Sabtu, 09 Oktober 2010

திடீர் மாற்றத்தில் சமீரா


‘வாரணம் ஆயிரம்‘ படத்தில் குண்டாக இருந்த சமீரா ரெட்டி ஆச்சர்யப்படும் அளவுக்கு மெலிந்துவிட்டார்.
அவர் கூறியது:கவுதம் இயக்கத்தில் நடித்த ‘நடுநிசி நாய்கள்‘ முடிந்துவிட்டது. அடுத்து பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கிறேன். அந்த வேடத்துக்கு இப்போதைய எனது ஸ்லிம் தோற்றம் பொருத்தமாக அமைந்துவிட்டது. இந்த வார இறுதியில் இந்தி பட ஷூட்டிங்கிற்காக லண்டன் செல்கிறேன். இப்படத்தில் பைக் ஓட்டும் காட்சி வருவதால் பைக் ஓட்டி பழகி இருக்கிறேன். நான் அசைவ பிரியை. மட்டன், சிக்கன் என வெளுத்துக்கட்டுவேன். இப்போது சுத்த சைவப்பிரியை ஆகிவிட்டேன். இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன என்று சொல்ல முடியவில்லை. இத்துடன் யோகா செய்வதையும் தினசரி பயிற்சி ஆக்கிக்கொண்டிருக்கிறேன். இதனால் எனது உடல் ஆரோக்கியத்தில்  புதிய மாற்றத்தையும் எனக்குள் புதுவேகம் ஏற்பட்டிருப்பதையும் உணர முடிகிறது.

Tidak ada komentar:

Posting Komentar