Tampilkan postingan dengan label சினி நியூஸ். Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label சினி நியூஸ். Tampilkan semua postingan
Sabtu, 06 November 2010
ஹீரோயினே இல்லாமல் ஒரு படம்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது வித்தியாசம் என்ற பெயரில் எதையாவது வித்தியாசமாக செய்து அசத்துவார்கள். பாடல்களே இல்லாத படம், காதலே
இல்லாமல் காதல் என்பது அவற்றில் சில.
அந்த வரிசையில் தற்போது ஹீரோயினே இல்லாமல் ஒரு படத்தை எடுக்கின்றனராம். முற்றிலும் ஆண்களே இப்படத்தில் நடிக்கப் போகிறார்களாம். அதேபோல ஹீரோவும் படத்தில் கிடையாது.
சாய்குமார்தான் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கப் போகிறார். இவர் தவிர ஆசிஷ் வித்யார்த்தி, காதல் தண்டபாணி என நாற்பது, 50 வயதைத் தாண்டியவர்கள்தான் முக்கிய கேரக்டர்களில் வரவுள்ளனர்.
படத்திற்குப் பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. தமிழ் சினிமாவில் ஹீரோயின் இல்லாமல் உருவாகும் முதல் படம் இது என்கிறார்கள். படத்தை இயக்கப் போவது ரமணா. சுப்பாரெட்டி தயாரிக்கிறார்.
ஹீரோயின் இல்லை என்றாலும் படத்தில் குத்துப் பாட்டு ஏதாவது இடம் பெறலாம் என்று தெரிகிறது. இல்லாவிட்டால் ரசிகர்களுக்கு பெரும் சலிப்பாகி விடும் என்பதால் அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஹீரோயின் இல்லாமல் படம் எடுப்பது வித்தியாசமானதுதான். அதேசமயம், கதையிலும் வெயிட் அதிகம் இருந்தால்தான் படமும் சிறப்பாக வரும் என்பதால் அதற்கேற்ப கதையை வலுவாக்கியுள்ளனராம்.
எல்லாம் சரி, கதையே இல்லாமல் பல படங்கள் வருகிறதே, அதுவும் கூட வித்தியாசம்தானா?
Jumat, 15 Oktober 2010
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பயப்பட வைத்த பாரீஸ் தமிழ்ப்பொண்ணு
ஏதோ ஒரு அனர்த்தம் நடைபெறப் போவதாக கருதினார்கள். அப்பெண்மணி மேடைக்கு அருகில் வியர்த்து விறுவிறுக்க ஓடிவந்து, பொத்தி வைத்த
மல்லிகை மொட்டு பாடலைப் பாடும்படி கேட்டார். நீங்க ஓடி வாறதைப் பாத்தா ஏதோ குழந்தை கிழந்தை காணாமப் போயி பதபதச்சு ஓடி வர்றீங்களோ என்று பயந்தே போய்விட்டேம்மா பாடுறேம்மா பாடுறேன்.. என்ற பாலசுப்பிரமணியம் நிகழ்ச்சி முடிவில் அந்தப் பாட்டைப் பாடினார்.
கடந்த மாதம் 26ம் திகதி பாரீசில் பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சின்னக்குயில் சித்திரா, கார்த்திக் ஆகியோருடைய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நாலாயிரம் பேருக்கான கதிரைகள் போடப்பட்டிருந்தாலும் 500 பேருக்குள்ளேயே ரசிகர்கள் வந்திருந்தார்கள். இருந்தாலும் கச்சேரி அமர்க்களமாக நடைபெற்றது. கார்த்திக் நல்ல ஏற்று ஏறியபடி கண்களே மின்னும்படியாக நின்றாலும் ரசிகர்களை கரகோஷமிட வைத்தார். அத்தருணம் மண்டபத்தில் ஒரு பெண்மணி தடதடவென வேகமாக ஓடி வந்தார். அவர் வருவதைப் பார்த்ததும் பாலசுப்பிரமணியம் உட்பட எல்லோருமே பயந்துவிட்டார்கள்.
சூறாவளி என் வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது-மீண்டும் ரஞ்சிதா
ரஞ்சிதா இந்தியாவின் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கி தற்போது தெளிந்த மனதுடன் இருக்கிறார். இந்த சர்ச்சையில் எந்த உண்மையும் இல்லை.
என்னைப் பற்றிய தப்பான செய்திகளைப் பார்த்தபோது என் உச்சந்தலையில் விஷம் ஏறியது போல் இருந்தது.
பரபரப்பை கிளப்புவதற்காக என் பிரச்சனையில் மீடியா பல கதைகளை கிளப்பிவிட்டு விட்டது என்கிறார். சர்ச்சைகளுக்குப் பிறகு பத்திரிகைக்குத் தரும் முதல் பேட்டி இதுதான். கேள்விகளை மின்னஞ்சல் மூலம் பெற்று பதில் தந்தார்.
தற்போது வாழ்க்கை எப்படி இருக்கிறது?
ஒரு மிகப்பெரிய சூறாவளி என் வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது. அதிலிருந்து மீண்டு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது. எதிர்பாராத புதிய சவால்கள் நம்மை நாமே அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. அந்த சூறாவளிக்குப் பிறகும் என் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.புத்தகங்கள் வாசிப்பது, மனதில் தோன்றுகிற கருத்துக்களை எழுதுவது, பயணங்கள் மேற்கொள்வது என்றிருக்கிறேன்.
உங்களைச் சுற்றி திடீரென சர்ச்சைகள் கிளம்பியபோது உங்கள் கணவர் என்ன சொன்னார்? அவர் உங்களைப் புரிந்து கொண்டாரா?
என் கணவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். நான் இன்றைக்கு இருக்கும் இந்த கசப்பான கால கட்டத்தில் என்னை முழுமையாகப் புரிந்துகொண்டு, எந்தெந்த விதத்தில் எல்லாம் எனக்கு ஆதரவாக இருக்க முடியுமோ அவ்வளவு ஆதரவாக,அக்கறையோடு என்னைப் பார்த்துக்கொள்கிறார். எந்த சூழ்நிலையையும் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுக்கிறார்.
உங்களுடைய குடும்பத்தினர் இந்த சர்ச்சையை எப்படி எடுத்துக் கொண்டார்கள்? அவர்களிடமிருந்து எந்த மாதிரியான ஆதரவு கிடைத்தது?
என்னுடைய அப்பா, அம்மா மற்றும் சகோதிரிகள் எனக்கு மிகப் பெரிய பலத்தையும், தைரியத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமில்லாமல் ஆன்மிகப் படிப்புகளும் எனக்கு சக்தியைக் கொடுக்கின்றன. எங்கள் குடும்பத்தில் எல்லோருமே மனதளவில் காயம்பட்டிருக்கிறார்கள்.
அதே நேரம் என்னைச் சுற்றி நிகழ்ந்த சர்ச்சைகளை அவர்கள் மிக முதிர்ச்சியுடன் கையாண்டார்கள்.என் குடும்பம் இல்லை யென்றால் இந்த பிரச்னையை எப்படிச் சமாளித்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை.பொதுவாகவே எங்களுக்குள் அன்பு அதிகமுண்டு.இந்த சம்பவங்களால் நாங்கள் இன்னும் மிக நெருக்கமாகிவிட்டோம்.
என் பெற்றோர், சகோதரிகள் என்மீது அன்பு காட்டுவது யதார்த்தமான விஷயம்.ஆனால் என் அத்தை (மாமியார்) எனக்குக் கொடுத்த ஆதரவும், அன்பான வார்த்தைகளும் உண்மையிலேயே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்.என் அத்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்.
ஏன்நடிகையானோம், ஏன் பிரபலமானோம்… இப்படி வருத்தப்பட்டதுண்டா?
ஒரு நடிகையாக வேண்டுமென்று நான் என்றைக்கும் ஆசைப்பட்டதும் இல்லை. நடிப்பு நானாகப் போய் தேடிக் கொண்ட தொழிலும் இல்லை. இன்று அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை. ஆனால் சமீபத்திய சம்பவம் மூலம் ஒரு நடிகை அல்லது பிரபலமாக இருப்பவர்கள் மிகவும் சுலபமாக பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர வைத்திருக்கிறது.
சினிமா சாராத ஒரு சாதாரணப் பெண் இதே போன்ற சர்ச்சையில் சம்பந்தப் பட்டிருந்தால் மீடியாவின் கரம் இவ்வளவு கடுமையான இரும்புப்பிடியாக இருந்திருக்காது என்று நம்புகிறேன். நம்முடைய வாழ்க்கை ஒரு நாணயம் மாதிரி. அதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு.
இதுவரையிலும் வாழ்க்கையின் நல்ல பக்கத்தையே அனுபவித் திருக்கிறேன்.இப்போதுதான் அதனுடைய அடுத்த பக்கத்தையும் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறேன்.என்னுடைய வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.
நடிகைகளும் உங்களைப் போல் மனிதர்கள்தான். உங்கள் வீட்டுப் பெண்களைப் போன்ற பெண்கள்தான்.வானத்திலிருந்து தானாக குதித்துவிடவில்லை.உங்களைப் போல் நடிகைகளுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. தயவுசெய்து அதை மறந்துவிடாதீர்கள்.
பிரச்னைகள்,சர்ச்சைகளுக்கு மத்தியில் உங்களையும் மனதையும் அமைதியாக அதே நேரம் நிதானமாக செயல்பட வைத்தது எது?
என்னைப் பொருத்தவரை மூன்று விஷயங்களில் மிகத்தெளிவாக இருக்கிறேன். ஒன்று, எந்த சம்பவத்தாலும் நான் பாதிக்கப்படக்கூடாது. இரண்டாவதாக யாராலும் என் மனமோ, எண்ணமோ பாதிக்கப்படக்கூடாது. மூன்றாவதாக என்மீது வேறு யாரும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது.
இந்த மூன்று விஷயங்களால்தான் என்னால் இன்றும் கண்கள் அயர்ந்து நன்றாக தூங்கமுடிகிறது.நடந்தது எல்லாம் நல்லதுக்குதான்.என்னுடைய வாழ்க்கையில் நடக்கின்ற எந்த விஷயங்களாக இருந்தாலும் அது என்னுடைய அனுகூலமான,நல்ல நேரத்திற்காகவே நடக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு எப்போதுமே உண்டு.
சமீபத்திய சம்பவம்கூட நான் ஒரு படி முன்னேற உந்துதலாக இருக்குமென நம்பு கிறேன்.அதனால் இதை ஒரு பாஸிட்டிவான சவாலாகத்தான் நினைக்கிறேன்.
கர்மா, ஆத்மா இவற்றின் மீது உங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதா? உங்களது வாழ்க்கையில் இவற்றை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
கர்மா, ஆத்மா, மறுபிறவி இந்த மூன்றுமே இந்தியாவில் எல்லோருடைய அன்றாட வாழ்க்கையிலும் ஏதோ ஒரு அடிப்படையில் உறவாடுகிற விஷயங்கள். என்னுடைய பர்ஸனல் வாழ்க்கையைப் பொருத்தவரை முடிவே இல்லாத மாபெரும் சக்தி ஒன்றுதான் வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
நான் நடிகை யானதிலிருந்து, என் வாழ்க்கையில் நடந்த பெரும்பாலான பர்ஸனல் விஷயங்கள் எதுவுமே நான் திட்டமிட்டபடி நடந்தது இல்லை. இதற்கெல்லாம் காரணம் என்னுடைய கர்மா என்பதை உணர்ந்திருக்கிறேன்.”
ஆன்மிக வாழ்க்கையில் உங்களை ஈடுபட வைத்தது எது? ஏன்?
நான் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டதால் ஆன்மிகத்தில் இறங்கினேன் என்று நினைக்கிறார்கள்.வாழ்க்கையில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது.எனக்கும் நெருக்கடிகள் இருந்திருக்கிறது.அதனால் வருத்தப்பட்டும் இருந்திருக்கிறேன்.
ஆனால் மன அழுத்தத்தினால் நான் ஒருபோதும் பாதிக்கப்பட்டது இல்லை.குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம்தான்.
இந்த சர்ச்சையினால் நீங்கள் மாறியிருக்கிறீர்களா?
இந்த சம்பவத்திற்குப் பிறகும் நான் அப்படியேதான் இருக்கிறேன். மாறவில்லை. இன்றும் எனது புத்தக வாசிப்பு தொடர்கிறது. தினமும் ஐந்து மணிநேரம் தூங்குகிறேன்.எல்லாமும் அப்படியே இருக்கிறது.ஆனால் மக்கள் மத்தியில் நான் மாறிவிட்டேன் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.
என் மீதான பார்வையில் வித்தியாசம் ஏற்பட்டு இருப்பது புரிகிறது. ஆனால் இதே போன்ற சம்பவங்கள் நடப்பது எனக்கு இது முதல் முறை அல்ல.நான் நடிக்க ஆரம்பித்தபோது நெருங்கிய சொந்தங்கள்,நண்பர்கள் என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார்கள்.
சினிமா ஒரு நல்ல துறையாக,மதிக்கக்கூடிய தொழிலாக அவர்களுக்குத் தெரியவில்லை. பிறகு நடிகையாக நான் பெயர்,புகழ் பெற்ற பிறகு அதே நண்பர்கள், உறவினர்கள் அதே சினிமாவினாலேயே என்னிடம் நெருங்கி வந்தார்கள். இது வட்டம் மாதிரி.இதே வட்டம். இன்றும் வேறு விதமாக தொடர்கிறது.
மீண்டும் நடிக்க வரும் எண்ணமிருக்கிறதா?
எதிர்காலம் நம் கையில் இல்லை. காலத்திற்கு ஏற்றபடி அது மாறிக்கொண்டே இருக்கும்.உண்மையில் உங்கள் கேள்விக்கான பதில் என்னிடம் இப்போது இல்லை.
பரபரப்பை கிளப்பிய அந்த சம்பவத்திற்குப் பிறகு நீங்கள் நித்யானந்தரைச் சந்தித்தீர்களா?
நான் அவரைச் சந்திக்கவில்லை.
Kamis, 14 Oktober 2010
ராத்திரி நேர தொந்தரவு! ஓவியா புலம்பல்!!

களவாணி ஓவியா அடிக்கடி தன் மொபைல் நம்பரை மாற்றுவதால் அவரை வைத்து படம் பண்ணும்
இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அடிக்கடி அவதிக்குள்ளாகி வருகிறார்களாம். இதுபற்றி அம்மணியிடம் கேட்டால் என் செல் நம்பரை எப்படியோ தேடிப் பிடிக்கும் ரசிகர்கள் நேரம் காலம் பார்க்காமல், இரவு நேரங்களிலும் தொந்தரவு தருவதால் இப்படி நம்பரை மாற்ற வேண்டி உள்ளது என்று புலம்புகிறார். நடிகைகள் வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா..!
Sabtu, 09 Oktober 2010
4 லட்சம் கொடுத்தால்தான் டப்பிங்

பேசாம தன் பெயரை 'பாதி'ன்னு வச்சுக்கலாம் ஆதி! படம் துவங்குகிற போது சுமூகமாக தொடரும் இவரது உறவு, பாதிப்படம் முடிந்த பின் வேறு மாதிரி
ஆகிவிடுவதாக கிசுகிசுக்கிறார்கள் திரையுலகத்தில். இவரை வைத்து படம் எடுத்த எல்லா இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கூட இப்படி ஒரு அனுபவம் இருப்பதாக பேச்சு. சரி, லேட்டஸ்ட் பஞ்சாயத்து என்னவாம்? நாடோடிகள், கோரிப்பாளையம், சிந்து சமவெளி போன்ற படங்களை தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். இவரது தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ஆடுபுலி. இதில் ஆதிதான் ஹீரோ. ஈரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரை புக் பண்ணிய படம் இது. அதனால் சம்பளத்தை முப்பத்தைந்து லட்சம் என்று நிர்ணயித்தாராம் தயாரிப்பாளர்.
படம் முடிவதற்குள் அதில் முப்பத்தியரு லட்சத்தை வாங்கிவிட்டார் ஹீரோ. டப்பிங் பேச அழைத்தார்களாம். மீதி நாலு லட்சத்தை கொடுத்திருங்க வர்றேன் என்ற இவர் சொல்ல, ரிலீஸ் நேரத்தில் வாங்கிக்கலாமே என்று தயாரிப்பாளர் சொல்ல, அங்கு ஆரம்பித்தது பிரச்சனை. பணம் வந்தால்தான் டப்பிங் என்றாராம் கறாராக. 'கோடி கோடியா கொட்டி படம் எடுக்கிறேன். கேட்கறதுக்கு முன்னாடி 99 சதவீத பணத்தை செட்டில் பண்ணிட்டேன். நாலு லட்சத்துக்கு நம்பக் கூடாதா?' என்றார் ராயப்பன்.
சாண்டில்யன் வர்ணனை போல நீண்டு கொண்டே போன இந்த பிரச்சனைக்கு ஒரே முற்றுப்புள்ளி... நாலு லட்சம்! தெலுங்கில் பெரிய தயாரிப்பாளரின் பிள்ளை, அந்த நாலை வாங்கிக் கொண்டுதான் வாயையே திறந்தாராம்!
கலர் கலரா கண்ணாடி போட்டு நடித்தால் பெரிய நடிகராகி விட முடியாது

மலையாளத் திரையுலகின் மிகப் பெரிய கலைஞர் திலகன். நடிப்பில் அரை சத ஆண்டுகளைக் கடந்தவர். ஆனால் அவரை ஒதுக்கி ஓரம் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மலையாளத் திரையுலகம். இயக்குநர் வினயனின் படத்தில் நடிக்கக் கூடாது என்று தாங்கள் போட்ட தடையை திலகன் மீறி நடிக்கப் போய் விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக திலகனை தீண்டாமல் ஓரம் கட்டி வைத்திருக்கிறது மலையாள நடிகர் சங்கமான அம்மா.
தன் மீதான இத்தனை நடவடிக்கைகளுக்கும் மம்முட்டிதான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் திலகன். அத்தோடு மட்டுமல்லாமல், மோகன்லால், திலீப் என அத்தனை சூப்பர் ஸ்டார் நடிகர்களும் எனக்கு எதிராக சதி செய்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தன்னை தொடர்ந்து நடிகர் சங்கம் ஒதுக்கி வைத்திருந்தால் தற்கொலை செய்வேன் என்றும் அவர் அதிரடியாக கூறியுள்ளார்.
தன்னை மலையாளப் படவுலகம் ஒதுக்கி வைத்து விட்டாலும் இன்னும் தனது லட்சியத்தில் குறைவில்லாமல் படு திடமாகவே இருக்கிறார் திலகன். இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
நான் வேஷம் கட்டிப் பல நாளாயிடுச்சு. எனக்குள்ள இருக்கும் கலைஞன் பெருங்குரல் எடுத்து அழுறான். ஆனால் மலையாளப் படவுலகை ஆட்டி வைக்கிற மாஃபியாக்கள் என்னை நடிக்கவிடாமல் தடுக்கிறாங்க. இதே நிலை தொடர்ந்தா தூக்கில் தொங்குவதுதான் என் இறுதி முடிவு என அறிவித்துவிட்டேன். அப்படி நான் தொங்கினால் அதுதான் ஆசையா சூப்பர் ஸ்டார்களே?
உண்மையான கலைஞன் என்றால் உணர்ச்சி வசப்படணும். அடித்தால் திருப்பி அடிப்பேன். காரணம், என் நாடி நரம்பெல்லாம் உணர்ச்சிகள்தான் பொங்கி வழியுது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டார்ட் என்ற சத்தத்தைக் கேட்டதும் இந்தத் திலகன் மறைந்து அந்த கேரக்டர்தான் கேமரா முன்னாடி நிற்கும். ஒரே டேக்கில் அந்த ஸீனை அடித்து நொறுக்கிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன். அதைப் பார்த்துக் கைதட்டிய டைரக்டர்ஸ் எல்லாம் இன்னைக்கு என்னை ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.
விநயனும் ஒரு விஷய ஞானமுள்ள இயக்குநர்தானே? அவரது படத்தில் நடித்ததற்காகத் தடை போடுவது என்ன நியாயம்? கலையை வளர்க்கத்தான் சங்கம் வேண்டுமே தவிர, கலைஞனை அழிப்பதற்கு இல்லை. என் மீது வந்து விழும் கல்லுக்கு எல்லாம் சூத்ரதாரி மம்முட்டி என்று எனக்குத் தெரியும். அவருக்கும் மோகன்லாலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
இப்போது சொல்கிறேன்… கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. மம்முட்டி அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். மலையாளப் படவுலகம் இன்று சிலரது கைக்குள் சிக்கிச் சின்னாபின்னாமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எல்லாம் உருப்படாத கதைகளில் நடிக்கிறார்கள். மற்ற மொழி சினிமாக்களை காப்பியடித்து, காப்பியடித்து மலையாள சினிமாவின் உன்னதத்தைக் கெடுத்துவிட்டார்கள்.
கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை.
ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள்.
கேரளத்தின் கலாசாரத்தைத் திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்கு தேவையில்லாத குப்பைகள்தான்.
கேரள சினிமாக் கலையை அழிப்பவர்களைத்தான் அப்படித் தாக்குகிறேன். அது யாராக இருந்தால் எனக்கென்ன? என் நடிப்பை இந்த நாடறியும். இடையில் எனக்கு உடல் நலம் குறைந்தது உண்மைதான். அதற்காக என்னை புக் பண்ண வரும் டைரக்டர்களிடம், திலகனை புக் செய்தால் கூடவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும். எதற்கு பணத்தை வேஸ்ட் பண்றீங்க? என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். கூடவே என்னை “அம்மா’வில் இருந்தும் தூக்கி எறிந்து விட்டார்கள்.
சீரியலில் நடிப்பதையும் தடுத்து நிறுத்தி விட்டார்கள். நாட்டின் சிறந்த கலைஞன் கமல்ஹாசனுக்கு கேரள அரசு விழா எடுக்கிறது. அதில் கலந்து கொள்ள கூடாது என அறிக்கைவிடுகிறார்கள். அப்போது இந்த மலையாள சினிமாவின் பிரம்மாக்கள் எல்லாம் எங்கே போனார்கள்.
தற்கொலை செய்வேன் என்று நான் கூறியது மிரட்டல் இல்லை. உண்மை. எனக்குள் இருக்கும் கலைஞன் தினமும் புதுப் புது வேஷம் தேடி ஏங்குகிறான். அந்தப் பசியை நான் போக்கா விட்டால் அவன் செத்து விடுவான். இந்தக் கலைஞன் செத்த பிறகு திலகன் என்ற வெற்று உடம்பு வாழ்ந்து என்ன பயன்?
நடிப்பதற்கான எனது வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்து கேரள கலாசாரத் துறை அமைச்சர் பேபியிடம் பலமுறை புகார் சொல்லிவிட்டேன். ஆனால், அவர் தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுக்குச் சாதகமாகவே நடக்கிறாரே தவிர, உரிய நடவடிக்கை இல்லை. கொஞ்ச காலம் பொறுப்பேன். எல்லாத் திசைகளும் இப்படி சூனியமாகி விட்டால், பேபியின் வீட்டு முன் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்று பொறுமித் தள்ளி விட்டார் திலகன்.
ஸ்ருதி ஹாஸனின் ‘தட்ஸமயம் ஒரு பெண்குட்டி’!
தலைப்பு ஒரு மாதிரி பிட்டு பட ரேஞ்சுக்கு இருக்கிறதே என யோசிக்க வேண்டாம். கமல்ஹாஸனின் நெருங்கிய நண்பர் ராஜீவ் குமார் இயக்கும்
மலையாளப் படம் இது.
கமலை வைத்து சாணக்யன் படத்தை எண்பதுகளில் எடுத்தவர்.
இப்போது கமல் மகள் ஸ்ருதிஹாஸனை வைத்து படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்குதான் தட்ஸமயம் ஒரு பெண்குட்டி என தலைப்பு வைத்திருக்கிறார்.
இந்தியில் நடிப்பைத் துவங்கிய ஸ்ருதி, அடுத்து தமிழில் 7-ம் அறிவு, தெலுங்கில் ஒன்று என ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். அடுத்து இந்த மலையாளப் படத்தில்தான் நடிக்கப் போகிறாராம்!
அடுத்து கன்னடம், மராத்தி என எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லையாம்… நல்ல ஸ்கோப் உள்ள வேடங்களென்றால் ஒப்புக் கொள்வதாகக் கூறியுள்ளார் ஸ்ருதி.
Jumat, 08 Oktober 2010
நான் ஷகிலா படம் பார்த்ததில்ல

முதல் அறிமுகமே கொஞ்சம் முரட்டு அறிமுகம்தான். தாதா ராஜேந்திரனின் மக்கு மகனாக நடித்து தியேட்டரையே சிரிக்க வைத்தவர் அஸ்வின். 'பாஸ்
என்கிற பாஸ்கரன்' படத்தில் பத்தாம் வகுப்பு பரிட்சையை பலமுறை எழுதி அவஸ்தைப்படுவாரே, அவரேதான்! படத்தில்தான் அப்படி. நிஜத்தில் சத்யபாமா கல்லூரியில் பிசிஏ படித்தவர் அஸ்வின். அஸ்வினுக்கு சினிமாவில் நுழைவதில் அவ்வளவு கஷ்டம் இல்லை. ஏனென்றால் இவரது அப்பா சுவாமிநாதன் அன்பே சிவம் உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்த எல்எம்எம் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். தற்போது இவர்கள் தயாரிப்பில் ஆட்டநாயகன் என்ற படம் உருவாகி வருகிறது. ஆனாலும் நானே உன்னை அறிமுகப்படுத்துவதை விட வெளி கம்பெனி படங்களில் அறிமுகம் ஆனால்தான் உனக்கும் ஒரு அனுபவமாக இருக்கும் என்றாராம். இவரே தன் முயற்சியில் நடிக்க ஒப்பந்தம் ஆன படம்தான் கனிமொழி. அதன்பின் கமிட் ஆன பாஸ் முதலில் வெளிவந்து அஸ்வினை சினிமாவில் பாஸ் பண்ண வைத்துவிட்டது.
நாங்க, வந்தான் வென்றான், எத்தன் என்று ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியிருக்கிறது அஸ்வினின் கேரியர். வெளியான முதல் படத்திலேயே ஷகிலாவுடன் நடிக்கிற பாக்கியம்(?) இவருக்கு! எப்படியிருந்துச்சு அனுபவம் என்றால், "அவங்களை பற்றி எல்லாரும் பல நல்ல நல்ல விஷயங்களை சொன்னாங்க. சத்தியமா நான் அவங்க படம் ஒண்ணு கூட பார்த்ததில்லீங்க. நம்புங்க" என்றார் அஸ்வின்.
நம்புலாம்ங்கிறீங்க?
Kamis, 07 Oktober 2010
ரிஸ்க் எடுப்பது பிடிக்கும் தனுஷ்
ரிஸ்க் எடுப்பது ரொம்பவும் பிடிக்கும் என்கிறார் தனுஷ்.சமீபத்தில் நடந்த பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அவர் கூறும்போது, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதிதாக செய்ய விரும்புகிறேன். பொல்லாதவன் படத்தில் கிளைமாக்சில்தான் சண்டையே போடுவேன். அதற்காக ஜிம் சென்று சிக்ஸ் பேக் கொண்டு வந்தேன். முதல்முறையாக காமெடி கலந்த ஹீரோ வேடத்தில் நடித்தேன். ஆக்ஷன் இமேஜ் கிடைத்தபோது திடீரென காதல் கதைகளிலும் நடித்தேன். ரிஸ்க் எடுக்கிறீர்களே என்றார்கள். வாழ்க்கையில் பலமுறை ரிஸ்க் எடுத்திருக்கிறேன். ரிஸ்க் எடுப்பது எனக்கு புதிதல்ல. அது எனக்கு பிடிக்கும் என்றார்.
முன்று மொழியிலும் கலக்கும் ஜெனிலியா
பொம்மரிலு தெலுங்கு படத்தில் நடித்தார் ஜெனிலியா. அதே படத்தின் தமிழ் ரீமேக்கான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்தார். பின் இந்தி ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இதே போல் தெலுங்கில் ரெடி படத்தில் நடித்தார். இப்போது அதே படத்தின் தமிழ் ரீமேக்கான உத்தமபுத்திரன் படத்திலும் அவர் நடிக்கிறார்.இது பற்றி ஜெனிலியா கூறியதாவது:ஒரு படத்தில் நடித்த பின் அதே படம் இன்னொரு மொழியில் ரீமேக் செய்தால் அதில் சிலர் நடிக்க மாட்டார்கள். நான் அப்படியல்ல. ஒரு மொழியில் நடித்ததைவிட இன்னொரு மொழியில் அந்த கேரக்டரை இன்னும் மெருகூட்டி நடிக்கவே விரும்புவேன். தெலுங்கில் நான் நன்றாக நடித்ததால்தான் பொம்மரிலு படத்தின் இரு மொழி ரீமேக்குகளிலும் என்னை தேர்வு செய்தார்கள். அது எனக்கு கவுரவம்தான். அதே போல், ரெடியில் நடித்த என்னையே உத்தமபுத்திரனிலும் நடிக்க கேட்டார்கள். அதுவும் எனக்கு பெருமைதான். அதனால்தான் நடிக்கிறேன். 2 வருடங்களுக்கு பின் தமிழில் நடிக்கிறேன். மித்ரன் ஜவஹர் இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார்.இவ்வாறு ஜெனிலியா கூறினார்.
பாழடைந்த மண்டபத்தால் துணை நடிகர்கள்
பாழடைந்த மண்டபத்தில் நடக்க இருந்த ஷூட்டிங்கில் பங்கேற்க துணை நடிகர்கள் மறுத்தனர். இதனால் அதே போன்ற மண்டபத்தை செட்டாக போட்டு
படமாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழைÕ பட இயக்குனர் ஏகாதசி கூறியது:
இந்த படத்தில் புதுமுகங்கள் தேஜ், நட்சத்திரா நடிக்கின்றனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பாழடைந்த மண்டபம் ஒன்றில் 15 நாட்கள் நடத்த வேண்டும். அதற்காக பல இடங்களில் அப்படியொரு மண்டபத்தை தேடினோம். கடைசியாக பரமக்குடி சாலையில் ஒரு மண்டபம் கிடைத்தது. இங்கு நடிப்பதற்கு 100 துணை நடிகர், நடிகைகள் தேவைப்பட்டார்கள். உசிலம்பட்டி, நடுமுதலைகுளம், கீழம்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து 100 பேரை தேர்வு செய்து அழைத¢துச் சென்றோம். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தது. 12 நாள் ஷூட்டிங் நடத்திவிட்டு திரும்பினோம். ஊர் மக்களை ஒரு லாரி மற்றும் வேனில் ஏற்றி அனுப்பிவைத்தோம். சிலைமான் என்ற இடத்தில் விபத்து நடந்தது. இதில் பஞ்சு என்ற மூதாட்டி இறந்தார். அப்போதுதான் அந்த பாழடைந்த மண்டபம் பற்றிய ஒரு விஷயம் தெரிந்தது. மன்னர் காலத்தில் தண்டனைகளை நிறைவேற்ற அந்த மண்டபத்தை பயன்படுத்தியுள்ளனர். அங்கு மேலும் 3 நாள் ஷூட்டிங் நடத்த கடந்த வாரம் துணை நடிகர்களை அழைத்தோம். அந்த மண்டபமா.. வரமாட்டோம் என சொல்லிவிட்டார்கள். பின் அதே போன்ற மண்டப செட் ஒன்றை போட்டு மதுரையில் ஷூட்டிங் நடத்தினோம்.
Selasa, 05 Oktober 2010
நடிகர்களுக்கு பட்டப் பெயர் தேவை இல்லை ஜீவா

“சிங்கம் புலி”, “கோ”, “ரவுத்திரம்”. ”வந்தான் வென்றான்” படங்களில் நடிக்கிறேன். “கோ” படம்
தீபாவளிக்கு ரிலீசாகிறது. இதில் பழைய கதாநாயகி ராதா மகள் கார்த்திகா ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்துக்கான படப்பிடிப்பு நார்வேயில் சமீபத்தில் நடந்த போது பனிப்பொழிவில் மலை உச்சியில் பல மணி நேரம் சிக்கி உயிருக்கு போராடினோம். ஆபத்தான பள்ளத்தாக்கு ஓரத்தில் நடன காட்சியை எடுத்தனர். எனக்கு தலை சுற்றியது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம்.
ரவுத்திரம் படம் சீரியஸ் ஆன கதை. சத்யா படத்தில் கமலை பார்த்த மாதிரி என் கேரக்டர் இருக்கும்.
சூப்பர் குட் பிலிம்ஸ் எடுத்த “புது வசந்தம்” படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசை. இந்த படத்தில் ஆர்யாவிடமும் நடிக்க கேட்டால் வருவார்.
தமிழில் தயாராகும் இந்தி 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க இயக்குனர் ஷங்கர் என்னை அழைத்து பேசினார். எனக்கும் அந்த படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளது.
நடிகர்களுக்கு பட்டப்பெயர் தேவை இல்லை. எனக்கு மதுரையில் நடந்த விழாவில் இளைய கலை அரசன் என்ற பட்டம் கொடுத்தனர். அதை நான் பயன்படுத்துவது இல்லை. என் ஒரிஜினல் பெயரை விட வேறு பட்டங்கள் பெரிதானவை அல்ல.
நிர்வாண காட்சியில் நடிக்க மறுப்பு

தமிழ், ஆங்கிலம் உட்பட 5 மொழிகளில் வெளியாகும் படம் ‘ஸ்…ஸ்…ஸ்’. பாம்பு சீறும் சத்தம்தான்
தலைப்பு. இதில் நாக கன்னியாக நடித்திருக்கிறார் மல்லிகா ஷெராவத். இர்பான் கான் ஹீரோ. முக்கிய வேடத்தில் திவ்யா தத்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹாலிவுட்டில் நடந்துள்ளது. பாம்பு தோல் உரிக்கும் காட்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது. ஒரு காட்சியில் மல்லிகாவை நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் ஜெனிபர் சேம்பர் கேட்க, அதற்கு மறுத்துவிட்டாராம் மல்லிகா. இதே படத்தின் வஞிளம்பரத்துக்காக ட்விட்டரில் அரை நிர்வாண போஸ் கொடுத்திருந்தார் மல்லிகா. இது பற்றி அவர் கூறும்போது, ‘‘போட்டோவுக்கு போஸ் தருவது வேறு. படத்தில் நடிப்பது என்பது வேறு. அதனால் அப்படிப்பட்ட காட்சியில் நடிக்க மறுத்தேன்’’ என்றார்
ரஹ்மானின் ஹாலிவுட் பிரண்ட்ஷிப்

'கற்றாரை கற்றாரே காமுறுவர்' என்றொரு ஸ்லோகன் உண்டு கடுந்தமிழில். இதற்கு கொடுந்தமிழில் விளக்கம் சொன்னால் 'மைண்டு காரன் மைண்டு
காரனோடதான் பிரண்ட்ஷிப்பு வச்சுப்பான்!' உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் அப்படியரு பிரண்ட்ஷிப் இருக்கிறது. அவர்தான் மாட் டங்க்ளி! சமீபத்தில் சன் டியில் அடிக்கடி பார்த்திருக்கலாம். ரஹ்மான் எந்திரன் படத்திற்காக பின்னணி இசையமைத்த காட்சியை. அப்போது ரஹ்மானுடன் ஒரு வழுக்கை தலை ஆசாமி பேசிக் கொண்டிருப்பார். அவர்தான் இந்த மாட் டங்க்ளி. இசைக்கலைஞர்கள் கருவிகள் வாசித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை கன்டக்ட் செய்வதும் இவர்தான். ஹாலிவுட் இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவராம் இவர். அடிப்படையில் பிரிட்டிஷ் காரரான இவர் ஏராளமான ஹாலிவுட் படங்களுக்கு மியூசிக் கன்டக்டராக இருந்திருக்கிறார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான ஹான்ஸ் சிம்மர், கிரேக் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரின் மியூசிக் கன்டக்டரும் இவர்தானாம். சமீபத்தில் வெளிவந்த பிரமாண்ட படமான இன்சப்ஷனிலும் மாட் டங்க்ளியின் பங்கு முக்கியமானது.
ரஹ்மான் சமீபத்தில் லண்டனில் நடத்திய மிகப்பெரிய மியூசிக் கான்சர்ட்டை யாரும் மறந்திருக்க முடியாது. அங்கேயும் மாட் டங்க்ளியின் 'மைண்ட்ஷிப்' ரொம்பவே கை கொடுத்ததாம் இசைப்புயலுக்கு!
கமல் வழியில் தொடரும் சிம்பு
பெரிய நடிகர்கள் செய்தால் அர்ப்பணிப்பு. அதுவே அறிமுகமாகிறவர்கள் செய்தால் ஆர்வக் கோளாறு. திரையுலகில் எல்லா விஷயத்திற்கும் இதே
அளவுகோல்தான். இதோ இரண்டு 'அர்ப்பணிப்புகள்' நம் கண்ணெதிரே. மன்மதன் அம்பு படத்தில் ஒரு பாடல் தவிர மற்ற எல்லா பாடல்களையும் கமலே எழுதிவிட்டார். டைரக்டர்களில் பேரரசு உள்ளிட்ட பலரும் தங்கள் படங்களுக்கு தாங்களே பாடல்களை எழுதிவிடுகிறார்கள். பாடலாசிரியர்கள் சங்கம் பரவால்லன்னு விடுறதாலதான் இப்படியெல்லாம் நடக்குதோ என்னவோ? போகட்டும்... கமல்ஹாசனை தொடர்ந்து இப்போது சிம்புவும் பாடல் எழுத வந்துவிட்டார்.
இவரும் யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து விட்டால் மெட்டு ஹிட்டாகும். ஹிட் துட்டாகும் என்பது ஊர் உலகமே அறிந்த நல்ல விஷயம்தான். இவரது இசையில் பல பாடல்களை பாடியிருக்கும் சிம்பு இப்போது ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார். அதன் பல்லவியை கேட்டால் அப்படியே ஆடிப் போயிருவீங்க!
Anushka,simbu New Film Vaanam Hot Images
எவன்டி உன்னை பெத்தான், பெத்தாள்...
கையில கிடைச்சா செத்தான், செத்தாள்...
கையில கிடைச்சா செத்தான், செத்தாள்...
இப்படி போவுது பாட்டு. படம் வந்தால் ஊரே ஒண்ணு கூடி உரல் இடிக்கும்னு இப்பவே ஆரூடம் சொல்லுது கோடம்பாக்கம்.
பிரபுதேவா எனக்கு வேணும்! – மனைவி மனு!

கள்ளக்காதலி நயன்தாராவுடன் சுற்றும் எனது கணவர் பிரபுதேவாவை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று அவரது
மனைவி ரமலத் கோர்ட்டில் மனு கொடுத்திருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா – ரமலத் தம்பதியரின் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாக புகுந்திருப்பவர் நடிகை நயன்தாரா. சிம்புடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பிறகு சினிமாவையே வெறுத்திருந்த நயன்தாராவுக்கு ஆறுதல் சொன்ன பிரபுதேவா, பின்னாளில் நயன்தாராவை காதலிக்க தொடங்கினார். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, ஒரே ஓட்டலில் அறை எடுத்து தங்குவது என தாலி கட்டாத கணவன் – மனைவி போலவே இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நயன்தாராவை தான் காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பிரபுதேவா பகிரங்கமாக அறிவித்தார். இது அவரது மனைவி ரமலத்துக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் பிரபுதேவா – நயன்தாரா ஜோடியை சிறந்த தம்பதிகள் என்ற விருதை ஒரு பத்திரிகை வழங்கியது. அந்த விருதை இருவரும் ஜோடியாக சென்று பெற்றுக் கொண்டு புன்னகை பூரித்தனர்.
இதையடுத்து பிரபுதேவா மீது வழக்கு தொடர வக்கீல்களுடன் ரமலத் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் சென்னை குடும்ப நல கோர்ட்டில் ரமலத் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், என் கணவர் பிரபுதேவா, குடும்பச்செலவுக்கே பணம் தருவதில்லை. என்னையும், என் குடும்பத்தினரையும் என் கணவர் சந்திக்க முடியாமல் நடிகை நயன்தாரா தடுத்து வருகிறார். என் கணவரை என்னிடம் சேர்த்து வையுங்கள், என்று கோரியுள்ளார். ரமலத்துக்கு பிரபுதேவா ரூ.2 கோடி பணம் மற்றும் ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகைகளை வழங்கியிருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை என்றும் ரமலத் கூறியுள்ளார்
Senin, 04 Oktober 2010
நடிகை சினேகாவுக்கு மீண்டும் ஆபாச SMS
நடிகை சினேகா சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் வசித்து வருகிறார். சினேகாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். தகவல்கள் அனுப்பியதாக ஏற்கனவே பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சைபர்கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர். 45 நாட்கள் சென்னை புழல் மத்திய ஜெயிலில் இருந்த அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீது சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது 11-வது கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நடிகை சினேகாவும் கோர்ட்டில் ஆஜராகி கண்ணீர்மல்க சாட்சியம் அளித்தார். ஆனால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராகவேந்திரா வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஒழுங்காக ஆஜராவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகை சினேகாவின் தந்தை ராஜாராம் நேற்று பகல் 12 மணியளவில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். அப்போது புகார் மனு ஒன்றையும் கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், ஏற்கனவே தொல்லை கொடுத்த ராகவேந்திரா மீண்டும் நடிகை சினேகாவுக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ஆபாச தகவல்களை அனுப்பி வருவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.எம்.எஸ். தகவலில் `என்றைக்கும் நான்தான் உன் கணவன்' என்றும், மேலும் அறுவறுக்கத்தக்க வகையில் ஆபாச வார்த்தைகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த ஆபாச எஸ்.எம்.எஸ். தகவல்களால் நடிகை சினேகா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி சென்னை உளவுப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆபாச எஸ்.எம்.எஸ். தகவல்களை உண்மையிலேயே ராகவேந்திரா தான் அனுப்பியிருக்கிறாரா? அல்லது அவரது பெயரில் வேறு யாராவது அனுப்புகிறார்களா? என்று உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
உண்மையிலேயே ராகவேந்திரா அனுப்பியிருந்தது தெரிய வந்தால் அவர் மீது மீண்டும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்
தீபாவளிக்கு ரத்த சரித்திரம், உத்தமபுத்திரன், சிக்குபுக்கு, வல்லக்கோட்டை, மைனா, “வ” குவார்ட்டர் கட்டிங் ஆகிய 6 படங்கள் ரிலீசாகின்றன. ரத்த சரித்திரம் படத்தில் சூர்யா, இந்தி நடிகர் விவேக் ஓபராய், பிரியாமணி நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இரண்டு தாதாக்கள் சண்டை பற்றிய உண்மை சம்பவத்தை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார்.
“சிக்குபுக்கு” படத்தில் ஆர்யா-ஸ்ரேயா ஜோடி யாக நடித்துள்ளனர். கே.மணி கண்டன் இயக்கியுள்ளார். காதல் கதையாக உருவாகி உள்ளது.
உத்தமபுத்திரன் படத்தில் தனுஷ்-ஜெனிலியா ஜோடியாக நடித்துள்ளனர். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். குடும்ப சென்டிமென்ட் கலந்த காதல் கதை. தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய “ரெடி” படத்தின் ரீமேக்கே இப்படம்.
வல்லக்கோட்டை படத்தில் அர்ஜுன், ஹரிப்ரியா ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
மைனா படத்தில் விதார்த், அமலாபால் ஜோடியாக நடித்துள்ளனர். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். அமலாபால் சிந்துசமவெளி படத்தில் அனாகா என்ற பெயரில் நடித்து பிரபலமானவர். சிறு வயதிலேயே நட்பாக பழகுவார்கள். வளர்ந்ததும் காதல் வயப்படுவதும் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுமே கதை.
“வ” குவார்ட்டர் கட்டிங் காமெடி படமாக உருவாகியுள்ளது. சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். தயாநிதி அழகிரி தயாரித்துள்ளார்.
மேலும் 20 படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. கமல், திரிஷா ஜோடியாக நடிக்கும் மன்மதன் அம்பு படம் டிசம்பர் 10-ந்தேதி ரிலீசாகிறது.
விஜய், அசின் நடிக்கும் காவலன் படம் டிசம்பர் 24-ல் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகிறது. ஜெயம் ரவியின் எங்கேயும் காதல், கார்த்தியின் சிறுத்தை, சிம்பு நடிக்கும் வானம், ஜீவாவின் கோ, சேரன் நடிக்கும் யுத்தம் செய் படங்களும் நவம்பர், டிசம்பர் மாதங்களில ரிலீசாகிறது.
சிம்பு உங்கள் ரசிகராமே? அனுஷ்கா
ஒரே படத்துடன் தமிழ் சினிமாவிலிருந்து விலகிச் சென்றவர் அனுஷ்கா. இப்போது மீண்டும் நுழைந்து முன்னணி வரிசையில் வந்து நிற்கிறார்.
‘தமிழ் சினிமாவில் நான் எப்போதோ முன்னணி இடத்துக்கு வந்திருக்க வேண்டியது. என்ன காரணத்தாலோ கால தாமதமாகிவிட்டது. தெலுங்கில் பிசியாகிவிட்டதால் தமிழ் பக்கம் வரவே முடியவில்லை. ஆனாலும் இப்போது அந்த இடத்தை பிடித்து விட்டேன். இனி இதை தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும்’
சூப்பர் பவர் கேரக்டர்களில் அதிகம் நடிக்கிறீர்களே...?
‘அருந்ததி’யில் சூப்பர் பவர் கேரக்டரில் நடித்தேன். அதே மாதிரியாக அடுத்து சில படங்களிலும் நடித்தேன். சிலர் அனுஷ்கா யதார்த்தமாக நடிப்பதில்லை என்கிறார்கள். சவாலான கேரக்டர்களில் நடிக்க துணிச்சல் வேண்டும். ‘அருந்ததி‘ படத்தின் மொத்த சுமையும் என் கேரக்டர் மீதிருந்தது. அது வெற்றிபெறவில்லையா?. அதனால் அப்படிப்பட்ட கேரக்டர்கள் என்னைத் தேடி வருகிறது. ஹீரோவுக்கு பின்னால் அலைந்து டூயட் பாடுவது மட்டுமே நடிப்பில்லை.
ரீமேக் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்?
‘தமிழ் சினிமாவில் நான் எப்போதோ முன்னணி இடத்துக்கு வந்திருக்க வேண்டியது. என்ன காரணத்தாலோ கால தாமதமாகிவிட்டது. தெலுங்கில் பிசியாகிவிட்டதால் தமிழ் பக்கம் வரவே முடியவில்லை. ஆனாலும் இப்போது அந்த இடத்தை பிடித்து விட்டேன். இனி இதை தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும்’
சூப்பர் பவர் கேரக்டர்களில் அதிகம் நடிக்கிறீர்களே...?
‘அருந்ததி’யில் சூப்பர் பவர் கேரக்டரில் நடித்தேன். அதே மாதிரியாக அடுத்து சில படங்களிலும் நடித்தேன். சிலர் அனுஷ்கா யதார்த்தமாக நடிப்பதில்லை என்கிறார்கள். சவாலான கேரக்டர்களில் நடிக்க துணிச்சல் வேண்டும். ‘அருந்ததி‘ படத்தின் மொத்த சுமையும் என் கேரக்டர் மீதிருந்தது. அது வெற்றிபெறவில்லையா?. அதனால் அப்படிப்பட்ட கேரக்டர்கள் என்னைத் தேடி வருகிறது. ஹீரோவுக்கு பின்னால் அலைந்து டூயட் பாடுவது மட்டுமே நடிப்பில்லை.
ரீமேக் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்?
ரீமேக் படத்துக்கு நான் எதிரியல்ல. என்றாலும் நான் நடித்த கேரக்டரையே திரும்ப நடிப்பதில் உடன்பாடில்லை. இருந்தாலும் தெலுங்கு ‘வேதம்’ படத்தில் நடித்த கேரக்டரிலேயே ‘வானம்’ படத்தில் நடிக்கிறேன். அதற்கு காரணம் இயக்குனர் கிரிஷ். அவருடன் பணியாற்றும்போது ஜாலியாக இருக்கும். அதோடு புதிது புதிதாக நிறைய கற்றுக் கொள்ளலாம். தமிழில் எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நேரத்தில் இந்தப் படம் அதற்கு வலு சேர்க்கும்.
சிம்பு உங்கள் ரசிகராமே?
அவர் மட்டுமல்ல, நிறைய ஹீரோக்கள் எனக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அதை சிம்பு வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி. ஒருவரை ஒருவர் ரசிப்பதும், பாராட்டுவதும்தானே சினிமா. தமிழ் சினிமாவில் இந்த இரண்டும் நிறைய கிடைக்கும்.
உங்கள் உயரம் பிளஸ்சா, மைனசா?
நான் அப்படி ஒன்றும் அசாதாரண உயரமில்லை. சராசரி உயரம்தான். இதுவரை நடித்த எந்த படத்திலும் உயரம் பிரச்னையாக வந்ததில்லை. இப்போதுள்ள பெரும்பாலான ஹீரோக்கள் எனக்கு பொருத்தமான உயரமுடையவர்கள்தான்.
Langganan:
Postingan (Atom)