
திரையில வெளிச்சம் படுற கடைசி நிமிடம் வரைக்கும் படத்தை இருட்டாக்கிடணும்னு நினைச்சு வேலை செய்வாங்க போலிருக்கு. அதிலும்
ஒரு நியாயம் இருக்கதானே செய்யுது என்றும் இந்த செய்தியை படித்துவிட்டு நீங்கள் முணுமுணுக்கலாம். சூர்யா நடித்து ராம்கோபால்வர்மா இயக்கத்தில் வெளிவரப்போகும் ரத்த சரித்திரம் படத்திற்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் ஆகிய மூவருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம். என்னவென்று?
இந்தப்பட விளம்பரங்களில் ஒரு வாசகத்தை பயன்படுத்தி வந்தார்கள். பழிவாங்குவது பரிசுத்த உணர்வு- மகாபாரதம் என்று அச்சிட்டிருந்தார்கள் அதில். இந்து மக்கள் கட்சி இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தது மகாபாரதத்தில் இப்படி ஒரு வார்த்தையே இல்லை என்ற வாதத்தோடு தனது வழக்கறிஞர் தாமரை செந்து£ர் பாண்டி மூலம் நோட்டீஸ் அனுப்பியது படம் தொடர்பானவர்களுக்கு!
கருக்கருவாவை எடுத்து முதுகு சொறிஞ்ச கதையா இருக்கே என்று ஏற்கனவே புலம்பிக் கொண்டிருக்கும் சூர்யா, இந்த புதுப்பிரச்சனையை உடனடியாக சமாளிக்க வேண்டும் என்று நினைத்தார். சம்பந்தப்பட்ட அந்த விளம்பர ஸ்லோகனை நீக்கிடுங்க என்றாராம். இப்போது வருவதெல்லாம் சூர்யாவின் க்ளீன் போட்டோவும் ரத்தசரித்திரம் டைட்டிலும்தான்!
Tidak ada komentar:
Posting Komentar