Selasa, 19 Oktober 2010

அஜித் இடத்தில் நடிக்கபோவது யார் ??


துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் இணைவதாக இருந்த அஜீத்தும், கெளதம் மேனனும் இப்போது திடீரென பிரிந்து விட்டனர். கதையில்
பாடல்களோ, ரசிகர்களைக் கவரும் காட்சிகளோ இல்லையென்பது அஜீத்தின் வருத்தம். அஜீத்துக்காக கதை எழுத முடியாது, என் கதையில் வேண்டுமானால் அஜீத் நடிக்கட்டும் என்பது கவுதம் மேனனின் பிடிவாதம்.

எல்லா இயக்குநர்களின் செல்ல ஹீரோவாக மாறி வரும் சூர்யாவிற்கு அஜீத் கைவிடப்பட்ட (துப்பறியும் ஆனந்த்) படத்திற்கு ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. இன்னும் சில மாதங்களுக்கு கா‌ல்ஷ‌ீட் இல்லை என்பது சூர்யாவின் பிரச்சனை. அதனால் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து சீக்கிரமே சொல்கிறேன் என்கிறார் கௌதம். 

Tidak ada komentar:

Posting Komentar