Tampilkan postingan dengan label சமீரா ரெட்டி. Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label சமீரா ரெட்டி. Tampilkan semua postingan

Senin, 01 November 2010

ரஜினியை பார்த்து பூரித்த சமீரா ரெட்டி


தமிழ் சினிமா உட்பட அனைத்து மாநில கதாநாயகிகளும் ஒரு முறையாவது சூப்பர் ஸ்டார்
ரஜினியுடன் நடிக்க ஆசை இருக்கும். அப்படிப்பட்ட ஆசைகளும் சமீரா ரெட்டிக்கும் இருக்கு என்ற விஷயம் இயக்குனர்கள் சங்க விழாவில் தெரிந்தது. இயக்குனர்கள் சங்க விழாவில் ஒரு பாட்டுக்கு
ஆடிய சமீரா ரெட்டி ரஜினியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. பிறகு நம்மிடம் அவரது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இயக்குனர்கள் சங்க விழாவில் ரஜினியை சந்தித்து பேசியது மறக்க முடியாத தருணம் என பூரித்த சமீரா ரெட்டி, ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், வாய்ப்பு மறுக்காமல் நடிப்பேன் என்று சமீரா கூறினார்.

Sabtu, 09 Oktober 2010

திடீர் மாற்றத்தில் சமீரா


‘வாரணம் ஆயிரம்‘ படத்தில் குண்டாக இருந்த சமீரா ரெட்டி ஆச்சர்யப்படும் அளவுக்கு மெலிந்துவிட்டார்.
அவர் கூறியது:கவுதம் இயக்கத்தில் நடித்த ‘நடுநிசி நாய்கள்‘ முடிந்துவிட்டது. அடுத்து பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கிறேன். அந்த வேடத்துக்கு இப்போதைய எனது ஸ்லிம் தோற்றம் பொருத்தமாக அமைந்துவிட்டது. இந்த வார இறுதியில் இந்தி பட ஷூட்டிங்கிற்காக லண்டன் செல்கிறேன். இப்படத்தில் பைக் ஓட்டும் காட்சி வருவதால் பைக் ஓட்டி பழகி இருக்கிறேன். நான் அசைவ பிரியை. மட்டன், சிக்கன் என வெளுத்துக்கட்டுவேன். இப்போது சுத்த சைவப்பிரியை ஆகிவிட்டேன். இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன என்று சொல்ல முடியவில்லை. இத்துடன் யோகா செய்வதையும் தினசரி பயிற்சி ஆக்கிக்கொண்டிருக்கிறேன். இதனால் எனது உடல் ஆரோக்கியத்தில்  புதிய மாற்றத்தையும் எனக்குள் புதுவேகம் ஏற்பட்டிருப்பதையும் உணர முடிகிறது.

Minggu, 26 September 2010

லண்டனுக்கு செல்ல சமீராவுக்கு விசா மறுப்பு


அனில் கபூர், அஜய் தேவ்கனுடன் சமீரா ரெட்டி நடிக்கும் இந்தி படம் 'தேஸ்'. இப்பட ஷூட்டிங்கை இம்மாத இறுதியில் லண்டனில் நடத்த திட்டமிட்டனர். இதற்காக சமீரா ரெட்டி உட்பட படக்குழுவினர் லண்டன் பறக¢க விசாவுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு
விசா மறுக்கப்பட்டுள்ளது. "விசாவுக்கு விண்ணப்பித்ததில் சில குளறுபடி நடந்துவிட்டது. ஏஜென்ட் மூலமாக இல்லாமல் நாங்களே விண்ணப்பித்தோம். இதில் சில ஆவணங்கள் மிஸ் ஆகிவிட்டதால் விசா கிடைக்க வில¢லை. விரைவில் விசா கிடைத்துவிடும். அடுத்த மாதம் லண்டனில் ஷூட்டிங் நடத்துவோம்" என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்தனர். தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு சொன்னாலும் அடுத்த மாதம் ஷூட்டிங் நடத்துவதில் சிக்கல் உள்ளதாம். அஜய் தேவ்கன், சம¦ரா ரெட்டி வேறு படங்களுக்கு அடுத்த மாதத்தில் கால்ஷீட் ஒதுக்கியுள்ளனர். இதனால் 'தேஸ்' பட ஷூட்டிங் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.