Tampilkan postingan dengan label அசின். Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label அசின். Tampilkan semua postingan
Rabu, 17 November 2010
Jumat, 29 Oktober 2010
அசின் விக்கெட்டை வீழ்த்துவாரா யுவராஜ்…?

கிசுகிசுக்கப்படுவது சகஜம். நடிகை அசின் பாலிவுட் போனதிலிருந்து சில கிரிக்கெட் வீரர்களின் கண்கள் அவர் மீது விழுந்திருக்கின்றன.
உத்தம புத்திரன் Movie Gallary
ஆமாங்க… இந்த வருடம் அசின் பிறந்தநாளின் போது, இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி மற்றும் யுவராஜ்சிங் அசினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருக்கின்றனர். தோனியின் கோட்டா முடிந்திவிட்டபடியால், யுவராஜ்சிங் அசினின் விக்கெட்டை வீழ்த்த ரெடியாகிவிட்டாரோ என்னமோ…?
Selasa, 19 Oktober 2010
சந்தோஷம், பதட்டம், பயம் எல்லாமே கலந்த காவலன் -அசின் ஓப்பன் டாக்
காவலன் சூட்டிங்கை முடித்துக் கொண்டு மும்பை புறப்பட்டுச் சென்றார் நடிகை அசின். இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதுடன்,
அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்ததான் நடிகை அசினுக்கு எதிராக பொதுநல ஆர்வலர்கள் பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விஜய்யுடன் அவர் ஜோடி சேர்ந்திருக்கும் காவலன் பட சூட்டிங் நடக்கும் இடங்களுக்குச் சென்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். தமிழகத்தில் வில்லங்கம் ஏற்பட்டதால் சூட்டிங்கை கேரளாவுக்கு மாற்றியது காவலன் டீம். அங்கேயும் கறுப்புக் கொடிதான்.
இதனால் எப்படா சூட்டிங் முடியும் என காத்திருந்த அசின், ஒருவழியாக காவலன் சூட்டிங்கை முடித்து விட்டார். தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலும் நடித்து முடித்த அசின், சூட்டிங் முடிந்த கையோடு மும்பை புறப்பட்டு சென்று விட்டார்.
காவலன் சூட்டிங் குறித்து அசின் அளித்துள்ள பேட்டியில், “வாழ்க்கையில் என்னால் மறக்கமுடியாத சூட்டிங்னா அது காவலன் சூட்டிங்காத்தான் இருக்கும்.சந்தோஷம், பதட்டம், பயம் எல்லாமே கலந்த சூட்டிங் இதுதான். தினமும் திக் திக் என இருக்கும். ஒரு கட்டத்தில் சீக்கிரம் இந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டால் போதும் என்றாகிவிட்டது. ஆனால் விஜய்யும் சித்திக்கும் என்னைப் பார்த்துக் கொண்ட விதம், எனக்கு ஆதரவளித்த விதம் மறக்க முடியாதது,” என்று கூறியுள்ளார்.
அடுத்த வாரத்தில் காவலன் படத்துக்கான டப்பிங் பணிகள் நடைபெற உள்ளன. இதில் அசின் பங்கேற்று சொந்த குரலில் டப்பிங் பேசுவார் என் காவலன் யூனிட்டிங் இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Jumat, 15 Oktober 2010
அசினினால் கண்பார்வை இழந்தோர் அசின்மீது குற்றசாட்டு
சிறிலங்க அரசோடு இணைந்த யாழ்ப்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற பலர் கண் பார்வை இழந்துள்ளனர்.
இதற்குப் பொறுப்பேற்று நடிகை அசின் பதில் சொல்ல வேண்டும் என்று மே 17 இயக்கம் கோரியுள்ளது.
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா (ஐஃபா), தமிழ்த் திரைப்பட உலகம், தமிழர் இயக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பால் படுதோல்வியில் முடிந்தது.
அதன் பிறகு இந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்த ‘ரெடி’ திரைப்பட படபிடிப்பிற்காக இலங்கை சென்ற நடிகை அசின், படபிடிப்பு முடிந்ததும் இலங்கை அரசின் விருந்தினராக தங்கியிருந்தார். அப்போது சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவின் உதவியுடன் தமிழர் பகுதிகளில் கண் சிகிச்சை முகாம் நடத்தச் சென்றார். யாழ்ப்பாணத்திலும், முல்லைத் தீவிலும் இந்த கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கண் வெண்விழிப்படலத்திற்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மேலும் 10 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்போவதாகவும் நடிகை அசின் கூறியிருந்தார்.
நடிகை அசின் முன்னிலையில் நடத்தப்பட்ட அந்த கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பலருக்கு கண் பார்வை போய்விட்ட அதிர்ச்சி செய்து வந்துள்ளது. கண் பார்வை இழந்தவர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றால், அரசு மருத்துவமனையில் ரூ.4,500 செலுத்த வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுதாக இருந்தால் ரூ.25,000 வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையை இன்று செய்தியாளர்களிடம் விளக்கிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், சிறிலங்க அரசோடு இணைந்து நடிகை அசின் நடத்திய கண் அறுவை சிகிச்சை முகாம் அவர்களின் வாழ்வை அழித்துவிட்டது என்று குற்றம் சாற்றினார்.
போரினால் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களை, மனிதாபிமான போர்வையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமினால் நடிகை அசின் அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளார் என்றும், இதற்காக அவர் ஈழத் தமிழர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
அசின் நடத்திய கண் சிகிச்சை முகாம் இங்குள்ள நடிகர்கள் சிலருக்கு ஒரு கண் திறப்பாக இருக்கட்டும் என்று கூறிய திருமுருகன், இதற்குப் பிறகாவது சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட சூழ்ச்சிகளில் தமிழ்த் திரைப்பட நடிகர்களும், நடிகைகளும் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திருமுருகனுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய இதழாளர் கா.அய்யநாதன், சிறிலங்க அரசிற்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்துக் கொண்டிருக்கும் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் அயல் நாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதை ஏன் சிறிலங்க அதிபரின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச தடுத்து வருகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
வன்னி முகாமில் இருந்து தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி அளித்தது சர்வதேச இடம்பெயர்வோர் அமைப்புதான் (International immigration organization) என்றும், இன்றுவரை சிறிலங்க அரசு அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை என்றும் கூறிய அய்யநாதன், பிழைக்க வழியின்றி, கண்ணி வெடிகளை அகற்றுதல் போன்ற மிக ஆபத்தான வேலைகளில் தமிழ்ப் பெண்கள் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் திரைப்பட உலகின் எதிர்ப்பை மீறி ஐஃபா விழாவில் கலந்து கொண்ட இந்தி நடிகர் நடித்துள்ள ரத்த சரித்திரம், அசின் நடித்து வெளிவரும் திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஜனநாயக வழியில் இயக்கம் நடத்துவோம் என்று அவர்கள் கூறினர்.
Kamis, 14 Oktober 2010
அசின் பெயரில் இன்டர்நெட்டில் மோசடி

இந்தி, தமிழ் படங்களில் பிசியாக இருக்கிறார் அசின். இந்தி
கஜினி மூலம் உலகமெங்கும் ரசிகர்கள் கிடைத்துள்ளனர். சல்மான்கானுடன் நடிக்கும் “ரெடி” படம் ரிலீசுக்கு தயாராகிறது.
விஜய் ஜோடி யாக நடிக்கும் “காவலன்” படப்பிடிப்பும் இறுதிகட்டத் தில் உள்ளது.
இந்த நிலையில் அசின் பெயரில் இன்டர்நெட்டில் போலி வெப்சைட்கள் துவங்கி மோசடி நடக்கும் தகவல் அம்பலமாகியுள்ளது.
மர்ம கும்பல் அசின் பெயரில் துவக்கிய வெப்சைட் கள் மூலம் ரசிகர்களிடம் தொடர்பு வைத்து உரையாடி வருகின்றனர். அதில் அசின் படங்களையும் போட்டு வைத்துள்ளனர். ரசிகர்களும் அவற்றை உண்மை என்று நம்பி கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.
இந்த மோசடி அசினுக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தார். ரசிகர்கள் போலியை உண்மை என்று நம்பி ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறிய தாவது:-
டுவிட்டர் இணைய தளத்தில் நான் இல்லை. ஆனால் எனது பெயரை போலியாக சிலர் அதில் உருவாக்கியுள்ளனர். ரசிகர் கள் அதை உண்மை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது நான் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் டுவிட்டரிலோ, ஆர்காட்டிலோ அல்லது வேறு எந்த வெப்சைட்டிலும் இல்லை. எதிர்காலத்தில் ஒருவேளை இதில் வரலாம். ஆனால் இப்போது அவற்றில் இல்லை. இணைய தளங்களில் எனது பெயரை யாரும் பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அசின் கூறி யள்ளார்.
Selasa, 12 Oktober 2010
படங்கள் தோல்வி அடைந்தால் பயனில்லை. அசின்
கடைசியாக 'லண்டன் ட்ரீம்ஸ்' படத்தில் சல்மான் கானுடன் நடித்தார் அசின். இப்படம் ரிலீசாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. அதற்கு பின் அவர் நடித்த படமே
வெளிவரவில்லை. இது பற்றி அசின் கூறியது: 'லண்டன் ட்ரீம்ஸ்' படத்துக்கு பின் விளம்பர படங்களில் பிசியாக இருந்தேன். அதன் பின் தமிழில் ‘காவலன்’ பட வாய்ப்பு கிடைத்தது. இந்தியில் மீண்டும் சல்மான் கானுடன் ÔரெடிÕயில் நடிக்க¤றேன். இந்த இரண்டுமே பெரிய படங்கள். அதனால் தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படங்கள் வெளியாகும். அடுத்தடுத்து படங்கள் வெளியாக¤, தோல்வி அடைந்தால் அதனால் பயனில்லை.
ஆண்டுக்கு ஒரு படம் வந்தாலும் பேசப்பட வேண்டும். இந்தியில் மேலும் இரு படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. 'காவலன்' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பது பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை. அது பற்றி எனக்கு தெரியாது. இவ்வாறு அசின் கூறினார்.
வெளிவரவில்லை. இது பற்றி அசின் கூறியது: 'லண்டன் ட்ரீம்ஸ்' படத்துக்கு பின் விளம்பர படங்களில் பிசியாக இருந்தேன். அதன் பின் தமிழில் ‘காவலன்’ பட வாய்ப்பு கிடைத்தது. இந்தியில் மீண்டும் சல்மான் கானுடன் ÔரெடிÕயில் நடிக்க¤றேன். இந்த இரண்டுமே பெரிய படங்கள். அதனால் தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படங்கள் வெளியாகும். அடுத்தடுத்து படங்கள் வெளியாக¤, தோல்வி அடைந்தால் அதனால் பயனில்லை.
ஆண்டுக்கு ஒரு படம் வந்தாலும் பேசப்பட வேண்டும். இந்தியில் மேலும் இரு படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. 'காவலன்' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பது பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை. அது பற்றி எனக்கு தெரியாது. இவ்வாறு அசின் கூறினார்.
Sabtu, 25 September 2010
மொழி புரிந்து நடிப்பதே சிறந்தது : அசின்
சென்னையில் நடந்து வரும் ‘காவலன்’ ஷூட்டிங்கில் இருக்கும் அசின் கூறியதாவது: டைரக்டர் சித்திக்கின் ரசிகை நான். தமிழில் அவர் இயக்கிய ‘ப்ரண்ட்ஸ்’ மற்றும் சில மலையாள படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்.
‘பாடிகார்ட்’ படத்துக்கு முதலில் என்னைத்தான் கேட்டார். இந்தியில் ‘கஜினி’, ‘லண்டன் ட்ரீம்ஸ்’ படங்களில் பிசியாக இருந்ததால், நடிக்க முடியவில்லை. தமிழில் அந்த படம் ‘காவலன்’ பெயரில் ரீமேக் ஆகிறது. சித்திக் டைரக்ஷனில் நடிக்கிறேன். இதற்காக ‘பாடிகார்ட்’ படத்தை பார்த்தேன். அதில் நயன்தாரா ஸ்டைலாக நடித்திருந்தார். விஜய்யுடன் நடித்த ‘சிவகாசி’, ‘போக்கிரி’ படங்கள் ஹிட்டானது. மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி.
இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ‘ரெடி’ படத்திலும், சில விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கில மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளேன். எல்லா மொழிகளும் புரிந்ததால், ஷூட்டிங்கில் பயமின்றி நடிக்க முடிகிறது. யாராக இருந்தாலும், மொழி தெரிந்து நடிப்பதே சிறந்தது. பாலிவுட்டில் குடியேறியதால், சென்னையை மறந்து விட்டதாக அர்த்தம் இல்லை. அடிக்கடி சென்னை வருகிறேன். ‘காவலன்’ ரிலீசுக்கு பிறகு எனக்குப் பிடித்த கேரக்டர் கிடைத்தால், தொடர்ந்து தமிழில் நடிப்பேன்.
Sabtu, 18 September 2010
அசினுடன் நடிப்பதில் சந்தோஷம்! – விஜய்
அசினுடன் மூன்றாவது முறையாக நடிப்பதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்கிறார் நடிகர் விஜய்.
கேரளாவில் வெற்றிபெற்ற ‘பாடிகார்ட்’ என்ற மலையாள படம்,
‘காவலன்’ என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. ‘பாடிகார்ட்’ படத்தில் திலீப்-நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தார்கள். சித்திக் இயக்கியிருந்தார்.
‘காவலன்’ படத்தில், விஜய்-அசின் ஜோடியாக நடிக்கிறார்கள். ‘பாடிகார்ட்’ படத்தை இயக்கிய சித்திக்தான் காவலன் படத்தையும் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் அறிமுக சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று நடிகர் விஜய், அசின், இயக்குநர் சித்திக் மற்றும் ‘காவலன்’ படக்குழுவினர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
விஜய் கூறுகையில், “இந்த படத்தின் கதையை 2 வருடங்களுக்கு முன்பே சித்திக் என்னிடம் சொன்னார். என் வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதை. இது, காதல் படம். அதிரடியான சண்டை காட்சிகளும் இருக்கும். மனம்விட்டு சிரிக்க வைக்கிற நகைச்சுவையும் இருக்கும்.
காவல்காரன் கிடைக்கல…
இந்த படத்துக்கு, ‘டைட்டில்’ பெரிய பிரச்சினையாக இருந்தது. முதலில், ‘காவல்காரன்’ என்று பெயர் வைக்க நினைத்தோம். ஒரு சில காரணங்களால் அது முடியவில்லை. வேறு சில பெயர்களுக்குப் பிறகு கடைசியாக, காவலன் என்ற பெயர் அமைந்து இருக்கிறது.
சித்திக் இயக்கத்தில், ஏற்கனவே ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்தேன். அதில் வரும் நகைச்சுவை காட்சிகளை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. குறிப்பாக, வடிவேல் தலையில் சுத்தியல் விழுகிற காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிப்பேன்.
அசினுடன்…
அசின் இந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். ஏற்கனவே சிவகாசி, போக்கிரி ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளோம். சிறந்த நடிகை அவர். எங்கள் கூட்டணியில் மூன்றாவது படம். கடந்த இரண்டு படங்களைப்போலவே இந்த படமும் வெற்றி பெறும் எனண நம்புகிறேன்.
படப்பிடிப்பின் இடையில் அசின் இந்தி படத்துக்கு போய்விட்டார். 2 மாதங்களை வீணாக்க வேண்டாமே என்றுதான் வேலாயுதம் படத்தில் நடித்தேன்…,” என்றார்.
அசின் பேசுகையில், “தமிழ் படங்களை ஒதுக்கிவிட்டு நான் இந்திக்கு போகவில்லை. நல்ல கதைக்காக காத்திருந்தேன். காவலன் படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம். விஜய் படங்களில், இது வித்தியாசமான படமாக இருக்கும்.
மலையாளத்தில் இந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். அவர் ஸ்டைல் வேறு. என் ஸ்டைல் வேறு. என்னை, நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேசவேண்டாம்.
விஜய்யுடன் மூன்றாவது முறையாக சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் ‘காவலன்,’ மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்.”
நடிகர் வடிவேல், டைரக்டர் சித்திக், தயாரிப்பாளர் ரமேஷ்பாபு, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஆகியோரும் நிருபர்கள் மத்தியில் பேசினார்கள். மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் நன்றி கூறினார்.
காவலன் படத்தில் ஜோடி விஜய்யுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி – அசின்
“காவலன்” படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று விஜய் பேசியதாவது:-
இந்த படத்தின் கதையை இருவருடங்களுக்கு முன்பே சித்திக் என்னிடம்
சொன்னார். எனது வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதை. இது காதல் படம். ஆக்ஷன், காமெடியும் இருக்கும்.
இந்த படத்துக்கு டைட்டில் பெரிய பிரச்சினையாக இருந்தது. காவல்காரன் என்ற பெயர் வைக்க நினைத்தோம். ஒரு சில காரணங்களால் அது முடியவில்லை. இடையில் காவல் காதல் என்ற பெயரை யாரோ பரப்பிவிட்டனர். கடைசியில் காவலன் என்ற பெயர் அமைந்துள்ளது.
சித்திக்குடன் ஏற்கனவே பிரண்ட்ஸ் படத்தில் சேர்ந்தேன். அதில் வரும் காமெடியை இன்னும் மறக்க முடியவில்லை. குறிப்பாக வடிவேலு தலையில் சுத்தியல் விழும் சீனை இப்ப பார்த்தாலும் சிரிப்பேன்.
அசின் இந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். ஏற்கனவே சிவகாசி, போக்கிரி படங்களில் சேர்ந்து நடித்தோம். இது எங்கள் கூட்டணியில் மூன்றாவது படம். கடந்த இரு படங்களை போலவே இதுவும் வெற்றி பெரும்.
படப்பிடிப்பு இடையில் அசின் இந்தி படத்துக்காக போய்விட்டார். இரு மாதங்களை வீணாக்க வேண்டாம் என கருதி ”வேலாயுதம் படத்திலும் நடித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அசின் பேசியதாவது:-
தமிழ் படங்களை ஒதுக்கிவிட்டு நான் இந்திக்கு போகவில்லை. நல்ல கதைக்காக காத்திருந்தேன். “காவலன்” படத்தில் எனக்கு வலுவான கேரக்டர் விஜய் படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும். மலையாளத்தில் இந்த படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். அவர் ஸ்டைலில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் என் பாணியில் நடிப்பேன். விஜய்யுடன் மூன்றாவது முறையாக இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சி இந்த படம் எங்கள் கூட்டணியில் ஹாட்ரிக் வெற்றியாக அமையும். வடிவேல், இயக்குனர் சித்திக், தயாரிப்பாளர் ரமேஷ்பாபு, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், மக்கள் தொடர்பாளர் பி.டி. செல்வகுமார் ஆகியோரும் இதில் பங்கேற்று பேசினர்.
Jumat, 17 September 2010
இலங்கை சென்ற விவகாரம் விஜய் பட விழாவில் அசின் வெளியேறியதால் பரபரப்பு!

விஜய் நடிக்கும் புதுப் படத்தின் அறிமுக விழாவில் நடிகை அசின் இலங்கை சென்ற விவகாரம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் நடிகை அசின்
திடீரென வெளி யேறினார். ‘போக்கிரி’, ‘சிவகாசி’ படத்துக்கு பிறகு விஜய், அசின் இணைந்து நடிக்கும் ‘காவலன்’ படத்தின் அறிமுக விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று சென்னை தி.நகர் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. டைரக்டர் சித்திக், தயாரிப்பாளர் ரொமேஷ்பாபு, விஜய், அசின், வடிவேலு ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் விஜய் பேசியதாவது: இப்படத்துக்கு தலைப்பு பிரச்னை இருந்து வந்தது. இப்போது ‘காவலன்’ என்ற பெயர் முடிவாகியிருக்கிறது. இந்த தலைப்பில் பாசிடிவ் வைபரேஷன் இருக்கிறது. இதில் நடிக்கும் ஹீரோயின் அசின் திடீரென்று பாலிவுட்டுக்கு 2 மாதம் சென்றுவிட்டதால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

‘இனி ஆக்ஷன் கதைகளில் நடிக்க மாட்டீர்களா?’ என்று என்னிடம் கேட்கிறார்கள். சில படங்களில் ஆக்ஷன் மேலோங்கி இருக்கும். இது வழக்கமான பார்முலா படம் இல்லை. பார்முலா (மசாலா) படங்களில் நடிக்காமல் காதலும், ஆக்ஷனும் கலந்த படத்தில் நடிப்பேன். ‘முன்பு போல் இப்போது படங்களில் ஏன் பாடுவதில்லை?’ என்கிறார்கள். பாட்டு பாடுவது இரண்டாம்பட்சம்தான். நடிப்புக்குதான் முதல் முக்கியத்துவம். இவ்வாறு விஜய் கூறினார்.
பிறகு அசின் பேசும்போது, ‘‘சிவகாசி, போக்கிரியில் விஜய்யுடன் நடித்திருக்கிறேன். இப்படம் ஹாட்ரிக் வெற்றியாக அமையும். சுவீட், சிம்பிள்.. கிளீன் லவ் ஸ்டோரி. அதேபோல் போக்கிரி, வேல் படங்களில் வடிவேலுவுடன் நடித்தேன். இப்படம் அவருடன் நடிக்கும் ஹாட்ரிக் படமாக அமையும்’’ என்றார். அசின் பேசி முடித்ததும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்கத் தொடங்கினர். ‘இலங்கையில் இந்தி படப்பிடிப்புக்கு சென்ற விவகாரம் நடிகர் சங்கத்தில் இன்னும் தீராமல் இருக்கிறது. இப்பிரச்னையில் உங்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் கூட நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி கூறி இருக்கிறார். நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?’ என்ற கேள்விகளால் அசின் தடுமாறினார். பதில் எதுவும் அளிக்கவில்லை. நிருபர்கள் மீண்டும் அதே கேள்விகளை கேட்டதும், அவர் எழுந்து விட்டார்.
உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ‘இத்துடன் இந்த சந்திப்பு முடிந்தது’ என்று அறிவித்தனர். அசின் அவசர அவசரமாக வெளியேறினார். அசினுடன் இருந்த அவரது தந்தையிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘நடிகர் சங்கத்தின் கட்டுப்பாட்டை அசின் என்றும் மீறியதில்லை’’ என்றார்.

Selasa, 07 September 2010
ஸ்ரீதேவி தயாரிக்கும் படத்தில் நடிக்க மறுத்தேனா? அசின் கோபம்

நடிகை ஸ்ரீதேவி தயாரிக்கும் படத்தில் நடிக்க மறுத்ததாக வெளியான தகவலை நடிகை அசின் மறுத்துள்ளார். இதுபற்றி அசின் கூறியதாவது:சென்னையில் காவல் காதல் பட
ஷூட்டிங்கில் விஜய்யுடன் நடித்து வருகிறேன். இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு, ஸ்ரீதேவி & போனிகபூர் தயாரிக்கும் படத்தஞில் என்னை நடிக்க கேட்டதாகவும் நான் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்தி சினிமாவுக்கு வந்த புதிதில் மும்பையிலஙி எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அப்போது எனக்கு ஆதரவாக இருந்தது ஸ்ரீதேவியும் அவரது கணவரும்தான். அவர்கள் தங்கியிருந்த அபார்ட்மென்ட்டில்தான் நானும் குடிபோனேன். எனக்கு பல விதத்திலும் அவர்கள் உதவியாக இருந்தனர். ஒரு குடும்பம் போலவே நாங்கள் பழகினோம். அந்த அளவுக்கு போனிகபூர்,
ஸ்ரீதேவி என் மீது பாசத்துடன் இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்கள் ஒரு படத்தில் நடிக்க கேட்டால், நான் மறுக்க முடியுமா? அப்படி ஒரு வாய்ப்பே எனக்கு வரவில்லை. ஏன்தான் என்னைப் பற்றி இப்படியெல்லாம் வதந்தி கிளப்புகிறார்கள் என தெரியவில்லை.
இவ்வாறு அசின் கூறினார்.போனிகபூர் கூறும்போது, பி பாசிட்டிவ், மிஸ்டர் இந்தியா 2 ஆகிய இரண்டு படங்களுக்கான கதை டிஸ்கஷனில் இருக்கிறேன். கதை முழுமை அடைந்தால்தான் அதில் நடிப்பவர்களை தேர்வு செய்வேன். எனவே நடிப்பவர்களை பற்றி எதுவுமே முடிவு செய்யாதபோது, அசினிடம் காலஙிஷீட் கேட்டதாக சொல்வதில் உண்மையில்லைது’ என்றார்.
Senin, 30 Agustus 2010
ஷாகித்துடன் அசின்: பிரியங்கா கோபம்

விளம்பர படத்துக்காக ஷாகித்துக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தார் அசின். இதனால் பிரியங்கா சோப்ரா கோபமடைந்தார்.ஷாகித் கபூர், அசின்
பங்கேற்ற விளம்பர படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் மும்பையில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடந்தது. இந்தி, தமிழில் வெளியாகும் இந்த விளம்பரத்தில் இந்தியில் சரியாக பேசிய ஷாகித், தமிழில் பேச சிரமப்பட்டார். இதையடுத்து ஷாகித்துக்கு அசின் உச்சரிப்பை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது செட்டுக்கு வந்த ஷாகித்தின் சமீபத்திய காதலி பிரியங்கா சோப்ரா இதை பார்த்து கொதிப்படைந்தார். இதுபற்றி ஷூட்டிங்கில் இருந்தவர்கள் கூறும்போது, ‘செட்டுக்கு வந்த பிரியங்காவால் அசினை பார்த்ததும் தாங்கிகொள்ள முடியவில்லை. ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே, அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். ஷாட் முடிந்ததும் நேராக ஷாகித்துடன் சென்று பேசிக்கொண்டிருந்தார். அடுத்த ஷாட் முடியும் வரை பிரியங்கா கோபமாகவே இருந்தார்’ என்றனர்
Jumat, 20 Agustus 2010
அசின் ஷோகிங் ஹாட் போடோஸ்
Langganan:
Postingan (Atom)