Selasa, 21 September 2010

த்ரிஷா கால்ஷீட் கிடைத்ததால் காஜல் படம் நிறுத்தம்



பாலிவுட் மோகத்திலிருந்து விடுபட்டு மீண்டும் கோலிவுட், டோலிவுட் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார் த்ரிஷா. ரீஎன்ட்ரி கொடுத்த வேகத்தில் பவன்
கல்யாணுடன் ஜோடியாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து தெலுங்கில் தனக்கு ஹிட் படங்களை தந்து, நம்பர் 1 நடிகையாக்கிய தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜுவின் படத்திலும் நடிக்கிறார். கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தி வந்த த்ரிஷா, ராஜுவின் படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கிறாராம். அதேபோல் ஹீரோ டாமினேஷன் படங்களை தயாரித்த ராஜு, இதில் முழுக¢க ஹீரோயினை நம்பி படம் தயாரிக்கிறார்.
ஏற்கனவே காஜல் அகர்வாலை வைத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள சப்ஜெக்ட்டை தயாரிக்க திட்டமிட்டிருந்தார் ராஜு. த்ரிஷாவின் கால்ஷீட் கிடைத்ததை அடுத்து அப்பட வேலைகளை நிறுத்திவிட்டாராம். காஜல் நடிக்கும் படம் டிராப் ஆகிவிடும் என தயாரிப்புக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

Tidak ada komentar:

Posting Komentar