விஜய் நடித்த வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நயன்தாராவுக்கும், பிரபுதேவாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளாக நாளாக காதலாக மாறியது. தொடர்ந்து நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக பிரபுதேவா அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி ரமலத், பிரபு தேவா மீது சென்னை குடும்ப நல கோர்ட்டில் ரமலத் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், என் கணவர் பிரபுதேவா, குடும்பச்செலவுக்கே பணம் தருவதில்லை. என்னையும், என் குடும்பத்தினரை என் கணவர் சந்திக்க முடியாமல் நடிகை நயன்தாரா தடுத்து வருகிறார். என் கணவரை என்னிடம் சேர்த்து வையுங்கள், என்று கோரியுள்ளார். ரமலத்துக்கு பிரபுதேவா ரூ.2 கோடி பணம் மற்றும் ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகைகளை வழங்கியிருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை என்றும் ரமலத் கூறியுள்ளார்.
Senin, 04 Oktober 2010
Langganan:
Posting Komentar (Atom)
Tidak ada komentar:
Posting Komentar