Selasa, 12 Oktober 2010

புரட்சித்தலைவரையே மிஞ்சிய எந்திரன் ஐஸ்வர்யாராய்..


நம்ம புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையே எந்திரனில் வந்த ஐஸ்வர்யாராய் முந்திவிட்டாரென சென்னை
ரசிகர் ஒருவர் உதயம் தியேட்டரின் முன் சிரித்தபடியே கூறி அனைவர் கவனத்தையும் தொட்டார். பொதுவாக புரட்சித்தலைவருக்கு கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சிறிய காயம் கையில் ஏற்படும். அதைப் பார்த்தவுடன் பாயும்புலியாகி பகைவர்களை அழித்துவிடுவார் தலைவர். ஆனால் எந்திரனில் எத்தனையோ ஆயிரம் போலீசார் துப்பாக்கிகளால் சுட்டும், கார்களில் அடித்துப் புரண்டும் ஐஸ்வர்யாராய்க்கு சிறிய காயம்கூட வரவிடாமல் காப்பாற்றிவிட்டார் நம்ம ஷங்கர். உலக அழிகி காயப்பட்டால் அமிதாப்பச்சனுக்கு பிடிக்காது என்பதால் ஐஸ்வர்யாராயை காப்பாற்றியது ஷங்கரின் திறமையே என்று மற்றவர் கூற அட போய்யா உலக அழகின்னா துப்பாக்கிக் குண்டே விலகித்தான் போகும்யா என்றார் இன்னொரு ஆட்டோக்காரர்.
நன்றி – தினக்குயில்

Tidak ada komentar:

Posting Komentar