Sabtu, 11 September 2010

சூட்கேசை தூக்கி எறிந்தார் செக்யூரிட்டி : அமீஷா புகார்


கொல்கத்தா விமானநிலையத்தில் சூட்கேசை தூக்கி எறிந்த செக்யூரிட்டி மீது அமீஷா படேல் புகார் தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் அதிகாலையில், கொல்கத்தாவில் இருந்து மும்பை திரும்புதற்காக விமான நிலையம் வந்தார் அமீஷா. பாதுகாப்பு பெண் அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். ஸ்கேன் கருவியில் அவரது சிறிய சூட்கேசை வைத்தார். பின் செக்கப் முடிந்ததும் சூட்கேசை எடுக்க சென்றார். அதற்குள் அங்கிருந்த பெண் காவலர் அந்த சூட்கேசை தூக்கி வேறொரு பக்கம் எறிந்தார். கடுப்பான அமீஷா, அவரிடம் ஏன் எறிந்தீர்கள் என்றார். ‘இந்த பெட்டியை எடுத்தால்தான் அடுத்த லக்கேஜ்ஜை எடுக்க முடியும்’ என்றார் பெண் காவலர். அதற்காக ஏன் எறிய வேண்டும் என்று கேட்டார் அமீஷா. ‘இதுதான் எங்கள் வேலை. நீங்கள் சீக்கிரம் வந்து சூட்கேசை எடுத்திருந்தால் நான் எறிந்திருக்க மாட்டேன்’ என்றாராம் பெண் காவலர். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த மற்ற காவலர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர். சமாதானம் ஆகாத அமீஷா, விமான நிலைய அதிகாரியிடம் புகார் செய்தார். இதுபற்றி அமீஷாவிடம் கேட்டபோது, ‘இந்த சம்பவம் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்றார்.

Tidak ada komentar:

Posting Komentar