Tampilkan postingan dengan label ஐஸ்வர்யாராய். Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label ஐஸ்வர்யாராய். Tampilkan semua postingan
Jumat, 29 Oktober 2010
Selasa, 12 Oktober 2010
புரட்சித்தலைவரையே மிஞ்சிய எந்திரன் ஐஸ்வர்யாராய்..
நம்ம புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையே எந்திரனில் வந்த ஐஸ்வர்யாராய் முந்திவிட்டாரென சென்னை
ரசிகர் ஒருவர் உதயம் தியேட்டரின் முன் சிரித்தபடியே கூறி அனைவர் கவனத்தையும் தொட்டார். பொதுவாக புரட்சித்தலைவருக்கு கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சிறிய காயம் கையில் ஏற்படும். அதைப் பார்த்தவுடன் பாயும்புலியாகி பகைவர்களை அழித்துவிடுவார் தலைவர். ஆனால் எந்திரனில் எத்தனையோ ஆயிரம் போலீசார் துப்பாக்கிகளால் சுட்டும், கார்களில் அடித்துப் புரண்டும் ஐஸ்வர்யாராய்க்கு சிறிய காயம்கூட வரவிடாமல் காப்பாற்றிவிட்டார் நம்ம ஷங்கர். உலக அழிகி காயப்பட்டால் அமிதாப்பச்சனுக்கு பிடிக்காது என்பதால் ஐஸ்வர்யாராயை காப்பாற்றியது ஷங்கரின் திறமையே என்று மற்றவர் கூற அட போய்யா உலக அழகின்னா துப்பாக்கிக் குண்டே விலகித்தான் போகும்யா என்றார் இன்னொரு ஆட்டோக்காரர்.
நன்றி – தினக்குயில்
Minggu, 03 Oktober 2010
திருமணத்துக்கு பிறகும் எனக்கு வரவேற்பு இருக்கிறது-ஐஸ்வர்யா ராய்
திருமணத்துக்கு பிறகும் எனக்கு வரவேற்பு இருக்கிறது. அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். உலக
இலவச Magazine Total Film Magazine November
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது இருந்த அதே அழகுடன் இப்போதும் இருக்கும் ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டின் பிஸியான காஸ்ட்லி நடிகை. தற்போது ஆக்ஷன் ரிப்யோ, குஜாரிஸ் ஆகிய இந்திப்படங்களில் நடித்து வரும் அவர் அளித்துள்ள பேட்டியில், நம் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நடிகைகளால் திருமணத்திற்கு முன்பு வரைதான் நாயகியாக வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. என்னைப் பொறுத்த வரை திருமணத்திற்கு முன்பு இருந்த வரவேற்பு திருமணத்திற்கு பிறகும் இருக்கிறது.
டைரக்டர்களும் எந்தவித பயமும் இல்லாமல் பிரமாண்ட படங்களில் நடிக்க வைக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து நடிக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடிப்பேன். எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. இதனால்கூட எனது படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கலாம் என்று கருதுகிறேன், என்று கூறியுள்ளார்.
ராவணன் படம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஐஸ், மணிரத்னம் சாரின் இயக்கத்தில் நடித்த ராவணன் படம் தோல்வி அடைந்தது. படத்தில் எனக்கு அளித்த பாத்திரத்தில் நன்றாக நடித்தேன். அதில் மன நிறைவு இருந்தது.
ஆனால் ரசிகர்கள் இப்படத்தை ஏற்கவில்லை. எந்த படமும் வெற்றி பெற வேண்டுமானால் ரசிகர்களுக்கு கதை பிடிக்க வேண்டும். அவர்கள் அளிக்கும் தீர்ப்பை நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
Kamis, 02 September 2010
எந்திரன் அமெரிக்க விநியோக உரிமையைப் பெற்ற FICUS ‘மூவீஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘எந்திரன் – தி ரோபோ’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளின் அமெரிக்க விநியோக உரிமையை வாங்கியுள்ளது
‘பிகஸ் மூவீஸ்’நிறுவனம்.
தெலுங்குப் படங்களை வெளிநாடுகளில் விநியோகிப்பதில் முன்னணியில் உள்ள நிறுவனம் இது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான அனைத்துப் படங்களையுமே இந்த நிறுவனம்தான் வெளிநாடுகளில் விநியோகித்துள்ளது. மிகப் பெரிய விலைக்கு இந்த உரிமையை சன் பிக்சர்ஸ் விற்றுள்ளது.
இதுகுறித்து பிகஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எந்திரன் தமிழ்ப் படம் மற்றும் அதன் தெலுங்கு பதிப்பான ரோபோ ஆகியவற்றின் அமெரிக்க உரிமையை பிகஸ் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பெருமைக்குரிய இந்தப் படத்தை விநியோகிக்கும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
சூப்பர் ஸ்டார் ரஜினி – ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள விஞ்ஞானப் படம் எந்திரன் – தி ரோபோ. தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் முதல் விஞ்ஞானப் படம். உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை இந்தப் படத்தில் ஒருங்கிணைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். மாட்ரிக்ஸ், தி போர்பிட்டன் கிங்டம் போன்ற படங்களின் ஸ்டன்ட் இயக்குநர் யான் வூ பிங்தான் எந்திரன் சண்டைப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர். அவருடன் பீட்டர் ஹெயினும் இணைந்துள்ளார்.
ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2, ஜூராஸ்ஸிக் பார்க் என ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் பிரமிக்க வைத்த ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோ எந்திரனுக்கு அனிமேட்ரானிக்ஸ் பணிகளைச் செய்துள்ளது.
ரத்னவேலுவின் உயர்தர ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங் எல்லாமே சிறப்பான முறையில் இணைந்த படம் இது. இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு ராஜூ சுந்தரமும் க்ளாடியா ப்ரக்மானும் இணைந்து நடனம் அமைத்துள்ளனர்.
படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பணிகளை ஹாலிவுட்டின் லைட் அண்ட் மேஜிக் நிறுவனம் செய்துள்ளது.அவதார், ஸ்டார் வார்ஸ், டைடானிக் போன்ற மெகா ஹிட் படங்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்தவர்கள் இந்த நிறுவனத்தினர்தான். படத்தின் மொத்த பட்ஜெட்டில் 40 சதவீதம் ஸ்பெஷல் எஃபெக்டுக்காகவே செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வெளியாகும் முதல் உலக சினிமா ரஜினியின் எந்திரன். இந்த சிறப்பான படத்தை வெளியிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கக் காரணமாக
Langganan:
Postingan (Atom)







