Tampilkan postingan dengan label ஜீவா. Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label ஜீவா. Tampilkan semua postingan

Selasa, 05 Oktober 2010

நடிகர்களுக்கு பட்டப் பெயர் தேவை இல்லை ஜீவா


“சிங்கம் புலி”, “கோ”, “ரவுத்திரம்”. ”வந்தான் வென்றான்” படங்களில் நடிக்கிறேன். “கோ” படம்
தீபாவளிக்கு ரிலீசாகிறது. இதில் பழைய கதாநாயகி ராதா மகள் கார்த்திகா ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்துக்கான படப்பிடிப்பு நார்வேயில் சமீபத்தில் நடந்த போது பனிப்பொழிவில் மலை உச்சியில் பல மணி நேரம் சிக்கி உயிருக்கு போராடினோம். ஆபத்தான பள்ளத்தாக்கு ஓரத்தில் நடன காட்சியை எடுத்தனர். எனக்கு தலை சுற்றியது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம்.
ரவுத்திரம் படம் சீரியஸ் ஆன கதை. சத்யா படத்தில் கமலை பார்த்த மாதிரி என் கேரக்டர் இருக்கும்.
சூப்பர் குட் பிலிம்ஸ் எடுத்த “புது வசந்தம்” படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசை. இந்த படத்தில் ஆர்யாவிடமும் நடிக்க கேட்டால் வருவார்.
தமிழில் தயாராகும் இந்தி 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க இயக்குனர் ஷங்கர் என்னை அழைத்து பேசினார். எனக்கும் அந்த படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளது.
நடிகர்களுக்கு பட்டப்பெயர் தேவை இல்லை. எனக்கு மதுரையில் நடந்த விழாவில் இளைய கலை அரசன் என்ற பட்டம் கொடுத்தனர். அதை நான் பயன்படுத்துவது இல்லை. என் ஒரிஜினல் பெயரை விட வேறு பட்டங்கள் பெரிதானவை அல்ல.

Jumat, 27 Agustus 2010

கோ படத்துக்கு ஜேம்ஸ்பாண்ட் பட கேமரா


கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, ராதா மகள் கார்த்திகா, பியா நடிக்கும் படம் 'கோ'. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக ஃபான்டம் ஃபிளக்ஸ் என்ற கேமராவை பயன்படுத்தியுள்ளனர். இது சினிமா உலகில்
சமீபத்தில்தான் அறிமுகமானது. இந்த கேமராவில் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தை படமாக்க ஹாலிவுட்டில் திட்டமிட்டுள்ளனர். இது பற்றி இயக்குனர் ஆனந்த கூறும்போது, 'இந்த கேமரா அறிமுகமானது பற்றி அறிந்ததும் சந்தோஷப்பட்டேன். இது டிஜிட்டலில் ஹை ஸ்பீட் ரக கேமரா. படமான உடனே அந்த காட்சியை திரையில் போட்டு பார்க்கலாம். மற்ற கேமராக்களில் இந்த வசதி கிடையாது. அடியாட்களுடன் ஜீவா மோதும் சண்டை காட்சியை இந்த கேமராவில் படம் பிடித்துள்ளேன்Õ என்றார்.