Tampilkan postingan dengan label ஷகிலா. Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label ஷகிலா. Tampilkan semua postingan

Jumat, 08 Oktober 2010

நான் ஷகிலா படம் பார்த்ததில்ல

Asvin Raja
முதல் அறிமுகமே கொஞ்சம் முரட்டு அறிமுகம்தான். தாதா ராஜேந்திரனின் மக்கு மகனாக நடித்து தியேட்டரையே சிரிக்க வைத்தவர் அஸ்வின். 'பாஸ்
என்கிற பாஸ்கரன்' படத்தில் பத்தாம் வகுப்பு பரிட்சையை பலமுறை எழுதி அவஸ்தைப்படுவாரே, அவரேதான்! படத்தில்தான் அப்படி. நிஜத்தில் சத்யபாமா கல்லூரியில் பிசிஏ படித்தவர் அஸ்வின்.
அஸ்வினுக்கு சினிமாவில் நுழைவதில் அவ்வளவு கஷ்டம் இல்லை. ஏனென்றால் இவரது அப்பா சுவாமிநாதன் அன்பே சிவம் உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்த எல்எம்எம் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். தற்போது இவர்கள் தயாரிப்பில் ஆட்டநாயகன் என்ற படம் உருவாகி வருகிறது. ஆனாலும் நானே உன்னை அறிமுகப்படுத்துவதை விட வெளி கம்பெனி படங்களில் அறிமுகம் ஆனால்தான் உனக்கும் ஒரு அனுபவமாக இருக்கும் என்றாராம். இவரே தன் முயற்சியில் நடிக்க ஒப்பந்தம் ஆன படம்தான் கனிமொழி. அதன்பின் கமிட் ஆன பாஸ் முதலில் வெளிவந்து அஸ்வினை சினிமாவில் பாஸ் பண்ண வைத்துவிட்டது.
நாங்க, வந்தான் வென்றான், எத்தன் என்று ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியிருக்கிறது அஸ்வினின் கேரியர். வெளியான முதல் படத்திலேயே ஷகிலாவுடன் நடிக்கிற பாக்கியம்(?) இவருக்கு! எப்படியிருந்துச்சு அனுபவம் என்றால், "அவங்களை பற்றி எல்லாரும் பல நல்ல நல்ல விஷயங்களை சொன்னாங்க. சத்தியமா நான் அவங்க படம் ஒண்ணு கூட பார்த்ததில்லீங்க. நம்புங்க" என்றார் அஸ்வின்.
நம்புலாம்ங்கிறீங்க?