Sabtu, 18 September 2010

ஆர்யாவுக்காக தள்ளிப்போன எந்திரன் ரிலீஸ் வெளிவராத தகவல்கள்


செப்டம்பர் 24 ந் தேதி வெளிவர வேண்டிய எந்திரன் அக்டோபர் 1 ந் தேதிதான் வெளிவருகிறது. இந்த ஒரு வார தள்ளிப் போடலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கோடம்பாக்கத்தில் சொல்லப்படுகிற முக்கியமான காரணம்
வேறொன்று. அது?
அதற்கு முன்னால் ஒரு கேள்வியும் பதிலும் ரொம்ப ரொம்ப அவசியமாகிறது இந்த இடத்தில்! சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்யாவிடம், பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இன்னும் சில வாரங்களில் எந்திரன் வந்துவிடும். நீங்க எந்திரன் வந்தபின் ஒரு மாதம் கழிச்சி ரிலீஸ் பண்ணியிருந்தா நல்லாயிருக்குமே? எந்திரன் வந்தால் பாஸ்கரனின் கதி....? என்று கேள்வி எழுப்பப்பட,
"வந்தா என்ன பண்றது. அவ்ளோதான் நம்ப படம்" என்றார் ஆர்யா. சிரித்துக் கொண்டே அவர் சொன்னாலும், ரொம்ப வருஷம் கழிச்சு எனக்கொரு வெற்றி கிடைச்சுருக்கு. அதை அவ்வளவு சீக்கிரமா பொலி போடணுமா என்ற வேதனை மறைந்து கிடந்தது அந்த பதிலில். இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவஸ்ரீ சீனிவாசனாக இருந்தாலும், உலகம் முழுக்க படத்தை வெளியிட்டிருப்பது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜயன்ட் மூவிஸ்தான். நல்லா போற படத்தை பொலி போடணுமா என்ற கேள்வி அவர் மனதிலும் எழுந்ததாக கூறப்படுகிறது.
எந்திரன் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இவருக்கும் ஒரு புரிந்துணர்வு பேச்சு வார்த்தை நடந்ததாகவும் அதையடுத்துதான் எந்திரன் ஒரு வாரம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாகவும் பேச்சு. எது எப்படியோ? ஒண்ணாந்தேதி திருவிழாவுக்கு உலகமே ரெடி!

Tidak ada komentar:

Posting Komentar