இப்போது பெரும்பாலான முன்னணி இந்தி சேனல்களில் டான்ஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. சேனல்களுக்கிடையே பெரும் போட்டியை வெகுவாக
அதிகரிப்பதும் இந்த டான்ஸ் நிகழ்ச்சிகள்தான். போட்டியின் உச்சக்கட்டமாக இன்னொரு முன்னணி டி.வி. நிறுவனமும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் "ரியாலிட்டி டான்ஸ் ஷோ ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷனிடம் பேசியுள்ளனர். 26 எபிசோடுகளாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. எல்லா எபிசோடுகளிலும் ஹிருத்திக் பங்கேற்பாராம். இந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்காக ஹருத்திக்குக்கு அளிக்க இருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தொழிலதிபருடன் தபு
- illiyana Hotunseen images
2 கோடி ரூபாய்! அதாவது ஒரு நாளுக்கு சம்பளம் ரூ.2 கோடி.
இதற்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கோன் பனேகா குரோர்பதியில் முதல் பாகத்தில் அமிதாப் பச்சன் 80 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார். பின்னர் நான்காவது பாகத்தில் பங்கேற்றபோது அவரது சம்பளம் ஒன்றரை கோடி ரூபாயாக உயர்ந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியதற்காக ஷாருக்கான் ஒன்றரை கோடியும், சல்மான்கான், அக்ஷய் குமார் ஆகியோர் தலா ஒரு கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு எபிசோட் நிகழ்ச்சிக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பெறும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை ஹிருத்திக் ரோஷன் பெற்றுள்ளார்.
Tidak ada komentar:
Posting Komentar