Tampilkan postingan dengan label பாலிவுட். Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label பாலிவுட். Tampilkan semua postingan

Sabtu, 30 Oktober 2010

ஹருத்திக் ரோஷனுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 2 கோடி


இப்போது பெரும்பாலான முன்னணி இந்தி சேனல்களில் டான்ஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. சேனல்களுக்கிடையே பெரும் போட்டியை வெகுவாக
அதிகரிப்பதும் இந்த டான்ஸ் நிகழ்ச்சிகள்தான். போட்டியின் உச்சக்கட்டமாக இன்னொரு முன்னணி டி.வி. நிறுவனமும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் "ரியாலிட்டி டான்ஸ் ஷோ ஒன்றை ஆரம்பிக்க உள்ளது.  இந்த  நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷனிடம் பேசியுள்ளனர். 26 எபிசோடுகளாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. எல்லா எபிசோடுகளிலும் ஹிருத்திக் பங்கேற்பாராம். இந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்காக ஹருத்திக்குக்கு அளிக்க இருக்கும்  சம்பளம் எவ்வளவு தெரியுமா? 


affiliate program


          தொழிலதிபருடன் தபு 
  • illiyana Hotunseen images
    2 கோடி ரூபாய்! அதாவது ஒரு நாளுக்கு சம்பளம் ரூ.2 கோடி.

    இதற்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கோன் பனேகா குரோர்பதியில் முதல் பாகத்தில் அமிதாப் பச்சன் 80 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார். பின்னர் நான்காவது பாகத்தில் பங்கேற்றபோது அவரது சம்பளம் ஒன்றரை கோடி ரூபாயாக உயர்ந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியதற்காக ஷாருக்கான் ஒன்றரை கோடியும், சல்மான்கான், அக்ஷய் குமார் ஆகியோர் தலா ஒரு கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு எபிசோட் நிகழ்ச்சிக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பெறும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை ஹிருத்திக் ரோஷன் பெற்றுள்ளார். 

Jumat, 29 Oktober 2010

ப்ரியங்காவை திருமணம் செய்தார் விவேக் ஒபராய்

பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபராய்க்கும் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரியங்காவுக்கும் இன்று காலை
11 மணியளவில் திருமணம் நடைபெற்றது. நடிகர் விவேக் ஒபராய் தொடர்ந்து காதல் தொடர்பான சர்ச்சைகளில் அடிப்பட்டுவந்தார். நடிகைகள் நீரு பாஜ்வா, ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார்.
இந்நிலையில் விவேக் ஒபராய்க்கு, கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வா-நந்தினி தம்பதிகளின் மகள் பிரியங்காவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மணமகள் பிரியங்கா, லண்டனில் பி.பி.எம். பட்டப்படிப்பு படித்தவர். இவருடைய தாய் நந்தினி ஆல்வா பிரபல நடன கலைஞர்.
விவேக் ஒபராய்-பிரியங்கா திருமணம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. பஞ்சாபி மற்றும் மங்களூர் முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

வெளிநாட்டிலும் இவ்வளவு ரசிகரா அதிர்ந்த நடிகை


பாங்காக்கில் துணையின்றி சுதந்திரமாக நடமாட முயன்ற நடிகை கத்ரீனா
கைபை ரசிகர்கள் சூழந்து கொண்டனர். அவர்களிடமிருந்து கத்ரீனாவை போலீசார் மீட்டனர்.
பாலிவுட் புகழ் கத்ரீனா கைப், விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக பாங்காக் சென்றார். அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

Manmadhan Ambu Movie Gallary


தாய்லாந்தில் தானே இருக்கிறோம்… யாருக்குத் தெரியப் போகிறது என்ற நினைப்பில் சுதந்திரமாக வெளியில் போய் வர தயாரானார். ஆனால் ஓட்டல் வாசலுக்கு வந்த போது அங்கு தன்னைப் பார்க்க ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்துபோனார்.
வெளிநாட்டிலும் தனக்கு இவ்வளவு ரசிகர்களா என வியந்த கத்ரீனா, சந்தோஷமாக ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார் ஆரம்பத்தில். ஆனால் மொத்த கூட்டத்தினரும் அவரை நெருக்க, பெரும் சிக்கலாகி விட்டது. ரசிகர்கள் பிடியில் கசங்கிய அவரை ஓட்டல் ஊழியர்களும் பக்கத்தில் ரோந்து சென்ற போலீசாரும் மீட்டனர்.

Senin, 04 Oktober 2010

தமிழில் வருகிறார் மல்லிகா ஷெராவத்


ஹாலிவுட் இயக்குனர் ஜெனிபர் சேம்பர் லிஞ்ச் இயக்கும் படம் ‘ஹிஸ்’. மல்லிகா ஷெராவத் நடிக்கும் இந்த படம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படுகிறது.
இதை, தமிழில் ‘ஸ்...ஸ்...ஸ்’ என்ற பெயரில் ஸ்ரீ திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் ரிலீஸ் செய்கிறது. இந்தி, தெலுங்கு, மலையாளத்திலும் வெளியாகும் இந்த படத்தில், பாலிவுட் நடிகர் இர்பான் கான், நடிகை திவ்யா தத்தா ஆகியோரும் நடிக்கிறார்கள். மனித உருவம் எடுக்கும் பாம்பு பற்றிய கதை என்பதால் அதன் சத்தத்தையே தலைப்பாக்கி இருக்கிறார்கள். மது அம்பாட் ஒளிப்பதிவு, இசை அலெக்ஸாண்டர். வரும் 22&ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

Minggu, 03 Oktober 2010

திருமணத்துக்கு பிறகும் எனக்கு வரவேற்பு இருக்கிறது-ஐஸ்வர்யா ராய்


திருமணத்துக்கு பிறகும் எனக்கு வரவேற்பு இருக்கிறது. அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். உலக
இலவச Magazine  Total Film Magazine November
  டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது இருந்த அதே அழகுடன் இப்போதும் இருக்கும் ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டின் பிஸியான காஸ்ட்லி நடிகை.
தற்போது ஆக்ஷன் ரிப்யோ, குஜாரிஸ் ஆகிய இந்திப்படங்களில் நடித்து வரும் அவர் அளித்துள்ள பேட்டியில், நம் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நடிகைகளால் திருமணத்திற்கு முன்பு வரைதான் நாயகியாக வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. என்னைப் பொறுத்த வரை திருமணத்திற்கு முன்பு இருந்த வரவேற்பு திருமணத்திற்கு பிறகும் இருக்கிறது.
டைரக்டர்களும் எந்தவித பயமும் இல்லாமல் பிரமாண்ட படங்களில் நடிக்க வைக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து நடிக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடிப்பேன். எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. இதனால்கூட எனது படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கலாம் என்று கருதுகிறேன், என்று கூறியுள்ளார்.
ராவணன் படம் பற்றிய ‌கேள்விக்கு பதில் அளித்த ஐஸ், மணிரத்னம் சாரின் இயக்கத்தில் நடித்த ராவணன் படம் தோல்வி அடைந்தது. படத்தில் எனக்கு அளித்த பாத்திரத்தில் நன்றாக நடித்தேன். அதில் மன நிறைவு இருந்தது.
ஆனால் ரசிகர்கள் இப்படத்தை ஏற்கவில்லை. எந்த படமும் வெற்றி பெற வேண்டுமானால் ரசிகர்களுக்கு கதை பிடிக்க வேண்டும். அவர்கள் அளிக்கும் தீர்ப்பை நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

Sabtu, 02 Oktober 2010

முதுகில் ஆட்டோகிராப் போட மறுத்ததால் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை


தனது முதுகில் ஆட்டோகிராப் போட ரன்பீர் கபூர் மறுத்ததால் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்வதாக மிரட்டிய பெண் ரசிகையால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர், நடிகைகளுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுப்பது, ஆட்டோகிராப் வாங்குவது என்பது காலங்காலமாக நடந்து வரும் விஷயம். சில அதீத ஆர்வமுள்ள ரசிகர்கள் நடிகர், நடிகைகளுக்காக எதையும் செய்ய துணிவார்கள். அப்படிதான் நடிந்திருக்கிறது டெல்லியில் ஒரு சம்பவம். நடிகர் ரன்பீர் கபூர் புதுடெல்லியில உள்ள ஷாப்பிங் மால் ஒன்றின் விழாவுக்காக சமீபத்தில் சென்றிருந்தார். அப்போது ஒரு ரசிகை, தனது முதுகில் ஆட்டோகிராப் போடுமாறு ரன்பீரை வற்புறுத்தினார்.

அவரது பாதுகாவலர்கள் அந்த பெண் ரசிகையை தடுத்தனர். இதையடுத்து போட்டோ எடுக்க அனுமதி கேட்டார். அதற்கும் பாதுகாவலர்கள் மறுத்தனர். இதனால் கடுப்பான அந்த ரசிகை, ஷாப்பிங் மாலின் முதல் மாடிக்கு சென்று, கீழே விழுந்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார்.
இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஷாக் ஆனார் ரன்பீர். இதையடுத்து தனது பாதுகாவலர் ஒருவரை அனுப்பி, அவரை கீழே இறங்கி வர சொன்னார். வந்ததும் அவரிடம் சிறுது நேரம் பேசிவிட்டு தனது காருக்கு சென்றார் ரன்பீர். அவரை பின் தொடர்ந்த அந்த ரசிகை தன்னையும் காரில் ஏற்றிக்கொள்ளும்படி கூற, அங்கு கூட்டம் கூடிவிட்டது. ரன்பீரின் பாதுகாவலர்கள் அவரை பிடித்து தள்ளிவிட்டு ரன்பீரை அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தனது பாதுகாவலர்களாக மேலும் சிலரை நியமிக்க முடிவு செய்துள்ளாராம் ரன்பீர்.

தமிழில் நடிக்க எனக்கு ஆசை தீபிகா படுகோனே


தமிழ் படங்களில் நடிக்க ஆசைவந்திருக்கிறது தீபிகா படுகோனேவுக்கு. ‘‘மாடலாக இருந்தபோது பலமுறை சென்னைக்கு வந்திருக்கிறேன். மெரீனா
பீச் ரொம்ப பிடிக்கும்.  தெலுங்கு படத்தில் நான் நடித்திருந்தாலும் தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதேபோல் சூர்யா, விக்ரம் ஆகியோருடனும் நடிக்க ஆசை உள்ளது. தற்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறேன். நடிப்பில் பிஸியாக இருப்பதால் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை. அதனால் சமீபத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அவர்களுடன் புறப்பட்டுவிட்டேன். இப்படியொரு பயணம் என்பது எனது நீண்டநாள் திட்டம். அது இப்போதுதான் நிறைவேறியது. அதேநேரம் புத்தகம் படிக்கவும், தோழிகளுடன் விளையாடவும் கொஞ்ச நேரத்தை செலவழிக்கிறேன்’’ என்கிறார் தீபிகா.

Minggu, 26 September 2010

லண்டனுக்கு செல்ல சமீராவுக்கு விசா மறுப்பு


அனில் கபூர், அஜய் தேவ்கனுடன் சமீரா ரெட்டி நடிக்கும் இந்தி படம் 'தேஸ்'. இப்பட ஷூட்டிங்கை இம்மாத இறுதியில் லண்டனில் நடத்த திட்டமிட்டனர். இதற்காக சமீரா ரெட்டி உட்பட படக்குழுவினர் லண்டன் பறக¢க விசாவுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு
விசா மறுக்கப்பட்டுள்ளது. "விசாவுக்கு விண்ணப்பித்ததில் சில குளறுபடி நடந்துவிட்டது. ஏஜென்ட் மூலமாக இல்லாமல் நாங்களே விண்ணப்பித்தோம். இதில் சில ஆவணங்கள் மிஸ் ஆகிவிட்டதால் விசா கிடைக்க வில¢லை. விரைவில் விசா கிடைத்துவிடும். அடுத்த மாதம் லண்டனில் ஷூட்டிங் நடத்துவோம்" என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்தனர். தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு சொன்னாலும் அடுத்த மாதம் ஷூட்டிங் நடத்துவதில் சிக்கல் உள்ளதாம். அஜய் தேவ்கன், சம¦ரா ரெட்டி வேறு படங்களுக்கு அடுத்த மாதத்தில் கால்ஷீட் ஒதுக்கியுள்ளனர். இதனால் 'தேஸ்' பட ஷூட்டிங் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.

Jumat, 24 September 2010

அசின் வேடத்தில் கரீனா


பாடிகார்ட்Õ மலையாள படத்தின் ரீமேக்கான ÔகாவலனிÕல் நடித்து வருகிறார் அசின். நயன்தாரா நடித்த வேடத்தில் அசின் நடிக்கிறார். இதே படத்தை இந்தியிலும் இயக்க உள்ளார் சித்திக். இதில் சல்மான் கான் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டது. சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருப்பதால் அதில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டார். இப்போது அந்த வேடத்தில் கரீனா கபூர் நடிக்க உள்ளார்.

"மலையாள படத்திலிருந்து நிறைய மாற்றங்கள் செய்து தமிழில் இயக்குகிறேன். இந்தியிலும் நிறைய மாற்றங்கள் செய்ய உள்ளேன். தமிழ் பட ஷூட்டிங் முடிந்ததும் இந்திக்கு செல்கிறேன். அப்படத்துக்கு தலைப்பு இன்னும் முடிவாகவில்லை" என்றார் இயக்குனர் சித்திக்.

இந்திய சினிமா மாறி வருகிறது : ஆமிர்கான்!


இந்திய சினிமா இப்போது மாற்றமடைந்து வருகிறது என்றார் அமிர்கான். ஆமிர்கானின் ‘3 இடியட்ஸ்’, ‘பீப்லி லைவ்’ படங்கள் ஹிட்டானதை தொடர்ந்து ஆமிர்கான் கூறியதாவது: இந்திய சினிமா மாற்றமடைந்து வருகிறது. ரசிகர்கள்
புதிய கதைகளை வரவேற்க தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்க முடியாது. வித்தியாசமான கதைகளையும் படங்களையும் ரசிகர்கள் விரும்புவதை வரவேற்கிறேன். நான் தயாரித்துள்ள ‘பீப்லி லைவ்’ லண்டனில் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தியாவில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அனுஷா ரிஷ்வி இயக்கியுள்ள முதல் படம் இது. கதையை சினிமாவாக்கும் முயற்சியில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். இவ்வாறு ஆமிர்கான் கூறினார்.

Selasa, 21 September 2010

வசூல் சாதனை படைத்தது சல்மானின் ‘தபாங்’


சல்மான் கான் நடித்த ‘தபாங்’ திரைப்படம் கடந்த வாரம் 10ந் தேதி வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஒரே வாரத்தில் மட்டும் ரூ.48
கோடி வசூல் செய்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது. அமீர்கானின் 3 இடியேட்ஸ் படம் ரூ.41 கோடி(ஒரு வாரத்தில்) வசூல் செய்தது. தற்போது 3 இடியேட்ஸ் படத்தின் சாதனையை சல்மானின் ‘தபாங்’ முறியடித்துள்ளது. போலீஸ் அதிகாரியாக வரும் சல்மான் ஆக்ஷன் ப்ளஸ் நக்கல் கலந்த கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். சல்மானின் ரசிகர்கள் ‘தபாங்’ படம், 200 சதவீதம் திருப்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும் தபாங் செம ஹிட் ஆகியுள்ளது.

அதிகமாக வருமான வரி கட்டுபவர் பட்டியலில் ஷாரூக்!


பாலிவுட்டில் அதிமாக வருமான வரி கட்டுபவர் பட்டியலில் ஷாரூக்கான் முதலிடத்தில் உள்ளார். கடந்த வருடம் அக்ஷய் குமார் அதிகமாக வருமான
வரி கட்டியவராக இருந்தார். இப்போது ஷாரூக் 5 கோடி ரூபாய் வருமான வரி கட்டியுள்ளார். அக்ஷய்குமார் நான்கரை கோடி ரூபாயும் ஆமிர்கான் நான்கு கோடி ரூபாயும் வருமான வரி கட்டியுள்ளனர். சல்மான்கான் 2 கோடியும், கேத்ரினா கைஃப் 1.3 கோடியும், ஹிருத்திக் ரோஷன் 50 லட்சம் ரூபாயும் வரி கட்டியுள்ளனர்.

நல்ல காதலனை கடவுள் கண்டுபிடித்து தருவார் : பிரியங்கா



கடவுள் நல்ல காதலனை கண்டுபிடித்து தருவார் என்று பிரியங்கா சோப்ரா கூறினார். பிரியங்கா சோப்ரா, ஷாகித் கபூரை காதலித்து வருவதாக
பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி பிரியங்கா கூறியதாவது: நான் நடித்த பல படங்கள் ஹிட்டாகியிருக்கின்றன. நல்ல படங்களை எனக்கு கடவுள் தந்திருக்கிறார். நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை என்றே நம்புகிறேன். நல்ல காதலனை, கணவனை அவர் கண்டுபிடித்து தருவார். நான் யாரையும் இப்போது காதலிக்கவில்லை. ஷாகித்தை பற்றி கேட்கிறார்கள். என் நடிப்பை, நான் நடிக்கும் படங்கள் பற்றி மட்டும் நான் பேச நினைக்கிறேன். எனது தனிப்பட்ட விஷயங்கள் மற்றவர்களுக்கு தேவையில்லாதது. மீடியாவுக்கு கேட்கும் உரிமை இருக்கிறது. அது உங்கள் உரிமை என்றால் பதில் சொல்லாமல் இருக்க எனக்கு உரிமை இருக்கிறது. இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.

Sabtu, 11 September 2010

சூட்கேசை தூக்கி எறிந்தார் செக்யூரிட்டி : அமீஷா புகார்


கொல்கத்தா விமானநிலையத்தில் சூட்கேசை தூக்கி எறிந்த செக்யூரிட்டி மீது அமீஷா படேல் புகார் தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் அதிகாலையில், கொல்கத்தாவில் இருந்து மும்பை திரும்புதற்காக விமான நிலையம் வந்தார் அமீஷா. பாதுகாப்பு பெண் அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். ஸ்கேன் கருவியில் அவரது சிறிய சூட்கேசை வைத்தார். பின் செக்கப் முடிந்ததும் சூட்கேசை எடுக்க சென்றார். அதற்குள் அங்கிருந்த பெண் காவலர் அந்த சூட்கேசை தூக்கி வேறொரு பக்கம் எறிந்தார். கடுப்பான அமீஷா, அவரிடம் ஏன் எறிந்தீர்கள் என்றார். ‘இந்த பெட்டியை எடுத்தால்தான் அடுத்த லக்கேஜ்ஜை எடுக்க முடியும்’ என்றார் பெண் காவலர். அதற்காக ஏன் எறிய வேண்டும் என்று கேட்டார் அமீஷா. ‘இதுதான் எங்கள் வேலை. நீங்கள் சீக்கிரம் வந்து சூட்கேசை எடுத்திருந்தால் நான் எறிந்திருக்க மாட்டேன்’ என்றாராம் பெண் காவலர். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த மற்ற காவலர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர். சமாதானம் ஆகாத அமீஷா, விமான நிலைய அதிகாரியிடம் புகார் செய்தார். இதுபற்றி அமீஷாவிடம் கேட்டபோது, ‘இந்த சம்பவம் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்றார்.

Rabu, 25 Agustus 2010

செல்போனில் ஆபாச படம் : சோஹா அலிகான் அதிர்ச்சி


இந்தி நடிகர் சைப் அலிகானின் தங்கை சோஹா அலிகான். ஆமிர்கானின் Ôரங் தே பசந்திÕ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். Ôபாய்ஸ்Õ சித்தார்த்தை இவர் காதலித்து வந்தார். திடீரென இவர்கள் காதல் முறிந்தது. இப்போது இந்தி
நடிகர் குணால் கேமுவை காதலித்து வருகிறார். சமீபத்தில் மும்பையிலுள்ள பியூட்டி சலூன் ஒன்றுக்கு சோஹா சென்றிருந்தார். அப்போது அவரை யாரோ செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த படம்தான் இப்போது பாலிவுட்டின் ஹாட் டாபிக். அந்த மர்ம நபர் மூலம் இந்த படம் மும்பையில் பரவிவிட்டது. பியூட்டி சலூனில் சோஹா உடைகளை கழற்றும் காட¢சியும் அரை நிர்வாணமாக அவர் சேரில் அமர்ந்திருக்கும் காட்சியும் இந்த வீடியோவில் ஓடுகிறது. இது பற்றி அறிந்த சோஹா அதிர்ச்சி அடைந்தார். இந்த ஆபாச படம் சம்பந்தமாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

கேத்ரினா நீக்கம் சோனாக்சிக்கு லக்


சல்மான்கான் ஜோடியாக ‘தபங்’ படத்தில் நடித்துள்ளார் சோனாக்சி சிங்ஹா. இவர் இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். இந்த படம் வெளிவரும்
முன்பே சோனாக்சிக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன. சாஜித் நதியவாலாவின் படத்தில் தீபிகா படுகோனே நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது அந்த வாய்ப்பு சோனாக்சிக்கு சென்றிருக்கிறது. ‘தபங்’ ஹிட்டானால் சோனாக்சிக்காக சில படங்களில் இருந்து ஹீரோயின்கள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அப்பாஸ் மஸ்தானின் இத்தாலியன் ஜாப் படத்தில் கேத்ரினா கைஃப் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருந்தார். பிறகு அவருக்கு பதில் சோனம் கபூர் நடிக்கிறார் என்று தகவல். இப்போது அந்த வாய்ப்பு சோனாக்சிக்கு போகும் என்று மும்பை வட்டாரங்கள் தெரிவித்தன.

மனைவியுடன் ஷூட்டிங் : தயக்கத்தில் ஷாரூக்!


இந்தியாவில் வெளி வரும் பெரும்பாலான விளம்பர படங்களில் தோனி, அமிதாப், பிபாஷா பாசு, கஜோல், அமீர் கான் மற்றும் ஷாரூக் கான் இவர்கள் தான் நடித்து வருகின்றனர். இவர்களில் பாலிவுட் சூப்பா ஸ்டாரான ஷாரூக் விளம்பர படங்களில் நடிப்பது மட்டும் தண்ணிபட்டபாடு. ஆனால் ஒரே ஒரு விளம்பர படத்தில் மட்டும் நடிக்க தயக்கம் காட்டினாராம். இதற்கெல்லாம் காரணம் அவரது மனைவி கெளரி தான்.


இதுகுறித்து, தனது ட்விட்டர் தளத்தில் அவர் கூறுகையில், நான் எல்லோரிடமும் நடித்துள்ளேன். ஆனால் என் மனைவியுடன் நடைபெறும் முதல் ஷூட்டிங் என்பதால் எனக்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும், அவருடன்(கௌரி) நடிக்க தயாராகி வருகிறேன் எனக் கூறியுள்ளார். இதையடுத்து அடுத்து வரும் ஷாரூக் படங்களில் அவரது மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார். தன்னுடைய மனைவியுடன் நடிக்க இவ்வளவு தயக்கம் என்றால், தன் பிள்ளைகளுடன் நடிக்க எவ்வளவு தயக்கம் காட்டப் போகிறாரோ? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வில்லனாகிறார் ஹிருத்திக்

ஹீரோவாக நடித்து வரும் ஹிருத்திக் ரோஷன் தனது அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.ஹிருத்திக், பிரியங்கா, ரேகா நடித்து ஹிட்டான படம்
‘கிரிஷ்’. இதை ஹிருத்திக் அப்பா ராகேஷ் ரோஷன் தயாரித்து இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஹிருத்திக், ஒரு வேடத்தில் வில்லனாக நடிக்கிறார். இதுபற்றி படக்குழுவினர் கூறும்போது, ‘ஹிருத்திக் ‘தூம்&2’ படத்திலேயே வில்லனாக நடித்துவிட்டார். இப்போது நடிப்பது ஒன்றும் புதிதில்லை என்றாலும் இந்த கேரக்டர் பேசப்படும் விதமாக இருக்கும்’ என்றனர்.

பிபாஷாவுடன் ராணா ரொமான்ஸ்

'இதுவரை என் வாழ்வில் எந்த பெண்ணும் கிடையாது. அப்படி காதலித்தால் அதை எல்லோருக்கும் சொல்வேன்Õ என்கிறார் தெலுங்கு
நடிகர் ராணா. தமிழில் இவர் விரைவில் அறிமுகம் ஆகிறார்.
அதற்கு முன் இந்தியில் அபிஷேக் பச்சன், பிபாஷா பாசுவுடன் நடித்து வருகிறார். 'பிபாஷாவுடன் காதல் காட்சிகளில் நல்ல புரிதல் இருக்கிறது. அதனால் கெமிஸ்ட்ரியும் நன்றாக ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது' என்கிறார் ராணா.

ரன்பீர் டாட்டூக்கு தீபிகா டாடா


இந்தி நடிகர் ரன்பீர் கபூருடன் காதல் முறிந்ததால் அவரது பெயருடன் கழுத்தில் வரைந்திருந்த டாட்டூவை அதிரடியாக நீக்கிவிட்டார் நடிகை தீபிகா படுகோனே. ஹாலிவுட¢டை போல, ஒரு நடிகை நடிகரை காதலிப்பதும் சில மாதங்களில் அந்த காதல் முறிவதும் பின் இன்னொரு காதலனை நடிகை கைப்பிடிப்பதும் பாலிவுட்டில் சகஜம். இந்தி படங்களில் அறிமுகமானதும் ரன்பீர் கபூருடன் ஒட்டிக்கொண்டிருந்தார் தீபிகா படுகோனே. தாங்கள் காதலிப்பதை இருவருமே வெளிப்படையாக மீடியாவிடம் கூறி வந்தனர். ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றித் திரிந்தனர். அதற்கு முன்பாக கிரிக்கெட் வீரர்கள் டோனி, யுவராஜ் சிங் ஆகியோருடனும் தீபிகாவை இணைத்து கிசுகிசு வந்தது. ஆனாலும் ரன்பீர்&தீபிகா ஜோடி வலுவான நிலையில் இருந்தது. இந்த காதல் திருமணத்தில்தான் முடியும் என பாலிவுட் ஜோதிடர்கள் கணித்தனர்.

ஆனால் அப¢படி நடக்கவில்லை. Ôஅஜப் பிரேம் கி கஜப் கஹானிÕ இந்தி படத்தில் நடித்தபோது கேத்ரினா கைபுடன் நெருக்கமாக பழகினார் ரன்பீர். சல்மான் கானுடன் கேத்ரினாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நேரம் அது. அதனால் ரன்பீர்&கேத்ரினா நெருக்கம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இது தீபிகாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே ரன்பீரை விட்டு அவர் பிரிந்து சென்றுவிட்டார். சில மாதங்கள் தனிமையை விரும்பிய அவருக்கு இப்போது புது பாய் பிரெண்ட் கிடைத்துவிட்டார். அவர் தொழிலத¤பர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா. எந்த விழா, நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இப்போது சித்தார்த¢துடன்தான் வருகிறார் தீபிகா.

இது பற்றி தீபிகாவிடம் கேட்டபோது, Ôஇது பர்சனல் விஷயம். உங்களுக்கு (மீடியாவுக்கு) சொல்ல அவசியம் இல்லைÕ என்றார். இந்த புது காதல் காரணமாக, சுமார் ஓராண்டாக தீபிகாவின் கழுத்தை அலங்கரித்த Ôஆர்.கே.Õ என்ற டாட்டூ இப்போது விடைபெற்றிருக்கிறது. ரன்பீர் கபூர் என்பதைத்தான் ஆர்.கே. என சுருக்கமாக பூக்களுக்கு நடுவே கழுத்து பகுதியில் டாட்டூவாக வரைந்திருந்தார் தீபிகா. கடைசியாக Ôலபங்கே பரிந்தேÕ, Ôகேஹ்லெங்கே ஹம் ஜீ ஜான்சேÕ படங்களில் நடித்தபோது அந்த டாட்டூ தெரியாதபடி கழுத்தை மறைத்துக்கொண்டு நடித்தார். அந்த டாட்டூ பற்றிய விஷயத்தை சித்தார்த்திடம் சொல்லியிருக்கிறார். அவரது ஆலோசனைப்படி அதை நீக்கிவிட்டார் தீபிகா. இது குறித்து கேட்டபோது, Ôஆமாம், டாட்டூவை நீக்கிவிட்டேன்Õ என்று மட்டும் பதிலளித்தார் தீபிகா.