Jumat, 29 Oktober 2010

ப்ரியங்காவை திருமணம் செய்தார் விவேக் ஒபராய்

பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபராய்க்கும் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரியங்காவுக்கும் இன்று காலை
11 மணியளவில் திருமணம் நடைபெற்றது. நடிகர் விவேக் ஒபராய் தொடர்ந்து காதல் தொடர்பான சர்ச்சைகளில் அடிப்பட்டுவந்தார். நடிகைகள் நீரு பாஜ்வா, ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார்.
இந்நிலையில் விவேக் ஒபராய்க்கு, கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வா-நந்தினி தம்பதிகளின் மகள் பிரியங்காவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மணமகள் பிரியங்கா, லண்டனில் பி.பி.எம். பட்டப்படிப்பு படித்தவர். இவருடைய தாய் நந்தினி ஆல்வா பிரபல நடன கலைஞர்.
விவேக் ஒபராய்-பிரியங்கா திருமணம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. பஞ்சாபி மற்றும் மங்களூர் முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

Tidak ada komentar:

Posting Komentar