Minggu, 19 September 2010

முட்டிபோட்டு படியேறிய ரஜினி ரசிகர்கள் ,எந்திரன் ரிலீஸ் அறிவிப்பால் உற்சாகம்:


அரக்கோணம்: சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி சோளிங்கரில் நேற்று காலை ரசிகர்கள்
பால்குடத்துடன் ஊர்வலம் சென்றனர். பின்னர் 1,305 படிக்கட்டுகள் உள்ள மலைக்கோயிலுக்கு ரசிகர்கள் முட்டிப்போட்டு படியேறினர்.சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மிக பிரமாண்டமான தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்‘ படம் வரும் 1ம்தேதி உலகெங்கும் திரையிடப்படுகிறது. இது குறித்து செய்தி நேற்று காலை தினகரன் நாளிதழில் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.இந்நிலையில் வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் என்.ரவி தலைமையில் 500க்கும் அதிகமான ரசிகர்கள் நேற்று காலை சோளிங்கர் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து 108 திவ்ய தேசங்களில் ஒன்றான 1,305 படிக்கட்டுகள் கொண்ட சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பால்குடங்களுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.‘எந்திரன்‘ படம் மாபெரும் வெற்றியடைந்து உலக சாதனை படைக்க வேண்டும் என வேண்டி மலை அடிவாரத்தில் இருந்து ரசிகர்கள் முட்டிப்போட்டு படிக்கட்டுகளில் ஏறினர். பின்னர் மலையில் உள்ள நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.பர்கூரில் எந்திரன் பட டிரெய்லர் வெளியிடப்பட்டதை முன்னிட்டு ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘எந்திரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டி வேலூர் மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோயிலில் நேற்று காலை முட்டி போட்டு படியேறும் ரஜினி ரசிகர்கள்.

Tidak ada komentar:

Posting Komentar