Jumat, 24 September 2010

கடவுள் பெயரால் சண்டை வேண்டாம் கமல்


பிரபு சாலமன் இயக்கிய “மைனா” படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. இவ்விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி பங்கேற்று
பேசும்போது, “பிரபு சாலமன் அடிக்கடி கர்த்தர் காப்பாற்றுவார் என்பார் “மைனா” படத்தையும் கர்த்தர் காப்பார்” என்றார். தொடர்ந்து பேசிய இயக்குனர் பாலா, “அறிவு இல்லாதவர்களுக்குதான் கடவுள். அறிவு உள்ளவர்களுக்கு கடவுள் தேவை இல்லை. உழைப்பை நம்புங்கள்” என்றார்.
இதை தொடர்ந்து கமல் பேசியதாவது:-
பிரபு சாலமன் கடவுளை நம்புகிறவர் என்றனர். பாலா அறிவுதான் கடவுள் என்றார். இதெல்லாம் ஒவ்வொருவருடைய நம்பிக்கையை பொருத்தது. கடவுள் பெயரால் சண்டைகள் தேவை இல்லை. என்னை பொருத்தவரை கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லே தெரியாது என்பதுதான்.
காலம் போகிற வேகத்தில் தமிழ் சினிமா திசை மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் “மைனா” போன்ற படங்களால் நம்பிக்கை ஏற்படுகிறது. இந்த படத்தை பார்த்து இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். எனக்கு சினிமா மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் நன்றாக தூங்கினேன்.
பெரிய படம் சிறிய படம் என்றெல்லாம் எதுவும் இல்லை. ரசிகர்கள் ரசிக்கும் படங்களெல்லாம் பெரிய படங்கள்தான். எது நல்ல படம், எது கெட்ட படம், என்பதை பகுத்திறிந்து அறிவது அவசியம். நல்ல படங்களை காப்பாற்ற வேண்டும். மோசமான படங்களை புறக்கணிப்பதும் நம் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராமநாராயணன், உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் பார்த்திபன், ஷாம், கார்த்திக், விஷ்ணு, சிபி, கரண், நந்தா, உதயா மற்றும் ஏ.எல். அழகப்பன், எச். முரளி, கே. முரளிதரன், கே.எஸ். சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tidak ada komentar:

Posting Komentar