Tampilkan postingan dengan label எந்திரன். Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label எந்திரன். Tampilkan semua postingan
Senin, 01 November 2010
Jumat, 29 Oktober 2010
Jumat, 15 Oktober 2010
குவைத் டாப் 10ல் எந்திரன் முதலிடம்!
குவைத் பாக்ஸ் ஆஃபிஸில் முதன் முறையாக இந்திய சினிமா(எந்திரன்)
ஒன்று முதலிடம் பிடித்துள்ளது. நம்ம சூப்பர் ஸ்டார் நடித்த 'எந்திரன்' படம் குவைத்திலும் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த சந்தோஷமான விஷயத்தை நமது இணைய வாசகர்(குவைத்) ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கான இணைய முகவரியை அவர் வெளியிட்டுள்ளார். இதில் எந்திரனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது, பிரபல ஹாலிவுட் திரைப்படங்களான டேக்ர்ஸ், ரேஸிடண்ட் ஈவில், அடுத்தடுத்த இடங்கள் கிடைத்துள்ளது.
Selasa, 12 Oktober 2010
புரட்சித்தலைவரையே மிஞ்சிய எந்திரன் ஐஸ்வர்யாராய்..
நம்ம புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையே எந்திரனில் வந்த ஐஸ்வர்யாராய் முந்திவிட்டாரென சென்னை
ரசிகர் ஒருவர் உதயம் தியேட்டரின் முன் சிரித்தபடியே கூறி அனைவர் கவனத்தையும் தொட்டார். பொதுவாக புரட்சித்தலைவருக்கு கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சிறிய காயம் கையில் ஏற்படும். அதைப் பார்த்தவுடன் பாயும்புலியாகி பகைவர்களை அழித்துவிடுவார் தலைவர். ஆனால் எந்திரனில் எத்தனையோ ஆயிரம் போலீசார் துப்பாக்கிகளால் சுட்டும், கார்களில் அடித்துப் புரண்டும் ஐஸ்வர்யாராய்க்கு சிறிய காயம்கூட வரவிடாமல் காப்பாற்றிவிட்டார் நம்ம ஷங்கர். உலக அழிகி காயப்பட்டால் அமிதாப்பச்சனுக்கு பிடிக்காது என்பதால் ஐஸ்வர்யாராயை காப்பாற்றியது ஷங்கரின் திறமையே என்று மற்றவர் கூற அட போய்யா உலக அழகின்னா துப்பாக்கிக் குண்டே விலகித்தான் போகும்யா என்றார் இன்னொரு ஆட்டோக்காரர்.
நன்றி – தினக்குயில்
Selasa, 05 Oktober 2010
பால் தாக்கரே வீட்டுக்குச் சென்றார் ரஜினிகாந்த்
சிவசேனா தலைவர் பால் தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தனது
எந்திரன் படத்தை பாலிவுட்டினருக்குப் போட்டுக் காட்டுவதற்காக மும்பை வந்திருந்தார் ரஜினிகாந்த். இதில் ஷாருக் கான் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. அதேசமயம், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பழைய சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இன்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே வீட்டுக்குச் சென்றார் ரஜினிகாந்த். அவரிடம் ஆசியும் பெற்றார். தாக்கரேவை சந்தித்த பின்னர் வெளியில் வந்த ரஜினி கூறுகையில், எனக்கு பால் தாக்கரே கடவுள் மாதிரி. எனது பெற்றோர் மராத்தியர்கள். மராத்தி மொழிப் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது என்றார் ரஜினி.
சமீப காலமாக இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு எதிராக சிவசேனாவும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவும் மாறி மாறி போர்க்கொடி உயர்த்தி பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான் என யாரையும் இவர்கள் விடவில்லை. இந்தநிலையில் எந்திரனின் இந்திப் பதிப்பு மும்பையில் ரிலீஸாகியுள்ளது. இந்தப் பின்னணியில் ரஜினி, பால்தாக்கரேவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது
Senin, 04 Oktober 2010
எந்திரன் திரைப்பட ஹிந்தி பதிப்பு HG
தொடரும் எந்திரன் சாதனைகள்
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எந்திரன் திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம்
இலவச Magazine Total Film Magazine November
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் முழுவதும் எந்திரன் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த முதல்வர் கருணாநிதி, பிரமாதமாக இருப்பதாகவும், உயர்ந்த படம் என்றும் பாராட்டினார். தமிழகத்தில் இப்படத்தை பார்த்த ரசிகர்கள், ரஜினியின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பல ஊர்களில் ரசிகர்கள் தேர் இழுத்தும், மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செய்தனர்.
South indian actress Mamathamohandas Hot leg show
படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் அலை அலையாய் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் உள் ளனர். டிக்கெட்டுகள் வாங்க, ரசிகர்கள் முட்டி மோதுகின்றனர். தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெற்றிகரமாக எந்திரன் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. நமது நாட்டில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, துபாய், லண்டன், மலேசியா உட்பட உலகம் முழுவதும் படம் வெளியாகியுள்ளது. அங்கும் எந்த படத்துக்கும் இல்லாத அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல; இந்தியர்கள் அனைவரும் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். குடும்பத்துடன் படத்தை பார்த்து பாராட்டு மழை பொழிகின்றனர்.துபாயில் பணியாற்றும் கண்ணன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் இருந்து துபாய் வந்த இடத்தில் முதல் நாளே எந்திரன் படம் பார்த்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. படம் பிரமாண்டமாக வந்துள்ளது. இது போன்று என்னுடைய வாழ்நாளில் ஒரு படத்தைப் பார்த்ததும் இல்லை. பார்க்கப்போவதும் இல்லை’’ என்றார்.
அமெரிக்காவில் வசிக்கும் ஆன்ட்ரியா கூறும்போது, ‘‘ஷங்கரின் இயக்கத்தில் படம் பிரமாண்டமாக வந்துள்ளது. பிரமிப்பாக உள்ளது. ரஜினியின் நடிப்பு சூப்பர்’’ என்றார். லண்டனில் வசிக்கும் கணேஷ் கூறும்போது, “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் லண்டனில். என் நண்பர் அழைத்ததால் எந்திரன் படம் பார்க்கச் சென்றேன். இப்போது என் நண்பனுக்கு நன்றி சொல்கிறேன். இதுபோன்ற ஒரு தமிழ் படத்தை பார்த்ததில்லை. அறிவியல் பூர்வமான மிரட்டலாக உள்ளது. படம் சக்சஸ்” என்றார். இதேபோல உலகம் முழுவதும் படம் பார்த்தவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் எந்திரன் திரைப்படம் சாதனை படைத்து வருகிறது.
Minggu, 03 Oktober 2010
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்-முதலிடத்தில் ரஜினியின் எந்திரன்
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் /
ரோபோ திரைப்படம்.
இலவச Magazine Total Film Magazine November
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு அமெரிக்க ா மற்றும் கனடாவின் பல இடங்களில் கட்டண சிறப்புக் காட்சி நடைபெற்றது. ஹாலிவுட் படங்களுக்குத்தான் இதுபோன்ற காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த சிறப்புக் காட்சிகளில் வசூலான தொகை, மற்ற தமிழ்ப் படங்களின் ஓவர்சீஸ் வசூலுக்கு நிகராக இருந்ததாக அமெரிக்க விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
படம் வெளியான முதல் தினம் எந்திரன் இரண்டாம் இடத்திலும், ஹாலிவுட் படமான சோஷியல் நெட்வொர்க் முதலிடத்திலும் இருந்தது. அப்போதே, எந்திரன் முதலிடத்துக்கு வந்துவிடும் என கணிப்பு வெளியிட்டிருந்தனர். அதன்படி அக்டோபர் இரண்டாம் தேதி நிலவரப்படி ரோபோ / எந்திரன் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்துக்கு வந்துள்ளது.
பெரிய ஹாலிவுட் படங்களின் வெளியீடு இல்லாத சூழல் என்றாலும், அமெரிக்க டாப் 10-ல் இந்தியப் படங்களுக்கும் ஒரு இடம் கிடைப்பதே பெரிய விஷயம். ஆனால் ரஜினியின் படமோ முதலிடத்தையே பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
பிரிட்டனில்…
மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் பிரிட்டிஷ் டாப் 10 -ல் எந்திரனுக்கு எந்த இடம் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. முதல் மூன்று இடங்களுக்குள் எந்திரன் இடம்பெறும் என்று லண்டன் நகர விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் சிவாஜி – தி பாஸ் பிரிட்டிஷ் டாப் 10-ல் 9வது இடம் பெற்றது நினைவிருக்கலாம். இந்தப் பட்டியலில் இடம் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையும் சிவாஜிக்கே கிடைத்தது
Jumat, 01 Oktober 2010
எந்திரன் படத்தை கொண்டாடிய அஜீத் ரசிகர்கள்
எந்திரன் படத்தை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அஜீத் ரசிகர்களும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
திண்டுக்கலில் ரஜினி பேனருக்கு பாலாபிஷேகம் செய்து அஜீத் ரசிகர்கள் கொண்டாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பரிமளம் தியேட்டரில் இன்று காலை நடிகர் ரஜினி நடித்த சன் பிக்சர்சின் எந்திரன் படம் திரையிடப்பட்டது. படத்தை பார்ப்பதற்காக ரஜினி ரசிகர்கள் இன்று அதிகாலையிலிருந்து தியேட்டர் முன் குழுமியிருந்தனர்.
அப்போது, வத்தலக்குண்டு ஆழ்வார் அஜீத் ரசிகர் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் மகா தலைமையில் தியேட்டர் முன் எந்திரன் படம் வெற்றிபெற வாழ்த்தி ராட்சத பேனர் வைத்திருந்ததனர். அந்த ராட்சத பேனருக்கு அஜீத் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
இதைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தலைவர் படத்துக்கு தல ரசிகர்கள் வந்து வாழ்த்தி, பாலாபிஷேகம் செய்ததால் அவர்கள் கூடுதல் குஷியடைந்தனர்.
Rabu, 29 September 2010
எந்திரன் அனுபவத்தை மறக்கவே முடியாது
ஷங்கரோடு இதுக்கு முன்னாடி வொர்க் பண்ணிருக்கேன்.. அது வேற மாதிரியான படம்.. எனக்கு ரெண்டு ரோல்.. கேரக்டரை மையமா வச்சு நடிக்க
அனுக்ஹா, சிம்பு வானம் திரைப்பட லேட்டஸ்ட் ஹாட் Photos
வேண்டியதா இருந்துது.. எந்திரன் அந்த மாதிரி இல்லை.. நான் முழுக்க முழுக்க கமர்ஷியல் அதுவும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்துல நடிக்கிறது இதுதான் முதல் தடவை. நிறைய ஆக்ஷன் சீன்ஸ் இருக்குனு சொன்னார். ஷங்கரோட ஸ்டோரி போர்டை பார்த்தப்ப இவ்வளவு ஆக்ஷனானு பிரமிச்சு போனேன்.. எப்படி இதையெல்லாம் விஷுவலா கொண்டு வர போறார்னு நினைப்பேன்.. ஷூட்டிங் நடந்தப்பதான் அவர் எந்த அளவுக்கு கவனமா இதுக்கு ப்ளான் பண்ணிருந்தார்னு புரிஞ்சுது.. வொண்டர்புல் ஜாப்..
எந்திரன்ல நான் ஒரு ஸ்டூடன்டா வர்றேன்.. சனா என்னோட பேரு. இதுக்கு மேல சொன்னா தப்பு.. படம் பாத்துட்டு நீங்கதான் என் கேரக்டரை பத்தி சொல்லணும்.. ‘கிளிமஞ்சாரோ’ பாடலை ஷூட் பண்றதுக்கு மச்சுபிச்சு மலைய செலக்ட் பண்ணினதே சூப்பர் ஐடியாதான்.. உலகத்தின் எங்கோ ஒரு மூலைல இருக்கிற அந்த லொகேஷனை கண்டுபிடிச்ச ஷங்கரை பாராட்டணும்.. அந்த இடத்துக்கு போய் சேர்றதுல இருந்து பாடல் ஷூட் பண்ணி முடிச்ச வரைக்கும் என்னோட அனுபவத்தை மறக்கவே முடியாது.. பெரிய அட்வெஞ்சர் அது.. நிறைய டான்சர்கள், காஸ்ட்லியான காஸ்ட்யூம்ஸ்.. ரொம்ப என்ஜாய் பண்ணினேன். ஏன்னா, இந்த மாதிரியான வாய்ப்பு என் கேரியர்ல கிடைச்சதில்லை.
‘காதல் அணுக்கள்’ இப்படி அட்டகாசமான படத்துல இந்த மாதிரி ஒரு மெலடியானு அசர வைக்கிற பாடல். எனக்கு ரொம்ப பிடிச்ச மெலடி அது. அடிக்கடி முணுமுணுக்கிற பாடலும் கூட. பிரேசில்ல இருக்கிற லாங்காய் பாலைவனத்துல ஷூட் நடந்துது. இப்படியொரு லொகேஷனை கற்பனைலகூட பார்த்ததில்லை. பாலைவனத்துக்கு நடுவுல குட்டி குட்டியான ஏரிகள் பிரமாதம். ஸ்டைல்கிங் ரஜினி இந்த பாடல் சீன்ல செம கேஷுவலா நடிச்சிருப்பார்.. பாத்தா மெய்மறந்து நிப்பீங்க, நிச்சயமா..
‘அரிமா அரிமா’ பாடல் படத்துல முக்கியமான சிச்சுவேஷன்ல வருது. ரஜினி அதுல நிறைய வருவார். நானும் அதிகமா வருவேன். ரொம்ப பிரமாண்டமான செட் அந்த சீனுக்கு தேவையா இருந்தது. சாபு சிரில் அவ்வளவு அருமையா பண்ணியிருக்கார். மூணு விதவிதமான செட். அவ்வளவு பெரிய செட்ல நடிச்சது விஷுவலா ரொம்ப புது அனுபவம். ரகுமான் இசை பவர்ஃபுலா இருக்கும். வித்தியாசமா டிரை பண்ணியிருக்கார் ஷங்கர். ரஜினி சாரோட கிளாமரான காஸ்ட்யூம்ல ஆடியிருக்கேன். அத்தனை பேரும் ரோபோ டிரெஸ் போட்டுட்டு பெர்ஃபாம் பண்றது ஈசியில்ல. மகிழ்ச்சியா கஷ்டப்பட்டிருக்காங்க எல்லாரும்..
ரஜினி சாரை பத்தி எக்கச்சக்கமா கேள்விப்பட்டிருக்கேன்.. படிச்சிருக்கேன்.. படத்துல அவரோட நடிக்கிறதும், அவர் நடிப்பை பக்கத்துல இருந்து பாக்குறதும் புது அனுபவம்.. அவரோட கமிட்மென்டை பார்த்து அசந்துட்டேன். அற்புதமான மனிதர். சூப்பர் ஸ்டார்ங்கிற பந்தா கொஞ்சம்கூட இல்லாம எளிமையா பழகினார். அவர்கிட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன்.
எந்திரன் மாதிரியான ஒரு பிரமாண்டமான படத்தை எடுக்கணும்னா அது கலாநிதி மாறனால் மட்டும்தான் முடியும்னு ஷங்கர் சொல்லுவார்.. அது எவ்வளவு கரெக்ட்னு படம் பார்க்கும்போது ஒவ்வொருத்தரும் உணருவாங்க.. சன் பிக்சர்ஸ் பேனர்ல வொர்க் பண்ணினது எனக்கு பெருமையா இருக்கு.. இந்திய சினிமா வரலாற்றுல எந்திரன் கண்டிப்பா ஒரு மைல்கல்.. இதுல நடிச்ச அனுபவங்கள் என்னிக்குமே எனக்கு மறக்காது..
The Advertising Network |
எந்திரன் இசை அனுபவம் பற்றி ஏ.ஆர்.ரகுமான்
இசைப்புயல் ரகுமான் அதிகம் பேசாதவர். தனது இசை பேசப்பட வேண்டும் என எதிர்பார்ப்பவர். ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக கருதி கடுமையாக
அனுக்ஹா, சிம்பு வானம் திரைப்பட லேட்டஸ்ட் ஹாட் Photos
உழைப்பவர். அதனால்தான் இரட்டை ஆஸ்கர் விருதுகளை வென்றெடுக்க முடிந்தது. அப்படிப்பட்ட செயல்வீரர்களுக்கு பேச நேரம் கிடைக்காதுதான். ஆனாலும், ரஜினியும் ஷங்கரும் எந்திரன் பட தயாரிப்பில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டதை சுட்டிக் காட்டி, அடுத்ததாக உங்கள் பேட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என சொன்னதும் கூச்சத்துடன் புன்னகைத்தார். அப்போது சிதறிய முத்துக்கள்..
எந்திரன் படத்துல எல்லாமே பிரமாண்டமா இருக்கும்னு தெரிஞ்சுகிட்டேன். பாடல்கள் ஒவ்வொன்னையும் ஒரு வகையான உணர்வோட படமாக்கி இருக்கார் ஷங்கர். படத்தோட மையக் கருத்துக்கு பின்னணி இசையும் பொருத்தமா அமையணும்னு அவர் எதிர்பார்த்தார். படத்துல ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிகள் நிறைய இருக்குறதனால ரசிகர்கள் ஒன்றி போயிடுவாங்க.. அந்த இடத்துல சவுண்ட் பெருசா இருந்தாதான் கவனிப்பாங்க.. ஸோ, பெருசா செய்யணும்னு ஆசைப்பட்டோம்.
அதனால என்ன ஆச்சுன்னா, லண்டன் சென்னை மும்பைனு மூணு இடத்துல பின்னணி இசை சேக்குற மாதிரி ஆயிருச்சு.. அதுக்கு ரொம்ப செலவாகும்னு சொன்னோம். சன் பிக்சர்ஸ் தயங்காம அதுக்கு ஏற்பாடு பண்ணினாங்க.. அதுக்கு நன்றி சொல்லணும். லண்டன்ல பாத்தீங்கன்னா 100 இசைக் கலைஞர்களை வச்சு ரெக்கார்ட் பண்ணிருக்கோம். அங்க டோல் பவுண்டேஷன்னு சொல்லிட்டு ஃபேமஸான ஒரு டோல் குரூப் இருக்கு. அவங்க இந்த படத்துக்கு வேலை செஞ்சுருக்காங்க.
ரொம்ப தள்ளிப்போக கூடாது, படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணணும்னு சொன்னதால கடுமையா வேலை செஞ்சிருக்கோம்.. சீக்கிரமாவும் முடியணும் ரொம்ப நல்லாவும் வரணும்னா அவ்ளோ உழைச்சாதான முடியும்.. அந்த வேலை நடந்தப்ப ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் தூங்கினோம்னா நீங்களே பார்த்துக்குங்க.. ‘சிவாஜி‘ படம் பண்ணும்போது செக்கஸ்லோவியாவுல உள்ள பிராக்ல ரெக்கார்ட் பண்ணினோம். அங்க சிம்ஃபனி இசைக் கலைஞர்கள் கிடைப்பாங்க. ஆனா, எந்திரன்ல இன்னும் ஒரு ஸ்டெப் மேல போய், பிராஸ்ங்கற இசைக்குழுவை பயன்படுத்தியிருக்கோம். பாடல்கள் எல்லாமே பிரமாண்டமா பிரமாதமா வந்திருக்கு. லண்டன்ல இருக்கிற பிராஸ் செக்ஷன், என்னோட ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப் இவங்கல்லாம் நிறைய ஹெல்ப் பண்ணிருக்காங்க. இதுதவிர நிறைய மாடர்ன் டெக்சர்ஸ் மியூசிக் பண்ணியிருக்கோம். நீங்க எல்லாருமே ரொம்ப ரசிப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு..
The Advertising Network |
அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு எந்திரனை புஸ் வாணமாக்குமா ?
எந்திரன் திரைப்படத்திற்கு மக்கள் அலைமோதுவது போல இதற்கு முன்னர் எந்தத் தமிழ்ப்படத்திற்கும்
அனுக்ஹா, சிம்பு வானம் திரைப்பட லேட்டஸ்ட் ஹாட்
அலை மோதியது கிடையாது. டென்மார்க்கில் 150 குறோணருக்கு ஒரு டிக்கட் விலை போகிறது. அதாவது இந்திய ரூபாய் 1300 ஆக விற்பனையாகிறது. புலம் பெயர் நாடுகளில் இப்படத்தை வாங்கியோர் ஒன்றுக்கு ஏழு மடங்கு இலாபம் சம்பாதிப்பார்கள் என்று கருதப்படுகிறது. வெளிநாடுகளைப் பொறுத்தவரை எந்திரன் புஸ்வாணமானாலும் பிரமாண்டமான சாதனை படைத்தாலும் ஒன்றுதான். படத்தை வாங்கியவர்கள் இலாபம் பார்த்துவிட்டார்கள், இனி பார்ப்பவர்கள் கைகளை தட்டி மகிழ்ந்தாலும், அதே கைகளால் வயிற்றிலடித்து கதறினாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஆனால் ஒரு படத்திற்கு அளவுக்கு மீறி மக்கள் ஆர்வம் காட்டுவதே எந்திரனுக்கு ஆபத்தாகியுள்ளது. அளவு மீறிய எதிர்பார்ப்பு நிலவுவதால் படம் ரசிகர் மத்தியில் புஸ்வாணமாகினாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்கிறார்கள் அனுபவஸ்தர்கள். இந்தப்படம் புஸ்வாணம் ஆகும் என்ற கோணத்தில் இதுவரை யாருமே நினைப்பை நகர்த்தவில்லை என்கிறார்கள் மறுசாரர்.
The Advertising Network |
எந்திரன் சிறப்புக் காட்சி!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், உலகமே ஆவலுடன் பார்க்கக் காத்துக் கிடக்கும் எந்திரன் படத்தின்
அனுக்ஹா, சிம்பு வானம் திரைப்பட லேட்டஸ்ட் ஹாட்
சிறப்புக் காட்சி நாளை மாலை சென்னை எஸ்கேப் சினிமாவில் நடைபெறுகிறது. மிக மிக முக்கிய விஐபிக்கள் மட்டுமே பங்கேற்கும் இந்தக் காட்சி, இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது (நாம் கடந்த வாரமே வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்!). இந்தக் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் உள்பட மிக முக்கியமானவர்கள் பங்கேற்கிறார்கள். ராயப்பேட்டையில் சத்யம் சினிமாஸுக்கு சொந்தமான புதிய மல்டிப்ளெக்ஸான எஸ்கேப் சினிமாவில் இந்தக் காட்சி நடக்கிறது.
திரையுலக, அரசியல் விவிஐபிகளுக்காக ஒரு சிறப்புக்காட்சி வெள்ளிக்கிழமை மாலை சத்யம் திரையரங்கில் நடக்கிறது. இந்தக் காட்சியிலும் ரஜினி பங்கேற்று அனைவரையும் வரவேற்கிறார். முன்னதாக அவர் ஹைதராபாதில் நடக்கும் பிரிமியர் காட்சியில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. மும்பை சிறப்புக் காட்சியில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்பார் என்று தெரிகிறது
The Advertising Network |
Minggu, 26 September 2010
Sabtu, 25 September 2010
''''எந்திரன்'''' முன்பதிவு - ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கியது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ள
படம் 'எந்திரன்'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டன. இந்திய சினிமாவின் பிரமாண்ட படம் என்பதால் உலகம் முழுவதும் இப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதி எந்திரன் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 ந¤மிடங்களில் ஒரு வாரத்துக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. ஹாலிவுட் படங்களைவிட டிக்கெட் கட்டணம் அதிகமாக இருந்தும் பத்து நிமிடங்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற¢பனை ஆனது இதுவே முதல் முறை என அங்குள்ள தியேட்டர் அதிபர்கள் வியந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை முதல் Ôஎந்திரன்Õ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இன்று முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று இரவு முதலே தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். 'நாளைக்குரிய டிக்கெட்டை இப்போதே கொடுத்துவிடுங்கள். இல்லாவிட்டாலும் கட்டணத்தை பெற்றுக் கொண்டு, பதிவு செய்துகொள்ளுங்கள். டிக்கெட் நாளைக்கு தாருங்கள்' என ரசிகர்கள் அன்புத் தொல்லை தர ஆரம்பித்தனர். தியேட்டர் மேனேஜர்கள் ரசிகர்களிடம் பேசி அவர்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து இன்று அதிகாலை 4 மணிக்கே தமிழகம் முழுவதும் தியேட்டர் வாசலில் ரசிகர்கள் திரண்டனர்.
இன்று காலை முன்பதிவு தொடங்கும்போது கட்டுக்கடங்காத கூட்டம் தியேட்டர்களில் அலைமோதியதால் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னையில் சத்யம், உதயம் தியேட்டர்களில் அதிகாலையிலேயே ரசிகர்கள் பெருமளவில் குவிந்தனர். முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அபிராமி தியேட்டரில் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. 20 நிமிடங்களில் 8 நாளுக்கான டிக்கெட்டுகள் புக் ஆகிவிட்டது. இதே போல¢ சத்யம், ஐநாக்ஸ், பிவிஆர், அபிராமி தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டது. ஆன¢லைன் முன்பதிவிலும் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. மதுரை, திருச்சி, சேலம், கோவை, வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் புக் ஆயின. டிக்கெட் முன்பதிவில் இதுவரை எந்த இந்திய படமும் இத்தகைய சாதனைகளை புரிந்ததில்லை என தியேட்டர் அதிபர்கள் கூறினர்.
Kamis, 23 September 2010
தமிழகத்திலும் எந்திரனுக்கு முன்பதிவு துவங்கியது!
வரும் அக்டோபர் 1-ம் தேதி சென்னை யில் 32 திரையரங்குகளிலும், சென்னை புறநகர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் எந்திரன் படம்
வெளியாகிறது. அண்ணா சாலையில் மட்டும் 12 திரையரங்குகளில் எந்திரன் திரையிடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் எந்திரன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2250 பிரிண்டுகளுடன் 3000 அரங்குகளில் திரை விருந்து படைக்கவிருக்கிறது எந்திரன்.
அமெரிக்காவில் நேற்று முன்தினம் எந்திரனுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் ஒருவாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
இந்த நிலையில் எந்திரனுக்கு தமிழகத்தில் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் முன்பதிவு இப்போதே ஆரம்பித்துவிட்டது. பொதுவாக ரிலீஸுக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்புதான் சென்னையில் முன்பதிவு துவங்கும்.
ஆனால் எந்திரன் வெளியாக 10 நாள் இருக்கும்போதே, சென்னையில் அபிராமி 7 நட்சத்திர தியேட்டரில் திங்கள்கிழமை மாலை துவங்கியது. முன்பதிவு பற்றிய அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. டிக்கெட் விலை ரூ 120 மற்றும் 100 மட்டுமே.
புதன்கிழமை காலை நிலவரப்படி, முதல் வாரத்துக்கான டிக்கெட்டுகள் ஒரு சில மட்டுமே இன்னும் உள்ளன. அபிராமி மெகா மாலில் உள்ள மற்ற மூன்று திரையரங்குகளிலும் கூட எந்திரனே திரையிடப்பட உள்ளது. இவற்றுக்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சில திரையரங்குகளிலும் டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சத்யம் போன்ற மல்டிபிளக்ஸ்களில் இன்னும் ஓரிரு நாள்களில் எந்திரனுக்கான முன்பதிவு துவங்கவிருக்கிறது
எந்திரன் கதை வெளியானது ஷங்கர்,கலாநிதிமாறன் அதிர்ச்சி!
எந்திரன் கதை நேற்று பிரபல வெப்சைட்டில் வெளியானது ஷங்கரின் இயக்கத்தில் வெளியான படங்களில் முதன் முதலாக படம் வெளியாகும் முன்னரே கதை வெளியானது எந்திரன் மட்டுமே. செய்தி வெளியானது முதல்
ஷங்கர் அலுவலகமும், சன் நெட்வொர்க் அலுவலகமும் அதிகப்படியான டென்சனில் இருக்கிறார்கள்.இது பற்றி தினத்தந்தி மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ஷங்கரிடம் பேட்டி காண தொடர்பு கொள்ள, அவர் மறுத்து விட்டார்.
சரி எந்திரன் கதை என்ன?
விஞ்ஞானி ரஜினி 10 வருடங்களாக கடுமையாக போராடி,தன்னைவிட 100 மடங்கு அறிவிலும்,திறமையிலும் மேன்பட்ட எந்திரனை உருவாக்குகிறார்.அந்த எந்திரன் 10 செகண்டில் ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்து விடும்.அனைத்து விதமான சண்டைகளும் போடும்.அனைத்து விதமான நடனங்களும் ஆடும்.அனைத்து மொழிகளும் பேசும்.விஞ்ஞானி ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் காதலர்கள்.அவர்கள் காதல் புரிவதை ரோபோ ரஜினி ரசிக்கிறார்.கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்வர்யாராயையும் ரசிக்கிறார்.
பிறகு உருகி உருகி காதலிக்கிறார்.ஐஸ்வர்யாராயிடம் சென்று தன் காதலை வெளிப்படுத்துகிறார்.அவர் அதிர்ச்சியுடன் அவருக்கு அறிவுரை சொல்கிறார்.நீ ஒரு எந்திரன்.நீ என்னை காதலிக்க முடியாது. நாம் சேர்ந்து வாழ முடியாது என சொல்ல ..எந்திரன் ரஜினி ஒத்துக்கொள்ள வில்லை.ஸ்முன்னை விட தீவிரமாக காதலிக்கிறார்.விஞ்ஞானி ரஜினிக்கு இது தெரிந்ததும் கடுமையாக எதிர்க்கிறார்.இது நீ எனக்கு செய்யும் துரோகம்.உன்னை உருவாக்கியவன் நான்.எனக்கே துரோகம் செய்கிறாயா.. என ஆத்திரப்படுகிறார்.
அதற்கு எந்திரன்,மன்னிக்க வேண்டும்.நீங்கள் என்ன சொன்னாலும் நான் காதலிப்பதை கைவிட மாட்டேன் என சொல்ல விஞ்ஞானி ரஜினி திகைக்கிறார்.இதற்கிடையில் உடனே நாம் திருமணம் செய்ய வேண்டும் என ஐஸ்வர்யாராய் அவசரப்படுத்த நான் உருவாக்கிய எந்திரனை கண்டு நீ,பயப்படுகிறாயா என சிரிக்கிறார்.
ஐஸ் பிடிவாதத்தால் அவசர திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்கிறார்.அதிர்ச்சி தரும் திருப்பமாக திருமண மண்டபத்தில் நுழைந்த எந்திரன் அனைவரையும் அடித்து நோறுக்கி விட்டு ஐஸ்வர்யாராயை கடத்த விஞ்ஞானி ரஜினி திகைப்புடன் பார்க்க அவரது நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைக்கிறார்எந்திரன் ரஜினி.
-இடைவேளை-
இதற்கிடையில் வில்லன் விஞ்ஞானி ரஜினியின் எந்திரன் ஃபார்முலாவை கைப்பற்றுகிறார்.அதன் மூலம் எந்திரனை தன் வசப்படுத்துகிறார்.சட்ட விரோத செயல்களுக்கு எந்திரனை பயன்படுத்துகிறார்.இதன் பிறகு தான் படம் ரொமாண்டிக் மூடிலிருந்து ஆக்சன் அதகளத்துக்கு மாறுகிறது.
சென்னையை அழிக்க வில்லன் குரூப் எந்திரனுக்கு தரும் அசைன்மெண்டை எந்திரன் நிறைவேற்றியதா..ஐஸ்வர்யராயை எந்திரனிடமிருந்து விஞ்ஞானி ரஜினி எப்படி காப்பாற்றினார் விஞ்ஞானி ரஜினி எந்திரனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாரா என்பது தான் கதை
Langganan:
Postingan (Atom)

















