எல்லா தொழிலுக்கும் ஒரு சங்கேத வார்த்தையை பயன்படுத்துவார்கள் புத்திசாலிகள். ஆந்திராவின் போதை கடத்தல் செய்தியிலும் இது வெட்ட
வெளிச்சம் ஆகியிருக்கிறது. போதை பவுடர்களுக்கு அவர்கள் த்ரிஷா, அனுஷ்கா என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. (ஒரு பொட்டலம் அனுஷ்கா கொடுங்க என்று கேட்பார்களோ?) கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நைஜீரிய வாலிபர் ஒருவரை பிடித்து நொங்கெடுத்த போலீசார், அவரிடமிருந்து யார் யார் போதை மருந்துகளை வாங்கி பயன்படுத்தி வந்தார்கள் என்ற தகவலை கறந்திருக்கிறது. இதில்தான் த்ரிஷாவின் பெயரும் இருப்பதாக வதந்தி எழுந்து ஆந்திராவையும் தமிழ்நாட்டையும் சேர்த்து உலுக்கி எடுத்தது. இதையெல்லாம் மறுக்கும் த்ரிஷா, இந்த விவகாரத்தில் என்னை இழுத்தால் நடப்பதே வேறு என்று எச்சரித்துக் கொண்டேயிருக்கிறார். (ஹ¨ம், யாராவது காதுல வாங்கணுமே?) இவரல்லாமல் மேலும் தமிழ், தெலுங்கு நடிகர் நடிகைகளின் பெயர்களை ஆஃப் த ரெக்கார்டாக தெலுங்கு மீடியாக்களிடம் கசியவிட்டிருக்கிறார்களாம் அம்மாநில போலீசார்.
இந்த நிலையில்தான் போதை மருந்துகளுக்கு தனித்தனி பெயர் வைக்கப்பட்ட விபரம் வெளியே வந்திருக்கிறது. இதில் ஒரு போதை பொருளுக்கு கடவுளின் பெயரை வைத்து மதத்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறார்கள் இந்த ஆசாமிகள்.
Tidak ada komentar:
Posting Komentar