Rabu, 15 September 2010

குட்டிப்பிசாசு டிரைலர் வெளியிட்டார், கருணாநிதி


டைரக்டர் இராம.நாராயணன் இயக்கும் புதிய படமான குட்டிப்பிசாசு படத்தின் டிரைலரை முதல்வர் கருணாநிதி
வெளியிட்டார். 100 படங்களுக்கும் மேல் இயக்கி சாதனை புரிந்தவர் இராம.நாராயணன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அவர் பதவியேற்ற பிறகு புதிய படங்கள் இயக்காமல் இருந்தார். ஆனாலும் 2012 உள்பட பல மொழி மாற்றுப் படங்களை வாங்கி வெளியிட்டு வந்தார். இப்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை தயாரித்து இயக்குகிறார். இது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் வகையில், அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸில் அசத்தியுள்ளார்களாம் இந்தப் படத்தில். இதற்கான கிராபிக்ஸ் வேலைகளை சில்வர்லைன் நிறுவனம் ஒரு வருடமாக செய்து வந்தது. இதுவரை எந்த மொழிப் படங்களிலும் இடம்பெறாத 18 அடி உயர பிரமாண்ட கார் மனிதன் இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறார் இராம நாராயணன். படத்தில் குட்டிப் பிசாசாக நடிப்பவர் பேபி கீர்த்திகா. இவர் சிறந்த நடனத்துக்காக பல விருதுகளை குவித்துள்ளார். இவரைத் தவிர ராம்ஜி, சங்கீதா, ரம்யா கிருஷ்ணன், கஞ்சா கருப்பு, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வில்லன்களாக 3 பேர் புதிதாக அறிமுகமாகிறார்கள். தேவா இசையில், கோடை விடுமுறை ஸ்பெஷலாக, குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்ய வருகிறது குட்டிப் பிசாசு.
இந்த படத்தின் டிரைலரை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். முதல்வரின் வீட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் டைரக்டர் இராம.நாராயணன், இயக்குநர் அமிர்தம், முரசொலி செல்வம் மற்றும் முரளி ராமநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tidak ada komentar:

Posting Komentar