Tampilkan postingan dengan label நமீதா. Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label நமீதா. Tampilkan semua postingan

Sabtu, 16 Oktober 2010

கலைஞர்தான் என்னை சிபாரிசு செய்தவர் - நமீதா புல்லரிப்பு

இளைஞன் படத்தில் நமீதாவை நடிக்க வைக்கலாம் என்று சிபாரிசு செய்தவர் முதல்வர் கருணாநிதியாம். இதை நமீதாவே தனது வாயால் கூறியுள்ளார்.

இளைஞன் படத்தில் வில்லத்தனமான ரோலில் நடிக்கிறார். இதில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற டிஸ்கஷன் வந்தபோது நமீதாவை நடிக்க வைக்கலாம் என முதல்வர் கருணாநிதிதான் சிபாரிசு செய்தாராம். இளைஞன் படத்தின் வசனத்தை முதல்வர்தான் எழுதுகிறார் என்பது நினைவிருக்கலாம்.

இதை தனது வாயால் கூறி பொங்கிப் பொங்கி மகிழ்கிறார் நமீதா. இது குறித்து அவர் கூறுகையில், “முதல்வரே என்னைத் தேர்வு செய்திருப்பது பெரும் கெளரவமாக கருதுகிறேன். நிச்சயம் அவரது எதிர்பார்ப்புக்கேற்ப நடிப்பேன். என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்வேன். இப்படத்தில் நான் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வருகிறேன். 1940-களில் கதை நடப்பது போல உள்ளது. படையப்பா படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனைப் போன்ற கேரக்டர் எனக்குக் கிடைத்துள்ளது. இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா மிகவும் சிறந்த இயக்குநர். பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். அவருடன் பணியாற்றுவது சந்தோஷமாக உள்ளது” என்றார் நமீதா.
 

Kamis, 14 Oktober 2010

கலைஞர் படத்தில் -நமீதா


முதல்- அமைச்சர் கருணா நிதி கதை வசனத்தில் தயாராகும் படம் இளைஞன்.

இதில் கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கிறார். சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நமீதா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 1940-ம் ஆண்டு கால செட்டுகள் போட்டு படப்பிடிப்பை நடத்து கின்றனர்.
இதில் நடிப்பது பற்றி நமீதா கூறியதாவது:-
முதல்- அமைச்சர் கலைஞர் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வாய்ப்பு அளித்த தற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதில் எனக்கு அற்புதமான கேரக்டர், பாதி பிரிட்டீஷ், பாதி இந்தியன் என கலவையான கேரக்டரில் நடிக்கிறேன்.
ஆங்கிலத்தில் மோசமான வார்த்தைகளை பேசியும் எப்போதும் புகை பிடித்துக் கொண்டிருப்பது போலவும் வருகிறேன். ரம்யா கிருஷ்ண னின் நீலாம்பரி கேரக்டரை எனது கதாபாத்திரம் நினைவுபடுத்தும்.
சுரேஷ்கிருஷ்ணா திற மையான இயக்குனர். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார்