Tampilkan postingan dengan label ஸ்ருதி கமல். Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label ஸ்ருதி கமல். Tampilkan semua postingan

Sabtu, 09 Oktober 2010

ஸ்ருதி ஹாஸனின் ‘தட்ஸமயம் ஒரு பெண்குட்டி’!


 தலைப்பு ஒரு மாதிரி பிட்டு பட ரேஞ்சுக்கு இருக்கிறதே என யோசிக்க வேண்டாம். கமல்ஹாஸனின் நெருங்கிய நண்பர் ராஜீவ் குமார் இயக்கும்
மலையாளப் படம் இது.
கமலை வைத்து சாணக்யன் படத்தை எண்பதுகளில் எடுத்தவர்.
இப்போது கமல் மகள் ஸ்ருதிஹாஸனை வைத்து படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்குதான் தட்ஸமயம் ஒரு பெண்குட்டி என தலைப்பு வைத்திருக்கிறார்.
இந்தியில் நடிப்பைத் துவங்கிய ஸ்ருதி, அடுத்து தமிழில் 7-ம் அறிவு, தெலுங்கில் ஒன்று என ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். அடுத்து இந்த மலையாளப் படத்தில்தான் நடிக்கப் போகிறாராம்!
அடுத்து கன்னடம், மராத்தி என எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லையாம்… நல்ல ஸ்கோப் உள்ள வேடங்களென்றால் ஒப்புக் கொள்வதாகக் கூறியுள்ளார் ஸ்ருதி.

Jumat, 17 September 2010

பார்வை கோளாறால் கமல் மகள் பரிதவிப்பு


‘கண்ணாடி - கான்டக்ட் லென்ஸ் இல்லாமல் என்னால் பார்க்க முடியாது. பல சமயங்களில் வாழ்த்து சொல்லவேண்டிய நபரைவிட்டு வேறு நபருக்கு வாழ்த்து சொல்லி விடுகிறேன்’ என்று உருக்கமுடன் கூறி உள்ளார்
கமல்ஹாசன் மகள் ஸ்ருதி. நடிப்பு, இசை, நடனம் என பல்துறைகளில் சிறந்த விளங்குபவர் ஸ்ருதி ஹாசன். தற்போது தமிழில் ‘7ம் அறிவு’ மற்றும் இந்தியில் ‘தில் டோ பச்சா ஹை ஜி’ படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதி இருப்பதாவது:

என்னை பொருத்தவரை 90 சதவீதம் பார்வையற்ற பெண்ணாகவே வாழ்கிறேன். கண்ணாடி அணியாமல் 2 சென்டி மீட்டர் தூரத்தில் இருக்கும் பொருளைக்கூட பார்க்க முடியாது. யாருக்கும் நான் வாழ்த்து சொல்வது கிடையாது. அப்படி சொல்லும் நபர் வேறு ஆளாக இருக்கும்பட்சத்தில் அவரிடம் மன்னிப்பு மற்றும் வருத்தம் தெரிவிக்க வேண்டி உள்ளது.  நேற்றுகூட தவறான நபருக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன். மேலும் கண்ணாடி கதவு இருப்பது தெரியாமல் நடந்து சென்றேன். இது எனக்கு சந்தோஷத்தை தரவில்லை. எது எப்படியோ மூக்கு கண்ணாடியும், கான்டக்ட் லென்சும் பல்லாண்டு வாழ்க.

இவ்வாறு உருக்கமாக ஸ்ருதி ஹாசன் குறிப்பிட்டிருக்கிறார்.  சமீபகாலமாக த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கங்கள் தொடங்கப்பட்டு அவர்களைப் பற்றியே இழிவாக எழுதுவது, ஆபாசமாக போட்டோ வெளியிடுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஸ்ருதிஹாசன் எழுதி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த விஷயங்கள் அப்படிப்பட்ட ரகமாக இருந்தால் சந்தோஷமே!

Selasa, 14 September 2010

மல்லிகா ஷெராவத்துக்கு வாய்ஸ் தந்தார் ஸ்ருதி


நடிப்பு, இசை என இரு பாதைகளில் பயணித்து வருகிறார் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி. தமிழில் சூர்யாவுடன் 7ஆம் அறிவு, இந்தியில் அஜய் தேவ்கனுடன் தில் தோ பச்சா ஹே ஜி படங்களில் நடிக்கிறார். கூடவே இசை ஆல்பம் தயாரிப்பது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது என பிசியாக இருக்கிறார். இதற்கிடையே ஹிஸ்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் பின்னணி பாடியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பவர்
மல்லிகா ஷெராவத். ஸ்ருதியின் பாடலுக்கு படத்தில் மல்லிகா வாயசைப்பார்.இதில் பாடியது பற்றி ஸ்ருதி கூறும்போது, டேவிட் குஷ்னர் எனக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் இசையமைப்பாளர். அவரது இசையில் பாடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை. ஹிஸ்ஸ் படத்துக்காக அவர் பாட கேட்டதும் துள்ளி குதித்தேன். இப்படம் மூலம் ஹாலிவுட்டில் நுழைவது பெருமையாக உள்ளது என்றார்.

Selasa, 07 September 2010

சினிமா, டான்ஸ்தான் வாழ்க்கை கமல் மகள் பரபரப்பு பேட்டி


‘சினிமாவுக்கு வருவேன். திரைக்கு பின்னால்தான் பணியாற்றுவேன். நடிக்க மாட்டேன்’ என்று கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா
கூறினார்.நடிகர் கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு இசை அமைத்ததுடன் ‘லக்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். ‘7ம் அறிவு’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவரது தங்கையும், கமலின் இரண்டாவது மகளுமான அக்ஷரா, நடனத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் சென்னையில் அளித்த பேட்டி:
கடந்த 9 மாதத்துக்கு முன் மும்பை சென்றுவிட்டேன். என் குருநாதர் கவுதம்&கோகிலா ஏற்பாடு செய்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தேன். சென்னையை ரொம்பவே மிஸ் செய்கிறேன். இங்கிருக்கும்போது ஆங்கிலத்தில் பேசினாலும், தமிழில் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. மும்பையில் அந்த வாய்ப்பு இல்லை. பலவகை நடனம் கற்றிருக்கிறேன்.
இதில் சாதிப்பதே என் குறிக்கோள். ஹிப்&ஹாப் நடனம் மிகவும் பிடிக்கும். குச்சுப்புடி, பரதநாட்டியமும் கற்றிருக்கிறேன். இதை மேடையில் ஆட மாட்டேன். இந்தியில் ‘சொசைட்டி’ படத்தை இயக்கும் ராகுல் தோல்கியாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றுகிறேன். எனது அம்மா சரிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சினிமா சம்பந்தமாக எந்த படிப்பும் படிக்கவில்லை. உழைப்பின் மூலமே அதை அறிய விரும்புகிறேன். ஏற்கனவே நண்பர்களுடன் சேர்ந்து 3 விளம்பர படம் இயக்கி உள்ளேன். எப்போதாவது சோர்வாக உணர்ந்தால் அம்மா, அப்பாவிடம் பேசுவேன். நானும் ஸ்ருதியும் சகோதரிகள் மட்டுமல்ல.. நெருங்கிய தோழிகள்போல் பழகுவோம்.
நடிப்பில் எனக்கு விருப்பமில்லை. கேமராவுக்கு பின்னாலிருந்து வியக்கத்தக்க படங்கள் இயக்குவேன். நடனம், சினிமா இந்த இரண்டும் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அப்பாவை இயக்கும் ஆசையும் எனக்கு உண்டு. அவருக்காக ஒரு கதாபாத்திரத்தை நான் உருவாக்குவது கடினம். ஏதோ ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வேண்டும் என்று என்னால் அவரிடம் சொல்ல முடியாது.
இவ்வாறு அக்ஷரா கூறினார்.

Senin, 30 Agustus 2010

ஸ்ருதிஹாசன் காயம் படப்பிடிப்பில் விபத்து

ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கடந்த சில மாதங்களாகவே சென்னையில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தை தயாரிப்பது உதயநிதி ஸ்டாலின்
என்பதாலோ என்னவோ, முக்கிய சாலைகளில் படம் எடுப்பதற்கு பர்மிஷன் வாங்குவதில் பெரும் சிக்கல் எழுவதில்லை. என்றாலும், வாகன போக்குவரத்துக்கு எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் படம் எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். டூவீலர் ஆசாமிகளின் கஷ்ட நஷ்டம் புரிஞ்சவராச்சே?
தாம்பரம்-வேளச்சேரி இடையே சண்டைக்காட்சி ஒன்றை எடுத்துக் கொண்டிருந்த முருகதாஸ், அங்கு ஏற்பட்ட விபத்து ஒன்றினால் அப்செட். எப்படி?
இந்த சண்டைக்காட்சியின் இடையே ஸ்ருதியும் இருப்பது போல சீன். தன்னை தாக்க வரும் எதிரிகளை சூர்யா துவம்சம் செய்வதுடன் ஸ்ருதியையும் காயம் படாமல் காப்பாற்றுகிற மாதிரி எடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில்தான் விபத்துக்குள்ளாகியிருக்கிறார் ஸ்ருதி.
அவசரம் அவசரமாக மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டவர், வீட்டில் ரெஸ்ட் எடுத்து வருகிறார். ஆனாலும் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்கி வருகிறார் முருகதாஸ்.

Sabtu, 28 Agustus 2010

நேற்று சூர்யா, இன்று ஸ்ருதி

கடந்த சில தினங்களாகவே கோடம்பாக்கத்தில் பெரும் புகைச்சல் ஒன்று! ஒரு நடிகருக்கு சகலமுமாக இருப்பது பிஆர்ஓ என்று சொல்லப்படும் மக்கள் தொடர்பாளர்தான். நேருக்கு நேர் படத்தில் சூர்யா அறிமுகம் ஆன
காலத்திலிருந்து கடந்த 48 மணி நேரத்திற்கு முன்பு வரை அவருக்கு பிஆர்ஓ வாக இருந்தவர் நிகில் முருகன். சூர்யா குறித்த நெகட்டிவ் செய்திகள் வரும்போதெல்லாம் நிகிலிடமிருந்து ஒரு போன் வரும். என்ன பிரச்சனை? ஏன் இப்படி ஒரு நியூஸ்? என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்பார். இனிமேல் சூர்யாவுக்காக நிகில் போன் செய்யப் போவதில்லை. அப்படியென்றால்?
இந்த போன் இனி ஜான்சன் என்ற பிஆர் ஓ விடமிருந்து வரக்கூடும். ஏனென்றால் சூர்யா, கார்த்தி இருவருக்குமே இனி ஜான்சன்தான் பிஆர்ஓ என்று அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார் சிவகுமார். ஒருவரை திடீர் என்று நீக்க காரணம் வேண்டுமே? விசாரித்தால் திரையுலகில் பலரும் கிசுகிசுக்கிற காரணம் இதுதான்.
நான் மகான் அல்ல ரிலீஸ் தினத்தன்று நிகில் முருகனின் ட்யூட்டர் புக்கில் ஒரு செய்தி. இந்த படத்திற்கு சரியான ஓப்பனிங் இல்லையென்று. இதை படித்த சிவகுமார் நிகில் முருகனை கடிந்து கொண்டாராம். அதன் பிறகுதான் அந்த இடத்தில் ஜான்சன் அமர வைக்கப்பட்டாராம். நேற்றைய பிரச்சனை நேற்றோடு என்று நினைத்திருந்த நிகிலுக்கு இன்று மேலும் புது செய்தி.
'ஏழாம் அறிவு' படத்தின் ஹீரோயின் ஸ்ருதி கமலிடமிருந்து ஒரு மெயில் வந்திருக்கிறது பத்திரிகையாளர்களுக்கு. அதில், இன்றிலிருந்து எனக்கான பிஆர்ஓவாக ஜான்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று அறிவித்திருக்கிறார் அவர். இப்படத்தின் ஹீரோ சூர்யா என்பதும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் நிகில் முருகனை தன்னிடமிருந்து நீக்கினார் என்பதும் ஸ்ருதியின் மெயிலோடு முடிச்சு போடுகிற சமாச்சாரம் ஆகியிருக்கிறது பத்திரிகையாளர்கள் மத்தியில்.

Jumat, 20 Agustus 2010

எல்லா காட்சிகளையும் ஒரே ஷாட்டிலேயே முடித்த ஸ்ருதி


கமல் மகள் ஸ்ருதி 7-ம் அறிவு படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்பில் ஸ்ருதியின் சுறுசுறுப்பு நடிப்புகளை யெல்லாம் பார்த்து
படப்பிடிப்பு குழுவினர் வியக்கின்றனர்.
எல்லா காட்சிகளையும் ஒரே ஷாட்டிலேயே முடித்து சபாஸ் வாங்குகிறாராம்.
அப்பா மாதிரியே உயர்ந்த இடத்துக்கு வருவார் என்கிறார்கள்.