மோகன் நடராஜன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தவர் இலியானா.
இந்தப் படத்தை விக்ரம் கே.குமார் இயக்குவதாக இருந்து இறுதியில் அந்த வாய்ப்பு பூபதி பாண்டியனுக்கு போனது. அப்போதும் நான் ரெடி என்று கிரீன் சிக்னல் கொடுத்தார் இலியானா.
ஆனால் பூபதி பாண்டியன் இயக்கத்திலும் நடிக்கவில்லை விக்ரம். அவர் நடிக்கவிருப்பது மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில்.
இயக்குனர்கள் மாறிய கால இடைவெளியில் இலியானாவின் கால்ஷீட் காலாவதியாக இப்போது அனுஷ்காவிடம் கதை சொல்லியிருக்கிறார் விஜய். கதை பிடித்திருப்பதால் விக்ரம் ஜோடி அனேகமாக அனுஷ்காதான் என்கிறார்கள்.
Tidak ada komentar:
Posting Komentar