Tampilkan postingan dengan label விஜய். Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label விஜய். Tampilkan semua postingan

Senin, 01 November 2010

வித்தியசமான கேரக்டரில் விஜய்!


ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வேலாயுதம். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர்.
விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். படத்தை பற்றி ஜெயம் ராஜா கூறுகையில் "'வேலாயுதம்' படத்தில் இருவித கேரக்டரில் நடிக்கிறார் விஜய். விஜய் இருவித கேரக்டர்களையும் மிகவும் சுவாரசியமாக அமைத்துள்ளேன்" என்றார்.

Rabu, 27 Oktober 2010

உள்ளூர்லேயே வச்சுக்கலாம் -விஜய்

Vijay
மலேசியா, லண்டன் என்று உள்ளூர் தமிழர்களை விட்டுவிட்டு உலக தமிழர்கள் முன்னிலையில் ஆடியோவை ரிலீஸ் பண்ண கிளம்பிவிட்டார்கள்
கோடம்பாக்கத்தினர். 'விண்ணை தாண்டி வருவாயா' படத்திற்காக கவுதம், லண்டனில் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் இந்த பழக்கத்தை! அப்படியே கெட்டியாக பற்றிக் கொண்டது தமிழ்சினிமா. 'ஒச்சாயி' படத்திற்கு கூட ஆஸ்திரேலியாவில் ஆடியோவை ரிலீஸ் செய்து இன்டஸ்ரியை அதிர வைத்தார்கள். எந்திரன் பற்றி கேட்கவே வேண்டாம். பணக்கார குழந்தை. பல்லு முளைக்காவிட்டாலும் பபுள்கம் தின்னும்!

மீண்டும் தனது பட இசை வெளியீட்டு விழாவை லண்டனில் வைக்கப் போகிறார் சிம்பு. இவரே இப்படி என்றால் விஜய் படக்குழு சும்மாயிருக்குமா? காவலன் பட பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைக்கலாம் என்றாராம் இப்படத்தின் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம். வழக்கம் போல ஃபைல் விஜய் டேபிளுக்கு போயிருக்கிறது.
அவரோ, "ஏன் மலேசியாவுல வைக்கணும், நம்ம ஊர்லயே வைக்கலாமே?" என்றாராம். "சிங்கப்பூர்லயாவது..." என்று ஆசைப்பட்ட ஷக்தி சிதம்பரத்திற்கு விஜய் சொன்ன பதில் 'நோ' என்பதுதான். என்ன காரணம் என்பதுதான் புரியவேயில்லை.

Selasa, 12 Oktober 2010

கார் வாங்கிய விஜய் , தனுஸ்


ஆக்ஷன் படம் ஓடினால் ஆக்ஷன் மேனியா, லவ் சப்ஜெக்ட் ஜெயித்தால் லவ் மேனியா என்று கோலிவுட் ஹீரோக்கள் தங்கள் படங்களின் பாணியை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அதேபோல் தாங்கள் வாங்கும் காரில் எது டாப் கிளாஸ் என்று தேர்வு செய்து வாங்குவதிலும் போட்டி நிலவுகிறது. சொகுசு காரான பிஎம்டபிள்யூ தான் இப்போதைய கோலிவுட்டின் டிரெண்ட். நடிகர் விஜய் சமீபகாலமாக இந்த காரில்தான் வலம் வருகிறார். அதேபோல் தனுஷும் இந்த கார் வாங்கி இருக்கிறார். நடிகைகளில் த்ரிஷா, நயன்தாரா, டைரக்டர்களில் ஷங்கர், லிங்குசாமி ஆகியோர் பிஎம்டபிள்யூ பிரியர்கள். அந்த காரில்தான் ஷூட்டிங் செல்கின்றனர். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவும் அவ்வப்போது கார்களை மாற்றுகிறார்.

Senin, 04 Oktober 2010

மேட்டுப்பாளையத்தில் “காவலன்” விஜயை காண முண்டியடித்த ரசிகர்கள்

நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் காவலன். இதில் கதாநாயகியாக அசின் நடிக்கிறார். வடிவேல் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
 
நேற்று நடிகர் விஜய்-அசின் நடித்த காட்சிகள் மேட்டுப் பாளையத்தில் படமாக்கப்பட்டது. ரெயில் நிலையத்தில் இந்த படப்பிடிப்பு நடந்தது. விஜயை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர் களைப்பார்த்து கும்பிட்டபடி விஜய் வந்தார். இன்று 2-வது நாளாக மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் சூட்டிங் நடக்கிறது.
படப்பிடிப்பில் கலந்து கொள்ள அசின் நேற்று மேட்டுப்பாளையம் வந்தார். இன்று நடிகர் வடிவேலு வருகிறார். இந்த படப்பிடிப்பு 5 நாட்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் நடக்கிறது. ரெயில் நிலையம், பிளாக் தண்டர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. காவலன் படத்தை சித்திக் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் விஜய் பிளாக் தண்டரில் உள்ள ரிசார்ட்சில் தங்குகிறார்.

Sabtu, 25 September 2010

விஜய் படத்தில் தமிழீழ ஆதரவு கருத்துக்கள்…


விஜய் அடுத்து நடிக்கும் பகலவன் படத்தில் தமிழீல விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் இடம்பெறும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் சீமான்.
தமிழக மீனவர்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்கியும் காயப்படுத்தி
துன்புறுத்தியும் வரும் இலங்கை கடற்படையை கண்டித்து சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமானின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக குற்றம்சாட்டி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது போலீஸ். தற்போது அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் சிறையில் இருந்தபடியே சில திட்டங்களைத் தீட்டியுள்ள சீமான் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
ஈழப்போரில் திராவிட கட்சிகள் ஆரியருக்கு உதவி செய்ததன் மூலம் ஈழத் தமிழர்களை எப்படியெல்லாம் கொன்றுகுவித்தது என்பதை விளக்கம் புத்தகம் ஒன்றை அவர் சிறைக்குள்ளேயே எழுதி வருகிறார். திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றிவிட்டு தொப்புள்கொடி உறவான தமிழர்களை அழிக்க, மறைமுகமாக ஆரியர்களுக்கு செய்த உதவிகள் என்னென்ன என்று விளக்கமாக அதில் எழுதியுள்ளார் சீமான்.
இப்புத்தகத்திற்கு ‘ஆரியம் வெல்ல..திராவிடம் செய்த உதவி’ என்றே அவர் தலைப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறையை விட்டு விடுதலையாகி வெளியே வந்ததும் இப்புத்தக வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்.
அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கும் படத்தை மிகவும் பரபரப்பாக உருவாக்கப் போகிறார். இதற்கான திரைக்கதையை சிறைக்குள்ளேயே எழுதி முடித்துவிட்டார் சீமான். படத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் நிறையவே இருக்குமாம். தமிழீழப் போராளிகளை ஆதரிக்கும் இளைஞன் வேடத்தில் விஜய் நடிக்கிறார்.
சமீபத்தில் தன்னைக் காண சிறைக்கு வந்த பகலவன் பட தயாரிப்பாளர் தாணுவுக்கு திரைக்கதையை விவரித்துள்ளார் சீமான். அதில் சிலிர்த்துப் போன தாணு, தமிழீழ போராட்டத்துக்கு தனது பங்களிப்பாக இந்தப் படம் அமையும் என்று கூறியுள்ளார்.
சீமான் விடுதலையானதும் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம். தணிக்கைக் குழுவினரின் கெடுபிடியையும் மனதில் கொண்டு மிக எச்சரிக்கையுடன் இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார் தம்பி சீமான் என்று தாணு குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியுடன் சந்திப்பு, அசின் விவகாரம் போன்றவற்றால் விஜய்க்கு தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள கெட்ட பெயரைப் போக்கவும் இந்தப் படம் உதவும் என நம்புகிறார்கள்.
இந்தப் படப்பிடிப்பு நடக்கும்போதே, நாம் தமிழர் கட்சியின் பிரமாண்ட மாநாட்டை நடத்தி தனது பலத்தைக் காட்டவும் முடிவு செய்துள்ளார் சீமான்.

Jumat, 24 September 2010

விஐயின் பிராக்டிகல்

வெயில் வந்தா பகலு, லைட்டு போட்டா நைட்டுன்னு ஒரு சவசவ வாழ்க்கையை சில ஹீரோக்கள் அனுபவித்துக் கொண்டிருக்க, ஒவ்வொரு மணித்துளியையும் லட்சங்களாக்கிக் கொண்டிருக்கிறார் விஜய். நோ ரெஸ்ட். அடுத்தடுத்த படங்களுக்கு கதை கேட்பதிலும் அது பிடித்திருந்தால் சம்பளம் பேசி லாக்கரை நிரப்பிக் கொள்வதுமாக ரொம்பவே பிராக்டிகல்! இத இத இத இததான் எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்களும்.
விஜய்யின் லேட்டஸ்ட் கமிட்மென்ட் என்ன தெரியுமா? விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிப் போட்டிருப்பதுதான். யாவரும் நலம் என்ற படத்தையடுத்து தமிழில் ஒரு சிறப்பான படத்தை இயக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் இந்த விக்ரம். இவருக்கு தோதாக வந்து சிக்கினார் சீயான் விக்ரம். இருவரும் இணைந்து 24 என்ற படத்தை உருவாக்க திட்டமிட்டார்கள். இதில் என்ன ஏழரையோ? புராஜக்ட்டின் துவக்க நிலையிலேயே கட்டை குறுக்கே விழுந்து திட்டமே பணால்.
இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்திற்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார் விஜய். அவர் அனுப்பி முதலில் கதை கேட்ட விஜய் பிடிக்கல என்று அனுப்பிவிட்டார். அதன் பின் வேறு கதையோடு சில தினங்களுக்கு முன் வந்து அசத்தினாராம் விக்ரம் குமார். முழுக்க முழுக்க திருப்தியான விஜய் ரத்னம் தரப்பிலிருந்து அட்வான்சும் வாங்கிக் கொண்டார். இதுதான் துவக்க நிலை என்றாலும் பி.சி.ஸ்ரீராம் இப்படத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று அனைவரும் கூடி முடிவெடுத்திருக்கிறார்கள். அவரும் சம்மதித்திருக்கிறாராம்.
வேலாயுதத்தை தொடர்ந்து திரைக்கு வரப்போகிற விஜய் படம் இதுவேதான்!

Minggu, 19 September 2010

என் ஸ்டைலில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் : விஜய்!


ஏகவீரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம், ‘காவலன்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. விஜய்,
அசின், வடிவேலு, ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம், தயாரிப்பாளர் சி.ரோமேஷ்பாபு, இயக்குனர் சித்திக் கலந்து கொண்டனர். நிருபர்களிடம் விஜய் கூறியதாவது: இந்த படத்துக்கு ‘காவல்காரன்’ என்றும், ‘காவல் காதல்’ என்றும் யார், யாரோ பெயர் சூட்டியிருந்தனர். டைட்டிலுக்கு பிரச்னை என்றெல்லாம் சொன்னார்கள். அது தவறு. ‘காவலன்’ என்பதே பொருத்தமான டைட்டில். அதையே வைத்துள்ளோம். ‘சிவகாசி’, ‘போக்கிரி’ படங்களுக்கு பிறகு அசினுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். திடீரென்று பாலிவுட்டுக்கு சென்ற அவரை, மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறோம்.

சித்திக் டைரக்ஷனில் நானும், வடிவேலுவும் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் நடித்தோம். இப்போது இந்த படத்தில் நடிக்கிறோம். டயலாக் காமெடி, ஆக்ஷன் காமெடி என, ‘ப்ரண்ட்ஸ்’ படத்துக்கு நிகராக இப்படம் இருக்கும். காமெடி கலந்த காதல் கதை என்றாலும், அதிரடி ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் உண்டு. சித்திக்கிடம் மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்ட கதை இது. தமிழில் உருவாக்க திட்டமிட்டோம். ஆனால், மலையாளத்தில் ‘பாடிகார்ட்’ பெயரில் உருவாக்கினார். அதை தமிழில் ரீமேக் செய்கிறோம். எனது வழக்கமான பார்முலாவில் இருந்து மாறுபட்ட படம். ‘காவலன்’, ‘வேலாயுதம்’ படங்களுக்கு பிறகு சீமான் இயக்கத்தில் நடிக்க கதை கேட்டுள்ளேன்.

Sabtu, 18 September 2010

தொடர் படங்களால் பிஸியான விஜய்


தொடர்ந்து அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருவதால் நடிகர் விஜய் ரொம்பவே பிஸியாக உள்ளார். ஏற்கனே பல படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ள
விஜய் தற்போது களவாணி பட இயக்குனர் சற்குணத்தின் புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளார். போக்கிரிக்கு பின் விஜய் போலீஸ் வேடத்தில் வர இருக்கும் அடுத்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காவலன் படத்தில் நடித்து வரும் விஜய், வேலாயுதம் படத்தின் இறுதி கட்ட வேலையையும் ஒருபுறம் கவனித்து வருகிறார்.
அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார்.
மேலும் சீமானின் பகலவன் படத்திலும் விஜய் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
இந்த படங்கள் அனைத்தையும் முடித்த பிறகு சற்குணத்தின் புதிய படத்தின் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசினுடன் நடிப்பதில் சந்தோஷம்! – விஜய்


அசினுடன் மூன்றாவது முறையாக நடிப்பதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்கிறார் நடிகர் விஜய்.
கேரளாவில் வெற்றிபெற்ற ‘பாடிகார்ட்’ என்ற மலையாள படம்,
‘காவலன்’ என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. ‘பாடிகார்ட்’ படத்தில் திலீப்-நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தார்கள். சித்திக் இயக்கியிருந்தார்.
‘காவலன்’ படத்தில், விஜய்-அசின் ஜோடியாக நடிக்கிறார்கள். ‘பாடிகார்ட்’ படத்தை இயக்கிய சித்திக்தான் காவலன் படத்தையும் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் அறிமுக சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று நடிகர் விஜய், அசின், இயக்குநர் சித்திக் மற்றும் ‘காவலன்’ படக்குழுவினர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
விஜய் கூறுகையில், “இந்த படத்தின் கதையை 2 வருடங்களுக்கு முன்பே சித்திக் என்னிடம் சொன்னார். என் வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதை. இது, காதல் படம். அதிரடியான சண்டை காட்சிகளும் இருக்கும். மனம்விட்டு சிரிக்க வைக்கிற நகைச்சுவையும் இருக்கும்.
காவல்காரன் கிடைக்கல…
இந்த படத்துக்கு, ‘டைட்டில்’ பெரிய பிரச்சினையாக இருந்தது. முதலில், ‘காவல்காரன்’ என்று பெயர் வைக்க நினைத்தோம். ஒரு சில காரணங்களால் அது முடியவில்லை. வேறு சில பெயர்களுக்குப் பிறகு கடைசியாக, காவலன் என்ற பெயர் அமைந்து இருக்கிறது.
சித்திக் இயக்கத்தில், ஏற்கனவே ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்தேன். அதில் வரும் நகைச்சுவை காட்சிகளை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. குறிப்பாக, வடிவேல் தலையில் சுத்தியல் விழுகிற காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிப்பேன்.
அசினுடன்…
அசின் இந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். ஏற்கனவே சிவகாசி, போக்கிரி ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளோம். சிறந்த நடிகை அவர். எங்கள் கூட்டணியில் மூன்றாவது படம். கடந்த இரண்டு படங்களைப்போலவே இந்த படமும் வெற்றி பெறும் எனண நம்புகிறேன்.
படப்பிடிப்பின் இடையில் அசின் இந்தி படத்துக்கு போய்விட்டார். 2 மாதங்களை வீணாக்க வேண்டாமே என்றுதான் வேலாயுதம் படத்தில் நடித்தேன்…,” என்றார்.
அசின் பேசுகையில், “தமிழ் படங்களை ஒதுக்கிவிட்டு நான் இந்திக்கு போகவில்லை. நல்ல கதைக்காக காத்திருந்தேன். காவலன் படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம். விஜய் படங்களில், இது வித்தியாசமான படமாக இருக்கும்.
மலையாளத்தில் இந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். அவர் ஸ்டைல் வேறு. என் ஸ்டைல் வேறு. என்னை, நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேசவேண்டாம்.
விஜய்யுடன் மூன்றாவது முறையாக சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் ‘காவலன்,’ மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்.”
நடிகர் வடிவேல், டைரக்டர் சித்திக், தயாரிப்பாளர் ரமேஷ்பாபு, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஆகியோரும் நிருபர்கள் மத்தியில் பேசினார்கள். மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் நன்றி கூறினார்.

காவலன் படத்தில் ஜோடி விஜய்யுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி – அசின்


“காவலன்” படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று விஜய் பேசியதாவது:-
இந்த படத்தின் கதையை இருவருடங்களுக்கு முன்பே சித்திக் என்னிடம்
சொன்னார். எனது வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதை. இது காதல் படம். ஆக்ஷன், காமெடியும் இருக்கும்.
இந்த படத்துக்கு டைட்டில் பெரிய பிரச்சினையாக இருந்தது. காவல்காரன் என்ற பெயர் வைக்க நினைத்தோம். ஒரு சில காரணங்களால் அது முடியவில்லை. இடையில் காவல் காதல் என்ற பெயரை யாரோ பரப்பிவிட்டனர். கடைசியில் காவலன் என்ற பெயர் அமைந்துள்ளது.
சித்திக்குடன் ஏற்கனவே பிரண்ட்ஸ் படத்தில் சேர்ந்தேன். அதில் வரும் காமெடியை இன்னும் மறக்க முடியவில்லை. குறிப்பாக வடிவேலு தலையில் சுத்தியல் விழும் சீனை இப்ப பார்த்தாலும் சிரிப்பேன்.
அசின் இந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். ஏற்கனவே சிவகாசி, போக்கிரி படங்களில் சேர்ந்து நடித்தோம். இது எங்கள் கூட்டணியில் மூன்றாவது படம். கடந்த இரு படங்களை போலவே இதுவும் வெற்றி பெரும்.
படப்பிடிப்பு இடையில் அசின் இந்தி படத்துக்காக போய்விட்டார். இரு மாதங்களை வீணாக்க வேண்டாம் என கருதி ”வேலாயுதம் படத்திலும் நடித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அசின் பேசியதாவது:-
தமிழ் படங்களை ஒதுக்கிவிட்டு நான் இந்திக்கு போகவில்லை. நல்ல கதைக்காக காத்திருந்தேன். “காவலன்” படத்தில் எனக்கு வலுவான கேரக்டர் விஜய் படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும். மலையாளத்தில் இந்த படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். அவர் ஸ்டைலில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் என் பாணியில் நடிப்பேன். விஜய்யுடன் மூன்றாவது முறையாக இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சி இந்த படம் எங்கள் கூட்டணியில் ஹாட்ரிக் வெற்றியாக அமையும். வடிவேல், இயக்குனர் சித்திக், தயாரிப்பாளர் ரமேஷ்பாபு, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், மக்கள் தொடர்பாளர் பி.டி. செல்வகுமார் ஆகியோரும் இதில் பங்கேற்று பேசினர்.

Jumat, 17 September 2010

களவாணி இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் இளைய தளபதி!


தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை வெற்றி பாதையாக மாற்றிய இயக்குநர் சற்குணம்(களவாணி), தற்போது இளைய தளபதியுடன் இணைய உள்ளார். விஜய் கையில் ஷங்கர், சீமான், ராஜா, விக்ரம் என மெகா இயக்குநர்களின் படம் இருக்க, சற்குணத்திற்கு தனது கால்ஷீட்டை ஒதுக்கிருக்கிறார். சற்குணம் படத்தில் விஜய்-க்கு என்ன கேரக்டர் தெரியுமா-?,,,, போலீஸ் கேரக்டர்!

போக்கிரி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மட்டும் விஜய் போலீஸ் உடை அணிந்து வலம் வந்தார். ஆன இந்த தடவை அப்படி இல்லையாம். விஜய் படம் முழுக்க போலீசாக வருகிறாராம். விஜய் ஓகே பண்ணலாம் என்ற சொன்னதும், முழு உத்வேகத்துடன் கதை எழுதி வருகிறாராம் சற்குணம்.

Rabu, 15 September 2010

ஐரோப்பாவில் காவலன் 'விஜய்'


ஏகவீரா கிரியேஷன்ஸ் சார்பில் சி.ரோமேஷ்பாபு தயாரிக்கும் படம், ‘காவலன்’. விஜய், அசின் ஜோடி. முக்கிய வேடங்களில் ராஜ்கிரண், வடிவேலு, ரோஜா, லிவிங்ஸ்டன், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, என்.கே.ஏகாம்பரம். வசனம், குருவரன். இசை, வித்யாசாகர். பாடல்கள்: பா.விஜய், யுகபாரதி, கபிலன், விவேகா. கதை, திரைக்கதை எழுதி சித்திக் இயக்குகிறார். வேலூர் வி.ஐ.டி கல்லூரியில், 5 ஆயிரம் மாணவர்களுக்கு மத்தியில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பிறகு காரைக்குடி, கும்பகோணம், மலேசியா, பாங்காக் பகுதிகளில் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து கேரளா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

Kamis, 02 September 2010

மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை


தனக்கும் விஜயகாந்துக்கும் வாழ்வளித்த சட்டம் ஒரு இருட்டறை படத்தை ரீமேக் செய்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன். எண்பதுகளின் ஆரம்பத்தில்
வெளியான படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்தப் படம் தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்றது. நாயகனாக நடித்த விஜயகாந்துக்கு பெரிய திருப்புமுனை அமைத்துத் தந்த படம் இது. எஸ் ஏ சந்திரசேகர், புரட்சி இயக்குநர் என தன் பெயருக்குப் பின் அடைமொழி போட்டுக் கொள்ள காரணமாக அமைந்ததும் இந்தப் படமே.
இந்தப் படத்தை தெலுங்கு, இந்தி என வேறு மொழிகளில் ரீமேக் செய்தனர். அத்தனை மொழிகளிலும் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தியில் ரஜினி, அமிதாப் நடிக்க அந்தாகானூன் என்ற பெயரில் வெளியானது இந்தப் படம்தான். இப்போது இந்தப் படத்தை மீண்டும் தமிழில் எடுக்கிறார் சந்திரசேகர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தப் படத்தை மீண்டும் எடுக்கிறேன் என்று தெரிந்து பல முன்னணி நடிகர்கள் தங்களை வைத்து இயக்குமாறு கேட்டுக் கொண்டனர். நான் இன்னும் ஹீரோ யார் என்று முடிவு செய்யவில்லை. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப திரைக்கதையில் மாற்றம் செய்து இந்தப்படத்தை உருவாக்கப் போகிறேன்….” என்றார்.

Rabu, 25 Agustus 2010

பகலவன் படம் டிராப் இல்லை தாணு-விஜய்-சீமான் உறுதி!

எழுத நேரமில்லாமல் பிசியாகவே இருப்பவர்களுக்கு சிறைக்கூடம் வசதிதான்! சிறைக்கு போன சீமான் அங்கே அமைதியாக செய்து முடித்த முக்கியமான
வேலை ஒன்று பகலவன் ஸ்கிரிப்டை பக்காவாக முடித்ததுதான். கடந்த பல மாதங்களாகவே ஒரு குழுவோடு இந்த கதையை மெருகேற்றிக் கொண்டிருந்தார் சீமான். கதை முழுமையடையும்போதுதான் இந்த கைதும் சிறையும்!
உள்ளே போன சீமான் இந்த ஸ்கிரிப்டை முழுமையாக்கிவிட்டாராம் இப்போது. நேற்று சிறைச்சாலைக்கு சென்றிருந்த தயாரிப்பாளர் தாணு இந்த படம் பற்றிய அடுத்தடுத்த முன்னேற்றங்கள் குறித்து சீமானிடம் பகிர்ந்து கொண்டாராம்.
நான் இந்த படத்தில் நடிக்கிற விஷயத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் ஆக வேண்டியதை பதற்றமில்லாமல் பாருங்கள் என்று தாணுவிடமும், சிறைக்குள்ளிருக்கும் சீமானிடமும் உறுதியாக கூறியிருக்கிறாராம் விஜய். தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் காவலன், வேலாயுதம் படங்களுக்கு பிறகு சீமான் இயக்கப் போகும் பகலவன்தான் விஜய் நடிக்க போகும் படம் என்று உறுதியாக சொல்கிறார்கள்.

Sabtu, 21 Agustus 2010

லிங்குசாமிக்கு மறுத்த விஜய்

பெரிய நடிகர்களை இயக்கியவர்களுக்கு மீண்டும் அதே லெவல் கூட்டுதான் பிடிக்கும். நினைத்தால் புதுமுகங்களை கூட அறிமுகப்படுத்தலாம். என்றாலும்
அகலமான வியாபாரம். அதிர வைக்கும் சம்பளம் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் மீண்டும் மீண்டும் பெரிய நடிகர்களின் கால்ஷீட்டுக்கு முயல்கிறார்கள். அப்படி முயன்றவர்தான் லிங்குசாமியும்.
வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், விஜய்யும் இவரும் அவ்வப்போது சந்தித்து கதை பரிமாறிக் கொண்டார்கள். இந்த விஷயம் தெரிந்துதான் சிம்புவும் வெளிப்படையாக ஒரு அறிக்கை வெளியிட்டார். என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு வேறொரு ஹீரோவை வைத்து படம் எடுப்பது என்ன நியாயம் என்றெல்லாம் புலம்பி தள்ளினார் அவர்.
இந்த நிலையில் லிங்குசாமியின் அடுத்த படத்தில் விஜய்தான் ஹீரோ என்ற நம்பிக்கை டமால் ஆகி விட்டதாம். காரணம், விஜய்க்கு லிங்கு சொன்ன சில கதை சுருக்கங்கள் அவரை அவ்வளவாக இம்ப்ரஸ் செய்யவில்லையாம். இயக்குனரின் அடுத்த சாய்ஸ் அஜீத் என்கிறார்கள். ஆனாலும் லிங்குசாமியை சுற்றி சுற்றி வருகிறார் கார்த்தி. மீண்டும் பையா போல ஒரு அதிரடி உருவாகலாம் என்கிறது கோடம்பாக்கக் குருவி!