குடும்பநல நீதிமன்றங்களில் தினந்தோறும் எத்தனையோ 'டைவர்ஸ்' நடக்கிறது. அதற்கான மனுக்கள் நூற்றுக்கணக்கில் குவிகின்றன. ஆனால்
நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் என்றால் அத்தனை பேர் மூக்கும் கோர்ட்டுக்குள் நுழைவதுதான் வேடிக்கை. திரைப்படம் சார்ந்த எல்லா பிரச்சனையிலும் மூக்கை நுழைக்கும் இந்து மக்கள் கட்சி, இந்த விஷயத்தை அவ்வளவு எளிதில் விடுமா? வழக்கம் போல தனது மூக்கை நுழைத்துவிட்டது. அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் முன் உதாரணமாக வாழ வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு. அதை பிரபுதேவா மீறுகிறார். பழைய காலத்தில் உடன் கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. கணவன் இறந்ததும் மனைவியும் அதே நெருப்பில் உயிரை விடுவாள். நாகரீகம் வளர அதை முட்டாள் தனம் என ஒதுக்கி விட்டோம். ஆனால் 3 குழந்தைகள் பெற்ற அவர்களை உதறி விட்டு ஓடுவதும், காதலியை மறக்க முடியவில்லை என்று சொல்வதும் நாகரீகத்துக்கு உகந்ததாகவே அமையாது.
இந்தியாவின் பெருமைகளே நமது கலாச்சாரமும் கோவில், வேட்டி, சட்டை, புடவைகளும்தான். உலக மயமாக்கலில் நமது கலாச்சாரத்தை தாராளமயமாக்க முடியாது. பிரபுதேவாவும் நயன்தாராவும் கலாச்சாரத்தை சீரழிக்க பார்க்கிறார்கள்.
சுதந்திர போராட்டத்தை தூண்டி விட சினிமா பயன்பட்டது. அது இப்போது கலாச்சார சீரழிவுக்கு பயன்படுகிறது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களும் பொது மக்கள் பார்வையில் இருப்பவர்களும் மக்களுக்கு முன்னு தாரணமாக இருக்க வேண்டும். அதற்கு எதிராக நடந்தால் அவர்களை மக்கள் மத்தியில் இருந்து துரத்தி அடிப்போம். கலாச்சாரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ள பிரபுதேவா - நயன்தாராவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். பிரபு தேவா வீட்டில் ஓரிரு நாளில் முற்றுகை போராட்டம் நடத்துவோம். நயன்தாரா- பிரபுதேவா உருவப்படங்களை எரிப்போம்

இவ்வாறு தனது அறிக்கையில் கூறியிருக்கிறார் கண்ணன்.
Tidak ada komentar:
Posting Komentar