இயக்குனர் லிங்குசாமிக்கு தமன்னாவை கதாநாயகியாகப்போடுவதில் எந்த சிக்கலும் இல்லையாம். ஆனால் தமன்னாவுக்குதான் சிம்புவுடன் நடிக்க விருப்பமில்லை என்கின்றனர். நயன்தாரா விவகாரத்தில் சிம்பு நடந்து கொண்ட விதம் குறித்து தெறிந்து கொண்டதால் தான் சிம்புவுடன் நடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம் தமன்னா. அதனால் தான் தன்னுடைய படத்திலிருந்து சிம்புவை கழட்டிவிட்டாராம் லிங்குசாமி. இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி விஜய்க்கு கதை சொல்லியிருக்கிறார். ஆனால் விஜய்யோ "நாம் சேர்ந்து படம் பண்ணலாம், தற்போது வேறு படங்களில் கமிட்டாகியிருப்பதால் தற்போதைக்கு நடிக்க இயலாது” என்று கூறியிருக்கிறார்.
தன்னிடம் கதை தயாராகயிருந்ததால் தற்போது ஆர்யாவை வைத்து "வேட்டை” என்ற படத்தை இயக்குவதாக அறிவித்துவிட்டார் லிங்குசாமி.
சிம்புவுக்கு ஒகே சொல்லாத தமன்னா இப்போது வேட்டையில் ஆர்யாவுடன் ஜோடி சேர ஒப்பு கொண்டிருகிறார். ஆர்யாவுடன் தமன்னா ஜோடி சேர்ந்திருப்பது இது தான் முதல் முறை. பையா படத்தை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கவிருக்கிறார் தமன்னா.
Tidak ada komentar:
Posting Komentar