Sabtu, 02 Oktober 2010

முதுகில் ஆட்டோகிராப் போட மறுத்ததால் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை


தனது முதுகில் ஆட்டோகிராப் போட ரன்பீர் கபூர் மறுத்ததால் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்வதாக மிரட்டிய பெண் ரசிகையால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர், நடிகைகளுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுப்பது, ஆட்டோகிராப் வாங்குவது என்பது காலங்காலமாக நடந்து வரும் விஷயம். சில அதீத ஆர்வமுள்ள ரசிகர்கள் நடிகர், நடிகைகளுக்காக எதையும் செய்ய துணிவார்கள். அப்படிதான் நடிந்திருக்கிறது டெல்லியில் ஒரு சம்பவம். நடிகர் ரன்பீர் கபூர் புதுடெல்லியில உள்ள ஷாப்பிங் மால் ஒன்றின் விழாவுக்காக சமீபத்தில் சென்றிருந்தார். அப்போது ஒரு ரசிகை, தனது முதுகில் ஆட்டோகிராப் போடுமாறு ரன்பீரை வற்புறுத்தினார்.

அவரது பாதுகாவலர்கள் அந்த பெண் ரசிகையை தடுத்தனர். இதையடுத்து போட்டோ எடுக்க அனுமதி கேட்டார். அதற்கும் பாதுகாவலர்கள் மறுத்தனர். இதனால் கடுப்பான அந்த ரசிகை, ஷாப்பிங் மாலின் முதல் மாடிக்கு சென்று, கீழே விழுந்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார்.
இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஷாக் ஆனார் ரன்பீர். இதையடுத்து தனது பாதுகாவலர் ஒருவரை அனுப்பி, அவரை கீழே இறங்கி வர சொன்னார். வந்ததும் அவரிடம் சிறுது நேரம் பேசிவிட்டு தனது காருக்கு சென்றார் ரன்பீர். அவரை பின் தொடர்ந்த அந்த ரசிகை தன்னையும் காரில் ஏற்றிக்கொள்ளும்படி கூற, அங்கு கூட்டம் கூடிவிட்டது. ரன்பீரின் பாதுகாவலர்கள் அவரை பிடித்து தள்ளிவிட்டு ரன்பீரை அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தனது பாதுகாவலர்களாக மேலும் சிலரை நியமிக்க முடிவு செய்துள்ளாராம் ரன்பீர்.

Tidak ada komentar:

Posting Komentar