Sabtu, 09 Oktober 2010

த்ரிஷா இடத்தில் எமி

Amy Jackson
இங்கிலாந்து -இந்திய கூட்டுத் தயாரிப்பு போல இருப்பதுதான் எமியின் விசேஷம்! வெளிநாட்டு அழகிகளை மட்டுமல்ல. அப்படியே கொஞ்சம்
கழுத்தை நீட்ட்ட்ட்ட்டி எட்டிப்பார்த்து கூட ஒரு உதாரணம் சொல்லாம். அண்டை மாநிலமான பாலிவுட் குயின்களை கூட 'உவ்வே' என்று ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள் நமது ரசிகர்கள். பாலிவுட்டில் கொண்டாடப்பட்ட பிபாபாஷா பாசு தமிழில் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்த போது என்னவானார்? ஆனால் எமியை பொருத்தவரை எந்த பக்கம் திருப்பினாலும் அழகு!
வண்ணார பேட்டை ரசிகனுக்கும் பிடிக்கும். மைலாப்பூர் ரசிகனுக்கும் இனிக்கும். அப்படி ஒரு முகம் அவருக்கு. இந்த முக லட்சணம்தான் த்ரிஷாவை ஒரு ஸ்டெப் பின்னுக்கு தள்ளிவிட்டிருக்கிறது! ஹையோ... அது எப்போ?
தமிழில் சூப்பர் ஹிட் ஆன விண்ணை தாண்டி வருவாயா படத்தை இந்தியில் எடுக்க வேண்டும் என்று விரும்பினார் கவுதம் மேனன். இதன் மூலம் இந்திக்கும் போகலாம் என்று நினைத்திருந்தார் சிம்பு. ஆனால் அவரை விட்டுவிட்டு த்ரிஷாவை தமிழில் நடித்த அதே கேரக்டரில் நடிக்க வைக்க முடிவெடுத்தார் கவுதம். இப்போது அதில் திடீர் மாற்றம். த்ரிஷாவுக்கு பதிலாக எமியை புக் பண்ணிவிட்டார்.
உமியாயிருந்தா ஊதி தள்ளிடலாம். எமியாச்சே? இதயத்துல ஒரு கர்சீப் போட்டு வைங்கப்பா...

Tidak ada komentar:

Posting Komentar