Tampilkan postingan dengan label சூர்யா. Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label சூர்யா. Tampilkan semua postingan

Selasa, 19 Oktober 2010

‘ரக்த சரித்ரா’ தமிழகத்தில் வெளியாகாது! – ராம் கோபால் வர்மா




ரத்த சரித்திரம் படத்தின் இந்திப் பதிப்பை தமிழகத்தில் வெளியிடும் திட்டம் இல்லை என்று ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.விவேக் ஓபராய், சத்ருகன் சின்ஹா நடித்துள்ள இந்திப் படம் ரக்த சரித்ரா. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகிறது.
ஆனால் இந்தியில் 5 மணி நேரத்துக்கும் மேல் ஓடக்கூடிய ‘சரித்திரமாக’ இந்தப் படத்தை எடுத்துள்ளாராம் ராம் கோபால் வர்மா. எனவே இந்தப் படத்தை இரு பாகங்களாக வெளியிடவிருக்கிறார்.
முதல் பகுதி அடுத்த மாதமும், அதற்கடுத்த பகுதி இரு மாதங்கள் கழித்தும் வெளியாகுமாம். இந்த முதல் பகுதியில் நடிகர் சூர்யா வெறும் பத்துநிமிடக் காட்சிகளில்தான் வருகிறாராம்.
“எனக்கு தமிழகத்தில் ஏகத்துக்கும் ரசிகர்கள் இருப்பதால், இந்திப் படத்தை மட்டும் தமிழகத்தில் வெளியிட வேண்டாம், இமேஜ் பாதிக்கும்” என சூர்யா கேட்டுக் கொண்டதால், இந்திப் படத்தை மட்டும் தமிழகத்தில் ரிலீஸ் பண்ணும் திட்டத்தில் இல்லை என அறிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
ஆனால் இதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் ஒரே பகுதியாக நவம்பர் 19-ல் வெளிவருகின்றன.

 ரக்த சரித்ரா
சூர்யா தொடர்பான செய்திகள் 

Senin, 04 Oktober 2010

சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்

தீபாவளிக்கு ரத்த சரித்திரம், உத்தமபுத்திரன், சிக்குபுக்கு, வல்லக்கோட்டை, மைனா, “வ” குவார்ட்டர் கட்டிங் ஆகிய 6 படங்கள் ரிலீசாகின்றன. ரத்த சரித்திரம் படத்தில் சூர்யா, இந்தி நடிகர் விவேக் ஓபராய், பிரியாமணி நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இரண்டு தாதாக்கள் சண்டை பற்றிய உண்மை சம்பவத்தை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார்.
 
“சிக்குபுக்கு” படத்தில் ஆர்யா-ஸ்ரேயா ஜோடி யாக நடித்துள்ளனர். கே.மணி கண்டன் இயக்கியுள்ளார். காதல் கதையாக உருவாகி உள்ளது.
 
உத்தமபுத்திரன் படத்தில் தனுஷ்-ஜெனிலியா ஜோடியாக நடித்துள்ளனர். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். குடும்ப சென்டிமென்ட் கலந்த காதல் கதை. தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய “ரெடி” படத்தின் ரீமேக்கே இப்படம்.
 
வல்லக்கோட்டை படத்தில் அர்ஜுன், ஹரிப்ரியா ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
 
மைனா படத்தில் விதார்த், அமலாபால் ஜோடியாக நடித்துள்ளனர். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். அமலாபால் சிந்துசமவெளி படத்தில் அனாகா என்ற பெயரில் நடித்து பிரபலமானவர். சிறு வயதிலேயே நட்பாக பழகுவார்கள். வளர்ந்ததும் காதல் வயப்படுவதும் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுமே கதை.
 
“வ” குவார்ட்டர் கட்டிங் காமெடி படமாக உருவாகியுள்ளது. சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். தயாநிதி அழகிரி தயாரித்துள்ளார்.
 
மேலும் 20 படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. கமல், திரிஷா ஜோடியாக நடிக்கும் மன்மதன் அம்பு படம் டிசம்பர் 10-ந்தேதி ரிலீசாகிறது.
 
விஜய், அசின் நடிக்கும் காவலன் படம் டிசம்பர் 24-ல் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகிறது. ஜெயம் ரவியின் எங்கேயும் காதல், கார்த்தியின் சிறுத்தை, சிம்பு நடிக்கும் வானம், ஜீவாவின் கோ, சேரன் நடிக்கும் யுத்தம் செய் படங்களும் நவம்பர், டிசம்பர் மாதங்களில ரிலீசாகிறது.

மகாபாரதத்துல எழுதப்படல.... சூர்யா பட சர்ச்சை

Surya
திரையில வெளிச்சம் படுற கடைசி நிமிடம் வரைக்கும் படத்தை இருட்டாக்கிடணும்னு நினைச்சு வேலை செய்வாங்க போலிருக்கு. அதிலும்
ஒரு நியாயம் இருக்கதானே செய்யுது என்றும் இந்த செய்தியை படித்துவிட்டு நீங்கள் முணுமுணுக்கலாம்.
சூர்யா நடித்து ராம்கோபால்வர்மா இயக்கத்தில் வெளிவரப்போகும் ரத்த சரித்திரம் படத்திற்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் ஆகிய மூவருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம். என்னவென்று?
இந்தப்பட விளம்பரங்களில் ஒரு வாசகத்தை பயன்படுத்தி வந்தார்கள். பழிவாங்குவது பரிசுத்த உணர்வு- மகாபாரதம் என்று அச்சிட்டிருந்தார்கள் அதில். இந்து மக்கள் கட்சி இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தது மகாபாரதத்தில் இப்படி ஒரு வார்த்தையே இல்லை என்ற வாதத்தோடு தனது வழக்கறிஞர் தாமரை செந்து£ர் பாண்டி மூலம் நோட்டீஸ் அனுப்பியது படம் தொடர்பானவர்களுக்கு!
கருக்கருவாவை எடுத்து முதுகு சொறிஞ்ச கதையா இருக்கே என்று ஏற்கனவே புலம்பிக் கொண்டிருக்கும் சூர்யா, இந்த புதுப்பிரச்சனையை உடனடியாக சமாளிக்க வேண்டும் என்று நினைத்தார். சம்பந்தப்பட்ட அந்த விளம்பர ஸ்லோகனை நீக்கிடுங்க என்றாராம். இப்போது வருவதெல்லாம் சூர்யாவின் க்ளீன் போட்டோவும் ரத்தசரித்திரம் டைட்டிலும்தான்!

Selasa, 21 September 2010

அஜீத் கதைக்கு சூர்யா ஹீரோ ஆனார்!


அஜீத் பல படங்களை நடிக்க மறுப்பு தெரிவிக்க, அந்த படங்கள் அனைத்தும் சூர்யாவிடம் கைமாறியது. மேலும் அந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. சூர்யாவின் காக்க.. காக்க, கஜினி, மற்றும் ஆர்யாவின் நான்
கடவுள் என பல படங்கள் அஜீத்திற்காக எழுதப்பட்ட கதைகள்.

எல்லா இயக்குநர்களின் செல்ல ஹீரோவாக மாறி வரும் சூர்யாவிற்கு தற்போது அஜீத் கைவிடப்பட்ட படத்திற்கு ஹீரோவாக நடிக்கிறார் என கோலிவுட் பக்கம் ஒரு பேச்சு நிலவுகிறது. அது என்ன படம் தெரியுமா? ,,, கௌதம் மேனனின் 'துப்பறியும் ஆனந்த்'. துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் இணைவதாக இருந்த அஜீத்தும், கெளதம் மேனனும் இப்போது திடீரென பிரிந்து விட்டனர். அஜீத்துக்காக கெளதம் மேனன் தயார் செய்த கதைதான் துப்பறியும் ஆனந்த். இதில் அஜீத் துப்பறியும் நிபுணராக நடிப்பார் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பு காரணமாக படம் கைவிடப்பட்டது. சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் எமி ஜாக்சன் நடிப்பார் என தெரிகிறது.  படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான் அமைப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Sabtu, 28 Agustus 2010

நேற்று சூர்யா, இன்று ஸ்ருதி

கடந்த சில தினங்களாகவே கோடம்பாக்கத்தில் பெரும் புகைச்சல் ஒன்று! ஒரு நடிகருக்கு சகலமுமாக இருப்பது பிஆர்ஓ என்று சொல்லப்படும் மக்கள் தொடர்பாளர்தான். நேருக்கு நேர் படத்தில் சூர்யா அறிமுகம் ஆன
காலத்திலிருந்து கடந்த 48 மணி நேரத்திற்கு முன்பு வரை அவருக்கு பிஆர்ஓ வாக இருந்தவர் நிகில் முருகன். சூர்யா குறித்த நெகட்டிவ் செய்திகள் வரும்போதெல்லாம் நிகிலிடமிருந்து ஒரு போன் வரும். என்ன பிரச்சனை? ஏன் இப்படி ஒரு நியூஸ்? என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்பார். இனிமேல் சூர்யாவுக்காக நிகில் போன் செய்யப் போவதில்லை. அப்படியென்றால்?
இந்த போன் இனி ஜான்சன் என்ற பிஆர் ஓ விடமிருந்து வரக்கூடும். ஏனென்றால் சூர்யா, கார்த்தி இருவருக்குமே இனி ஜான்சன்தான் பிஆர்ஓ என்று அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார் சிவகுமார். ஒருவரை திடீர் என்று நீக்க காரணம் வேண்டுமே? விசாரித்தால் திரையுலகில் பலரும் கிசுகிசுக்கிற காரணம் இதுதான்.
நான் மகான் அல்ல ரிலீஸ் தினத்தன்று நிகில் முருகனின் ட்யூட்டர் புக்கில் ஒரு செய்தி. இந்த படத்திற்கு சரியான ஓப்பனிங் இல்லையென்று. இதை படித்த சிவகுமார் நிகில் முருகனை கடிந்து கொண்டாராம். அதன் பிறகுதான் அந்த இடத்தில் ஜான்சன் அமர வைக்கப்பட்டாராம். நேற்றைய பிரச்சனை நேற்றோடு என்று நினைத்திருந்த நிகிலுக்கு இன்று மேலும் புது செய்தி.
'ஏழாம் அறிவு' படத்தின் ஹீரோயின் ஸ்ருதி கமலிடமிருந்து ஒரு மெயில் வந்திருக்கிறது பத்திரிகையாளர்களுக்கு. அதில், இன்றிலிருந்து எனக்கான பிஆர்ஓவாக ஜான்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று அறிவித்திருக்கிறார் அவர். இப்படத்தின் ஹீரோ சூர்யா என்பதும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் நிகில் முருகனை தன்னிடமிருந்து நீக்கினார் என்பதும் ஸ்ருதியின் மெயிலோடு முடிச்சு போடுகிற சமாச்சாரம் ஆகியிருக்கிறது பத்திரிகையாளர்கள் மத்தியில்.

எனக்குப் பிடிக்காத நபர் ஆர்யா! – சூர்யா


தமிழ் சினிமாவில் எனக்குப் பிடிக்காத நடிகர் ஆர்யாதான் என்றார் நடிகர் சூர்யா .சென்னையில் நேற்று நடந்த ஒரு இசைவெளியீட்டு விழாவில்
பங்கேற்ற அவர் பேசுகையில், “எனக்கு தமிழில் பிடிக்காத நடிகர் ஆர்யாதான். நான் இப்படிச் சொல்லக் காரணம் உண்டு.
என் வீட்டில் எல்லோரும் அமர்ந்து டிவி பார்க்கும் போது திடீரென்று பாடல் காட்சிகளில் ஆர்யாவின் சீன் வந்துவிட்டால் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி, ‘இந்தப் பையன் நல்லா அழகா இருக்கான்ல… நல்லா நடிக்கிறான்’ என்று சொல்வார்கள். எனக்கு காதில் புகையே வரும்… அந்த அளவு கவர்ந்திருக்கார் எல்லோரையும்”, என்றார்.
அந்த நிகழ்ச்சிக்கு படத்தின் நாயகியான நயன்தாரா வரவில்லை. இதுபற்றிக் குறிப்பிட்ட ஆர்யா, “நயன்தாரா இந்த விழாவுக்கு வராதது வருத்தமாக உள்ளது. இந்த மாதிரி ஆடியோ பங்ஷனுக்கு வர்றதில்லேன்னு அவங்க ஒரு பாலிஸிசே வச்சிருக்காங்களாம். அதான் வரலை… நமக்குத்தான் அந்த மாதிரி எந்தப் பாலிஸியும் இல்லை”, என்றால் கிண்டலாக.

Jumat, 20 Agustus 2010

கன்னடத்துக்கு வரும் சிங்கம்

கன்னடத்தில் சிங்கம் படத்தை ரீமேக் செய்யவுள்ளனர். கன்னட முன்னணி நடிகர் சுதீப் நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் வழங்கிய சிங்கம் ரிலீஸ் ஆகி
வெற்றிகரமாக ஓடியதோடு வசூல் சாதனை புரிந்தது. சூர்யா, அனுஷ்கா, விவேக் நடித்துள்ள இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் தற்போதும் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது இந்த படம் கன்னடத்திலும் ரீமேக் ஆகிறது. அனேகமாக சுதீப் ஹீரோவாகலாம் என்கின்றன பெங்களூருவிலிருந்து வரும் தகவல்கள்.