Senin, 04 Oktober 2010

சிம்பு உங்கள் ரசிகராமே? அனுஷ்கா


ஒரே படத்துடன் தமிழ் சினிமாவிலிருந்து விலகிச் சென்றவர் அனுஷ்கா. இப்போது மீண்டும் நுழைந்து முன்னணி வரிசையில் வந்து நிற்கிறார்.
‘தமிழ் சினிமாவில் நான் எப்போதோ முன்னணி இடத்துக்கு வந்திருக்க வேண்டியது. என்ன காரணத்தாலோ கால தாமதமாகிவிட்டது. தெலுங்கில் பிசியாகிவிட்டதால் தமிழ் பக்கம் வரவே முடியவில்லை. ஆனாலும் இப்போது அந்த இடத்தை பிடித்து விட்டேன். இனி இதை தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும்’

சூப்பர் பவர் கேரக்டர்களில் அதிகம் நடிக்கிறீர்களே...?

‘அருந்ததி’யில் சூப்பர் பவர் கேரக்டரில் நடித்தேன். அதே மாதிரியாக அடுத்து சில படங்களிலும் நடித்தேன். சிலர் அனுஷ்கா யதார்த்தமாக நடிப்பதில்லை என்கிறார்கள். சவாலான கேரக்டர்களில் நடிக்க துணிச்சல் வேண்டும். ‘அருந்ததி‘ படத்தின் மொத்த சுமையும் என் கேரக்டர் மீதிருந்தது. அது வெற்றிபெறவில்லையா?. அதனால் அப்படிப்பட்ட கேரக்டர்கள் என்னைத் தேடி வருகிறது. ஹீரோவுக்கு பின்னால் அலைந்து டூயட் பாடுவது மட்டுமே நடிப்பில்லை.

ரீமேக் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்?
 
ரீமேக் படத்துக்கு நான் எதிரியல்ல. என்றாலும் நான் நடித்த கேரக்டரையே திரும்ப நடிப்பதில் உடன்பாடில்லை. இருந்தாலும் தெலுங்கு ‘வேதம்’ படத்தில் நடித்த கேரக்டரிலேயே ‘வானம்’ படத்தில் நடிக்கிறேன். அதற்கு காரணம் இயக்குனர் கிரிஷ். அவருடன் பணியாற்றும்போது ஜாலியாக இருக்கும். அதோடு புதிது புதிதாக நிறைய கற்றுக் கொள்ளலாம். தமிழில் எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நேரத்தில் இந்தப் படம் அதற்கு வலு சேர்க்கும்.

சிம்பு உங்கள் ரசிகராமே?

அவர் மட்டுமல்ல, நிறைய ஹீரோக்கள் எனக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அதை சிம்பு வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி. ஒருவரை ஒருவர் ரசிப்பதும், பாராட்டுவதும்தானே சினிமா. தமிழ் சினிமாவில் இந்த இரண்டும் நிறைய கிடைக்கும்.

உங்கள் உயரம் பிளஸ்சா, மைனசா?

நான் அப்படி ஒன்றும் அசாதாரண உயரமில்லை. சராசரி உயரம்தான். இதுவரை நடித்த எந்த படத்திலும் உயரம் பிரச்னையாக வந்ததில்லை. இப்போதுள்ள பெரும்பாலான ஹீரோக்கள் எனக்கு பொருத்தமான உயரமுடையவர்கள்தான்.

Tidak ada komentar:

Posting Komentar