இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கிறது எந்திரன் ரிலீசுக்கு. அதற்குள் இந்த படத்தின் டிக்கெட் முதல் நாளே எவ்வளவு ரூபாய்க்கு விற்கும் என்று கணக்கு
போட்டு கணக்கு போட்டு வாயை பிளக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இத்தனைக்கும் கொஞ்சம் பெரிய மண்டபம் கிடைத்தால் அங்கேயும் ஒரு ஸ்கிரீன் கட்டி படம் போட்டுவிடுவார்களோ என்று அஞ்சுகிற அளவுக்கு திரும்புகிற இடத்திலெல்லாம் ரிலீஸ் பண்ணப் போகிறார்களாம் எந்திரனை. அப்படியிருந்தும் டிக்கெட் கிடைக்குமா என்ற கவலை ரசிகர்களை வாட்ட ஆரம்பித்திருக்கிறது.
சென்னை மாவட்ட விநியோக உரிமையை பெற்றிருக்கும் திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் மேலும் சில கோடிகள் அதிகம் வைத்து இப்படத்தை சத்யம் நிறுவனத்திற்கு விற்று விட்டாராம்.
சென்னையில் மட்டும் முதல் ஒரு வாரத்திற்கு டிக்கெட் ரேட் தாறுமாறாக இருக்கும் என்று கவலைப்படும் ரசிகர்களுக்கு முதல்வர் போட்ட வாய்மொழி உத்தரவு ஒன்று ஆறுதல் அளிக்கக்கூடும்.
கவர்மென்ட்டுக்கு கெட்ட பேரு வர்ற மாதிரி எந்த தியேட்டர்காரர்களும் நடந்துக்க வேணாம். டிக்கெட் விலையை அதிகப்படுத்தி விற்பதை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் கூறியிருப்பதாக தகவல்கள் உலவுகின்றன.
இந்த நல்ல செய்தி ரசிகர்களை நிச்சயம் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும்
Tidak ada komentar:
Posting Komentar