Tampilkan postingan dengan label தனுஷ். Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label தனுஷ். Tampilkan semua postingan
Sabtu, 06 November 2010
பக்குவப்பட்ட தனுஷ் : பாராட்டு டைரக்டர்
தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கம் “உத்தமபுத்திரன்” படத்தில் தனுஷூக்கு பெரிய அளவில் வசன காட்சிகளே கிடையாதாம்.
காரணம் படத்தில் பாக்யராஜ் உள்ளிட்ட இரண்டு டஜன் நடிகர்கள் இருப்பதால் ஒரு காட்சியில் ஒருத்தருக்கு ஒரு வரி டயலாக் என்றாலும் கூட ஒவ்வொருவரும் ஒரு வரி பேசி முடித்தாலே அந்த காட்சி முடிந்து விடும் என்கின்ற தனுஷ், நிறையவே பக்குவப்பட்டிருக்கிறார் என்கிறது கோலிவுட்.
இது ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் தனுஷோ இயக்குநர் ஜவஹரை பாராட்டோ பாராட்டு என்று பாராட்டுகிறார். கூடவே இயக்குநர் மித்ரன், ஜவஹரிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேனோ அதை அவர் மிகச் சரியாக செய்து விடுவதால் தான் நானும் அவரும் “யாரடி நீ மோகினி”, “குட்டி” ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் இணைந்திருக்கிறேதம்.
இயக்குநர்களுக்கும் ஹீரோவுக்கும் ஒரு படம் ஆரம்பமாகி அந்தப்படம் முடிவதற்குள்ளாகவே முட்டிக் கொள்ளும் கோலிவுட்டில் நாங்கள் இருவரும் தொடர்ந்து மூன்றாவது படம் செய்வதற்கு காரணம் மித்ரனின் திறமை தான் எனும் தனுஷ், நான் நடிக்கவருவதற்கு முன்பிருந்தே சுமார் 8 வருட காலங்களாக மித்ரனை அவர் உதவி இயக்குனராக இருந்த போதிருந்தே தெரியும் என்பதால் எங்கள் கூட்டணி தொடர்கிறது என்கிறார்…!!
Jumat, 29 Oktober 2010
Uthama Puthiran Movie trailer
Selasa, 12 Oktober 2010
கார் வாங்கிய விஜய் , தனுஸ்
ஆக்ஷன் படம் ஓடினால் ஆக்ஷன் மேனியா, லவ் சப்ஜெக்ட் ஜெயித்தால் லவ் மேனியா என்று கோலிவுட் ஹீரோக்கள் தங்கள் படங்களின் பாணியை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அதேபோல் தாங்கள் வாங்கும் காரில் எது டாப் கிளாஸ் என்று தேர்வு செய்து வாங்குவதிலும் போட்டி நிலவுகிறது. சொகுசு காரான பிஎம்டபிள்யூ தான் இப்போதைய கோலிவுட்டின் டிரெண்ட். நடிகர் விஜய் சமீபகாலமாக இந்த காரில்தான் வலம் வருகிறார். அதேபோல் தனுஷும் இந்த கார் வாங்கி இருக்கிறார். நடிகைகளில் த்ரிஷா, நயன்தாரா, டைரக்டர்களில் ஷங்கர், லிங்குசாமி ஆகியோர் பிஎம்டபிள்யூ பிரியர்கள். அந்த காரில்தான் ஷூட்டிங் செல்கின்றனர். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவும் அவ்வப்போது கார்களை மாற்றுகிறார்.
Kamis, 07 Oktober 2010
ரிஸ்க் எடுப்பது பிடிக்கும் தனுஷ்
ரிஸ்க் எடுப்பது ரொம்பவும் பிடிக்கும் என்கிறார் தனுஷ்.சமீபத்தில் நடந்த பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அவர் கூறும்போது, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதிதாக செய்ய விரும்புகிறேன். பொல்லாதவன் படத்தில் கிளைமாக்சில்தான் சண்டையே போடுவேன். அதற்காக ஜிம் சென்று சிக்ஸ் பேக் கொண்டு வந்தேன். முதல்முறையாக காமெடி கலந்த ஹீரோ வேடத்தில் நடித்தேன். ஆக்ஷன் இமேஜ் கிடைத்தபோது திடீரென காதல் கதைகளிலும் நடித்தேன். ரிஸ்க் எடுக்கிறீர்களே என்றார்கள். வாழ்க்கையில் பலமுறை ரிஸ்க் எடுத்திருக்கிறேன். ரிஸ்க் எடுப்பது எனக்கு புதிதல்ல. அது எனக்கு பிடிக்கும் என்றார்.
Senin, 04 Oktober 2010
சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்
தீபாவளிக்கு ரத்த சரித்திரம், உத்தமபுத்திரன், சிக்குபுக்கு, வல்லக்கோட்டை, மைனா, “வ” குவார்ட்டர் கட்டிங் ஆகிய 6 படங்கள் ரிலீசாகின்றன. ரத்த சரித்திரம் படத்தில் சூர்யா, இந்தி நடிகர் விவேக் ஓபராய், பிரியாமணி நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இரண்டு தாதாக்கள் சண்டை பற்றிய உண்மை சம்பவத்தை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார்.
“சிக்குபுக்கு” படத்தில் ஆர்யா-ஸ்ரேயா ஜோடி யாக நடித்துள்ளனர். கே.மணி கண்டன் இயக்கியுள்ளார். காதல் கதையாக உருவாகி உள்ளது.
உத்தமபுத்திரன் படத்தில் தனுஷ்-ஜெனிலியா ஜோடியாக நடித்துள்ளனர். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். குடும்ப சென்டிமென்ட் கலந்த காதல் கதை. தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய “ரெடி” படத்தின் ரீமேக்கே இப்படம்.
வல்லக்கோட்டை படத்தில் அர்ஜுன், ஹரிப்ரியா ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
மைனா படத்தில் விதார்த், அமலாபால் ஜோடியாக நடித்துள்ளனர். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். அமலாபால் சிந்துசமவெளி படத்தில் அனாகா என்ற பெயரில் நடித்து பிரபலமானவர். சிறு வயதிலேயே நட்பாக பழகுவார்கள். வளர்ந்ததும் காதல் வயப்படுவதும் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுமே கதை.
“வ” குவார்ட்டர் கட்டிங் காமெடி படமாக உருவாகியுள்ளது. சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். தயாநிதி அழகிரி தயாரித்துள்ளார்.
மேலும் 20 படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. கமல், திரிஷா ஜோடியாக நடிக்கும் மன்மதன் அம்பு படம் டிசம்பர் 10-ந்தேதி ரிலீசாகிறது.
விஜய், அசின் நடிக்கும் காவலன் படம் டிசம்பர் 24-ல் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகிறது. ஜெயம் ரவியின் எங்கேயும் காதல், கார்த்தியின் சிறுத்தை, சிம்பு நடிக்கும் வானம், ஜீவாவின் கோ, சேரன் நடிக்கும் யுத்தம் செய் படங்களும் நவம்பர், டிசம்பர் மாதங்களில ரிலீசாகிறது.
Jumat, 17 September 2010
ஹன்சிகாவுக்கு கடும் காய்ச்சல்
தனுஷுடன் மாப்பிள்ளை, விஜய்யுடன் வேலாயுதம், ஜெயம¢ ரவியுடன் எங்கெங்கும் காதல் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி.திடீரென கடும் காய்ச்சல¤ல் அவதிப்படுகிறாராம் ஹன்சிகா.
தனுஷுக்கு டைபாய்டு காய்ச்சல். ஆஸ்பத்திரியிலிருந்து இப்போதுதான் வீடு திரும்பியுள்ளார். எனக்கும் இப்போது காய்ச்சல் வாட்டி வதைக்கிறது. எனக்கு தெரிந்து பலர் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். மோசமான சீசன்தான் இதற்கு காரணம் என நினைக்கிறேன் என்கிறார் ஹன்சிகா.இந்நிலையில் காய்ச்சல் காரணமாக ஓய்வு எடுத்து வரும் தனுஷை சந்தித்து உடல் நலம் விசாரித்திருக்கிறார் மனிஷா கொய்ராலா. மாப்பிள்ளை படத்தில் தனுஷின் மாமியாராக அவர் நடிக்கிறார்.
Kamis, 02 September 2010
முடிந்துவிட்ட தனுஸ் படங்கள்
வாடி வாசலை திறந்துவிடுவாங்களா என்று வரிசையா நிற்குது காளைகள். ஆனால் எந்த காளை முந்தி வரும் என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். காளைக்கும் தனுஷ§க்கும் என்ன சம்பந்தம்? நாம்
சொன்ன காளைகள் எல்லாம் தனுஷ் நடிக்கும் படங்கள்தான். உத்தம புத்திரன், மாப்பிள்ளை, சீடன், ஆடுகளம் ஆகிய அத்தனை படங்களும் முடிந்துவிட்டன. பின்னாலேயே வந்த செல்வராகவன் கூட மாலை நேரத்து மயக்கம் படத்தை முக்கால் வாசி முடித்து விட்டாராம். (பார்றா) இந்த நேரத்தில் தனுஷ்ஷை முதலில் நடிக்க வச்சது நாங்கதான். எங்க படம்தான் முதலில் வரணும் என்று போட்டி போட ஆரம்பித்திருக்கிறார்கள் பணம் போட்ட முதலாளிகள்.
நடிக்கறதோட என் வேலை முடிஞ்சுது. ரிலீஸ் செய்யுற வேலை உங்களுடையது. நம்மள ஆட்டத்துல சேர்க்காதீங்கய்யா என்கிறாராம் தனுஷ். எல்லாருமே எங்க படம்தான் முதலில் வரணும் என்று கைது£க்கி கோஷம் போட காத்திருப்பதால் இன்னும் சிறிது நாளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்கிறது கோடம்பாக்கத்து குருவி.
Langganan:
Postingan (Atom)











