகளாக வரும். இதன் ஷூட்டிங் சென்னை மற்றும் மலேசியாவில் 60 நாட்கள் நடக்கிறது. இதற்கு முன் திஷா பாண்டே ஹோம்லியாக நடித்திருந்தார். இப்படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார்.

Kamis, 16 September 2010

பூஜா, நிலாவுடன் காதல்; ஆர்யா

ஆர்யாவையும் பூஜாவையும் இணைத்து கிசு கிசுக்கள் வந்தன. நிலாவை காதலிப்பதாகவும் பேசப்பட்டது. இதுபற்றி ஆர்யாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,

பூஜா, நிலாவுடன் காதல் என்பதெல்லாம் தவறானவை. இதுவரை யார் மீதும் எனக்கு காதல் வரவில்லை. நயன்தாராவுக்கு தனியாக பிறந்தநாள் விருந்து அளித்ததாகவும் செய்தி வந்தன. அதிலும் உண்மை இல்லை. அந்த விருந்தில் நயன்தாரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவருடன் நான் இணைந்து நடித்த “பாஸ் என்கிற பாஸ்கரன்” படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறந்த காமெடி படமாக இது வந்துள்ளது. இதில் நயன்தாரா நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்ல இயலாது. நேரம் அமையும் போது நடக்கும். எனது ராசியில் காதல் திருமணம் என்று உள்ளது. அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான்.
“ஷோ பீப்பிள்” என்ற படக்கம்பெனி தொடங்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். புதுமுகங்களை வைத்து “படித்துறை” என்ற படத்தை எடுக்கிறேன். நான் நடிக்கும், இயக்குனர் பாலாவின் “அவன் இவன்” படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துள்ளது. வில்லன் வேடத்திலும் நடிக்க தயார்.
இவ்வாறு ஆர்யா கூறினார்.