Tampilkan postingan dengan label அஜித். Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label அஜித். Tampilkan semua postingan

Senin, 01 November 2010

மங்காத்தா குழுவுக்கு அஜித்தின் பிரியாணி



அஜித்தின் 50வது படமான மங்‌காத்தா சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில்
மங்காத்தா குழுவினருக்கு பிரியாணி விருந்து படைத்து அசத்தியிருக்கிறார் அஜித். மே மாதம் 1ம்தேதி அஜித்தின் பிறந்த நாளில் வெளியிடும் திட்டத்துடன் மங்காத்தா படம் வளர்ந்து வருகிறது. டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். இந்த படத்திற்காக காலை, மாலை என கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை சிக்கென ஆக்கியிருக்கும் அஜித் சூட்டிங் ஸ்பாட்டில் ‌ரொம்பவே ஆக்டிவ்வாக இருக்கிறாராம்.
மங்காத்தா Trailer கார் ஓட்டுவதில் மட்டுமல்லாமல், சமையல் கலையிலும் கைதேர்ந்தவரான அஜித் சமீபத்தில் மங்காத்தா குழுவினருக்காக ஸ்பெஷல் பிரியாணி விருந்து படைத்திருக்கிறார்.
Movie gallary
 அந்த விருந்தில் அப்படியென்ன ஸபெஷல் என்கிறீர்களா? பிரியாணி அஜித்தின் கைப்பக்குவத்தில் உருவானதுதான் ஸ்‌பெஷல். இதுபற்றி டைரக்டர் வெங்கட்பிரபு தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். எல்லோரும் தலப்பாகட்டு பிரியாணி சாப்பிட்டிருப்பாங்க. நாங்க தல பிரியாணி சாப்பிட்டோம், என்று கூறியிருக்கிறார் வெங்கட்.

Selasa, 19 Oktober 2010

அஜித் இடத்தில் நடிக்கபோவது யார் ??


துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் இணைவதாக இருந்த அஜீத்தும், கெளதம் மேனனும் இப்போது திடீரென பிரிந்து விட்டனர். கதையில்
பாடல்களோ, ரசிகர்களைக் கவரும் காட்சிகளோ இல்லையென்பது அஜீத்தின் வருத்தம். அஜீத்துக்காக கதை எழுத முடியாது, என் கதையில் வேண்டுமானால் அஜீத் நடிக்கட்டும் என்பது கவுதம் மேனனின் பிடிவாதம்.

எல்லா இயக்குநர்களின் செல்ல ஹீரோவாக மாறி வரும் சூர்யாவிற்கு அஜீத் கைவிடப்பட்ட (துப்பறியும் ஆனந்த்) படத்திற்கு ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. இன்னும் சில மாதங்களுக்கு கா‌ல்ஷ‌ீட் இல்லை என்பது சூர்யாவின் பிரச்சனை. அதனால் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து சீக்கிரமே சொல்கிறேன் என்கிறார் கௌதம். 

Selasa, 21 September 2010

அஜீத் கதைக்கு சூர்யா ஹீரோ ஆனார்!


அஜீத் பல படங்களை நடிக்க மறுப்பு தெரிவிக்க, அந்த படங்கள் அனைத்தும் சூர்யாவிடம் கைமாறியது. மேலும் அந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. சூர்யாவின் காக்க.. காக்க, கஜினி, மற்றும் ஆர்யாவின் நான்
கடவுள் என பல படங்கள் அஜீத்திற்காக எழுதப்பட்ட கதைகள்.

எல்லா இயக்குநர்களின் செல்ல ஹீரோவாக மாறி வரும் சூர்யாவிற்கு தற்போது அஜீத் கைவிடப்பட்ட படத்திற்கு ஹீரோவாக நடிக்கிறார் என கோலிவுட் பக்கம் ஒரு பேச்சு நிலவுகிறது. அது என்ன படம் தெரியுமா? ,,, கௌதம் மேனனின் 'துப்பறியும் ஆனந்த்'. துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் இணைவதாக இருந்த அஜீத்தும், கெளதம் மேனனும் இப்போது திடீரென பிரிந்து விட்டனர். அஜீத்துக்காக கெளதம் மேனன் தயார் செய்த கதைதான் துப்பறியும் ஆனந்த். இதில் அஜீத் துப்பறியும் நிபுணராக நடிப்பார் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பு காரணமாக படம் கைவிடப்பட்டது. சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் எமி ஜாக்சன் நடிப்பார் என தெரிகிறது.  படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான் அமைப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Senin, 13 September 2010

சிங்கள நடிகையுடன் அஜித்

அ‌‌ஜீத் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் மங்காத்தாவில் நீது சந்திரா, லட்சுமிராய் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கள நடிகையொருவரும் நடிக்கிறார் என்ற செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த மாடல் ஜாக்குலின் பெர்னான்டஸ். இவர் தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். மங்காத்தா படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக இவரும் நடிக்கிறார் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதற்காகவு‌ம், பாசிஸ ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழலாக செயல்பட்டதற்காகவும் அசின் நடித்தப் படங்களை தமிழத்தில் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் அமைப்புகளும், உணர்வாளர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில் ஜாக்குலின் தமிழ்ப் படத்தில் நடிக்கும் செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.